- Home
- Lifestyle
- Hot Water : இது மட்டும் தெரிஞ்சா வயிறு முட்ட சாப்பிட்டாலும் சீக்கிரம் செரிக்கும்! வெறும் '1' கிளாஸ் வெந்நீரில் இவ்ளோ நன்மையா?
Hot Water : இது மட்டும் தெரிஞ்சா வயிறு முட்ட சாப்பிட்டாலும் சீக்கிரம் செரிக்கும்! வெறும் '1' கிளாஸ் வெந்நீரில் இவ்ளோ நன்மையா?
வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் சூடான நீர் குடித்தால் உடலுக்குள் என்ன நடக்கும் என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.

பொதுவாகவே பலரும் எப்போ சாப்பிட்டாலும் வயிறு நிரம்ப சாப்பிடுவது வழக்கம். அதுவும் குறிப்பாக சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி உணவுகளை வயிறு முட்ட சாப்பிட்ட பிறகு அந்த உணவானது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். அந்த சமயத்தில் தூங்க சென்றால் உணவானது சரியாக செரிமானம் ஆகாது. இதனால் ஆழ்ந்த தூக்கமும் வராது. இதன் விளைவாக நாள் முழுவதும் மந்தமாக உணர்வீர்கள். இது தவிர்க்க என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்கிறீர்களா?
இதற்கு ஒரே தீர்வு ஒரு கிளாஸ் சூடான நீர்தான். ஆம் சாப்பிட்டவுடன் சுமார் 20-30 நிமிடங்கள் கழித்து வெந்நீர் குடியுங்கள். ஆனால் ஒரே நேரத்தில் அதிகமாக குடிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக சிறிது இடைவெளி விட்டு குடிக்கவும். இதனால் செரிமானம் இலகுவாக இருக்கும். அதுபோல சாப்பிட்ட உடனே தூங்க வேண்டாம். குறைந்தது 30 நிமிடங்களாவது நடக்கவும். இதன் மூலம் செரிமான மேம்படும். உடலும் ரிலாக்ஸாக இருக்கும்.
வெந்நீரின் ஏன் நல்லது? : சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடித்தால் செரிமானம் மேம்படுவவது மட்டுமல்லாமல், உடலில் வளர்ச்சிதை மாற்றங்களும் நடக்கும். மேலும் உடலானது உணவிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதும் எளிமையாக இருக்கும். இதன் விளைவாக அஜீரணம், வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வருவது தடுக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல் சூடான நீர் குடிக்கும் போது உடல் சூடு அதிகமாகி வியர்வை மூலம் நச்சுக்கள் வெளியேறிவிடுகின்றன. உடலுக்குள் இருக்கும் நச்சுக்களும் வெளியேறிவிடும். மேலும் இரத்த ஓட்டமும் சுறுசுறுப்பாக இருப்பதால் நாள் முழுவதும் நீங்கள் புத்துணர்ச்சியாக இருப்பீர்கள்.
நினைவில் கொள் :
சாப்பிட்ட பிறகு வெந்நீர் குடிக்கலாம். ஆனால் அதிக சூட்டோடு குடிக்க வேண்டாம் என்பதே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஓரளவாவது சூடான நீர் அருந்த வேண்டும். வெறும் மெடிக்கல் சூடான நீருக்கு பதிலாக அதில் சிறிதளவு புதினா மற்றும் துளசி இலைகளை போட்டு குடித்து வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.