வெறும் வெங்காய சாறு தானேனு நினைக்காதீங்க; இந்த '5' நன்மைகள் கிடைக்கும்!
Onion Juice Benefits : தினமும் வெங்காய சாறு குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
Onion Juice Health Benefits In Tamil
பொதுவாக வெங்காயத்தை நாம் சமையலுக்கு தான் அதிகமாக பயன்படுத்துவோம். இது உணவுக்கு சுவையை தருவது மட்டுமின்றி ,பல அருகே நன்மைகளையும் நமக்கு வழங்குகிறது. அதுமட்டுமின்றி அதன் சாற்றை தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்துவோம். ஆனால், அதை நீங்கள் எப்போதாவது குடித்திருக்கிறீர்களா? வெங்காயத்தில் அலர்ஜி எதிர்ப்பு, ஒவ்வாமை எதிர்ப்பு, புற்று நோய் எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. இது தவிர இதில் கால்சியம், மெக்னீசியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், பைட்டமின் ஏ சி மற்றும் ஈ போன்றவை போதுமான அளவில் உள்ளன. இவை தொற்று நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. இப்போது வெங்காய சாற்றை தினமும் ஒரு கிளாஸ் குடித்து வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
Onion Juice Health Benefits In Tamil
பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நல்லது:
வெங்காய சாறு பற்கள் மற்றும் ஈறுகளுக்கு மிகவும் நல்லது. இது பற்களை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், ஈறுகளில் வலி ஏற்படுவதை தடுக்கிறது.
எடையை குறைக்கும்:
வெங்காய சாறு வளர்ச்சியை மாற்றத்தை மேம்படுத்தி, எடையை எளிதாக குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் தினமும் காலை வெறும் வயிற்றில் இதை குடித்து வந்தால், உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறும் மற்றும் நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?
Onion Juice Health Benefits In Tamil
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்:
வெங்காய சாட்டில் இருக்கும் மெக்னீசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ரொம்பவே நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
வெங்காயம் சாறு குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குறிப்பாக மாறிவரும் பருவ காலங்களில் வரும் நோய் தொற்றுகளில் இருந்து உங்களை பாதுகாத்து ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
Onion Juice Health Benefits In Tamil
வீக்கம் நீங்கும்:
வெங்காய சாறு குடித்தால் உடலுக்கு ஆற்றலை வழங்கும். மேலும் இதில் இருக்கும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உடலில் இருந்து வீக்கத்தை குறைக்கும். இது தவிர இது இரத்தத்தில் கரைந்து, சரும மற்றும் கூதலுக்கு பல நன்மைகளை வழங்கும்.
இதையும் படிங்க: Onion juice: இந்த மாதிரி வெங்காய சாறு தேய்த்து குளியுங்கள்..நீங்கள் நினைத்து பார்த்து முடியாத அளவு முடி வளரும்