Benefits of sitting: இனிமேல் தரையில் சம்மானங்கால் போட்டு சாப்பிட்டு பாருங்க- வேறலெவல் நன்மைகள் கிடைக்கும்
Benefits of sitting on the floor while eating: நம்முடைய தமிழ்ச் சமூகத்தில், வாழ்வியல் சார்ந்த முக்கிய நடவடிக்கைகள் அனைத்தும், தரையில் அமர்ந்து தான் முடிவு செய்யப்படும். திருமணம், ஈமைக் கிரியை, குழந்தைக்கு காது குத்துவது, பஞ்சாயத்து பேசுவது உள்ளிட்ட நிகழ்வுகளின் போது அனைவரும் தரையில் அமர்ந்து தான் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அந்த வகையில் சம்மனங்காலிட்டு தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பயனை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
நம்முடைய முன்னோர்கள் வகுத்து வைத்த சில பழக்க வழக்கங்கள் பார்ப்பதற்கு பழைய நடைமுறை என்று தோன்றினாலும், அதில் உடல்நலனுக்கு நன்மை தரும் அம்சங்களும் உள்ளன. அன்றாட வாழ்வில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நமக்கு ஆரோக்கியம் பெருகிடும் வாய்ப்புள்ளது. அதை புரிந்துகொண்டு நாம் நடந்துகொள்ளும் பட்சத்தி மருந்து, மாத்திரை, நோய் நொடிகள் எல்லாம் விலகி நிற்கும். உடல்நலன் சார்ந்த ஆரோக்கிய செயல்பாடுகள் குறித்து பேசும் போது, சம்மனங்காலிட்டு தரையில் அமர்வதில் பல்வேறு நன்மைகள் உள்ளன. இந்தியாவில் மட்டுமில்லாமல் தெற்காசியாவின் பல்வேறு நிலப்பரப்புகளில் வாழும் மக்களிடம் இந்த பழக்கம் உள்ளது. நம்முடைய தமிழ்ச் சமூகத்தில், வாழ்வியல் சார்ந்த முக்கிய நடவடிக்கைகள் அனைத்தும், தரையில் அமர்ந்து தான் முடிவு செய்யப்படும். திருமணம், ஈமைக் கிரியை, குழந்தைக்கு காது குத்துவது, பஞ்சாயத்து பேசுவது உள்ளிட்ட நிகழ்வுகளின் போது அனைவரும் தரையில் அமர்ந்து தான் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். அந்த வகையில் சம்மனங்காலிட்டு தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பயனை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
உடல் எடை கட்டுக்குள் இருக்கும்
தரையில் உட்கார்ந்து எழுவது உடற்பயிற்சி செய்வதை போன்றது. சம்மனங்காலிட்டு சாப்பிடும் போது தான் உடல் நன்றாக அசையும். இது ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதுவரை மேலே உட்கார்ந்து அல்லது நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிட்டு வருபவராக நீங்கள் இருந்தால், சிறிது நாட்கள் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதன்மூலம் உங்களுடைய உடல் எடையில் குறிப்பிடத்தக்க மாற்றம் கிடைக்கும். அதற்கு காரணம் தரையில் அமர்ந்து சாப்பிடும் போது, சாப்பாடு சாப்பிடுவது கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
உடற்பயிற்சியை போன்றது
கீழே அமர்ந்து சாப்பிடுவது உடற்பயிற்சியை போன்றது தான். யோகா செய்யும் போது கீழே அமர்ந்து தான் செய்கிறோம். அதனால் இதை ஒருவித யோகா பயிற்சி என்றும் கூறலாம். கீழே அமர்ந்து சாப்பிடும் பழக்கத்தை நாம் ஏற்படுத்திக் கொண்டால், அது முறையாக உட்காரும் பழக்கத்தை தரும். முதுகெலும்பு வலுப்பெறும், முட்டி தேய்மானம் ஆகாமல் இருக்கும் மற்றும் நல்ல மூச்சு பயிற்சி கிடைக்கும்.
அருகில் இருப்பவருக்கு மாரடைப்பு ஏற்பட்டால், முதலில் என்ன செய்ய வேண்டும்? வழிமுறைகள் இதோ..!!
செரிமானம் சீராக இருக்கும்
நாற்காலியில் நீங்கள் உட்கார்ந்து சாப்பிடும் போது, காலுக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் கட்டுப்படுத்தப்படுகிறது. பொதுவாக சாப்பிடும் போதோ அல்லது நீர் அருந்தும் போதோ, உடலுக்கான அசைவு அதிகமாக இருக்கும். அப்போது உடலுக்கு ரத்த ஓட்டம் அதிகமாக தேவைப்படுகிறது. சாப்பிடும் போது நாற்காலியில் இருந்தால், உடலுக்கு வேண்டிய ரத்த ஓட்டம் தடைபடும். இதனால் செரிமானம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது. கீழே உட்கார்ந்து சாப்பிடும் போது, ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும் அதேசமயத்தில் செரிமானமும் சீராக அமையும்.
மனதை அமைதிப்படுத்தும்
பொதுவாக நாம் முடிவு செய்யும் அனைத்து நல்லது மற்றும் கெட்ட காரியங்களை கீழே அமர்ந்து தான் முடிவு செய்வோம். அதற்கு காரணம் பல்வேறு முக்கிய காரியங்களை முடிவு செய்யும் போது, பதற்றத்தில் சில தவறான முடிவுகளை எடுக்கக்கூடும். அதை தவிர்க்கவே சம்மனங்கால் போட்டு கீழே உட்கார்ந்து காரியங்களை முடிவு செய்வார்கள். அதேபோன்று மனம் அமைதியாக இருந்தாலும், குடும்பத்தினருடன் அமர்ந்து சந்தோஷமாக இருப்போம். அப்போதும் நாம் கீழே தான் உட்காருவோம்.
இனி தலைமுடிக்கு ‘டை’ அடிக்காதீங்க..!! இதை செய்யுங்க போதும்..!!
பற்று மற்றும் பிணைப்பை அதிகப்படுத்தும்
இந்தியா உட்பட தெற்கு ஆசியாவின் பல்வேறு பகுதிகளில் கீழே உட்கார்ந்து சாப்பிடுவது தான் பெரும்பாலும் வழக்கத்தி உள்ளது. அதேபோன்று வளைகுடா நாடுகளிலும் கீழே உட்கார்ந்து தான் சாப்பிடுவார்கள். நண்பர்கள், விருந்தினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து கீழே உட்கார்ந்து சாப்பிடும் போது, நமக்கு அவர்களிடையே பிணைப்பு அதிகரிக்கிறது. இப்படி சாப்பிடும் போது ஒருவருக்கிடையில் தேவையில்லாத மனக்கசப்புகள் மற்றும் கவலைகளை மறக்கடிக்கச் செய்யும்.