இந்த கெட்டப் பழக்கங்களை பெற்றோரிடம் இருந்து தான் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள்!
குழந்தைகள் தங்கள் பெற்றோரையே முன்மாதிரியாகக் கொள்வதால், பெற்றோரின் நேர்மறை மற்றும் எதிர்மறை பழக்கங்கள் குழந்தைகளின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.
குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் பெற்றோரை முன்மாதிரியாக பார்க்கின்றனர். தங்கள் பெற்றோர்களின் செயல்கள் மற்றும் நடத்தைகளை பிரதிபலிக்கிறார்கள். பெற்றோர்களின் இந்த செயல்கள் சில நேரங்களில் நேர்மறையாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் அதே வேளையில் எதிர்மறையாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக பெற்றோரின் சில ஆரோக்கியமற்ற பழக்கங்கள் குறிப்பிடத்தக்க சவால்களை உருவாக்கலாம்.
அதே சமயம் நேர்மறையான பழக்கங்கள் குழந்தைகளின் மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை வளர்க்கும். குழந்தைகள் ஆரம்பத்திலேயே தீங்கு விளைவிக்கும் நடத்தைகளுக்கு ஆளாகும்போது, அவர்கள் அந்த பழக்கங்களை முதிர்வயதிற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம், இது அவர்களின் வெற்றி, உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே ஆரோக்கியமற்ற நடத்தைகளை அடையாளம் காண உதவ வேண்டும், ஆரோக்கியமான மாற்று வழிகளை நோக்கி அவர்களை வழிநடத்த வேண்டும்.
மோசமான சுகாதாரப் பழக்கங்கள்
குழந்தைகளுக்கு சிறு வயதில் இருக்கும்போது, சுகாதாரப் பழக்கவழக்கங்கள் பெரிய விஷயமாகத் தோன்றாது, ஆனால் தனிப்பட்ட தூய்மையைப் புறக்கணிப்பது பிற்காலத்தில் கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். பிள்ளைகளில் மணல் அல்லது சேற்றில் விளையாடிவிட்டு கைகளை கழுவத் தவறுவது போன்ற சிறிய செயல்கள் கூட பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்த செயல்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆனால் சில வேடிக்கையான பணிகளை வழங்குவதன் மூலமும் உங்கள் பிள்ளையின் சுகாதார பழக்கத்தை மேம்படுத்தலம. குழந்தைகள் அதை செய்த உடன் அவர்களுக்கு வெகுமதி அளிப்பதன் மூலமும் அல்லது பாராட்டுவதன் மூலமும் நீங்கள் சுத்தம் செய்வதை மிகவும் பொழுதுபோக்காக செய்யலாம்.
சாபம் விடுவது மற்றும் அடித்தல்
பல குழந்தைகள் தங்கள் உடன் படிக்கும் சக மாணவர்களை தாக்குகிறார்கள். இதற்கும் பெற்றோரின் செயல்கள் காரணமாக இருக்கலம. குழந்தைகள் தவறு செய்யும் போது பல பெற்றோர்கள் அவர்களை அடிப்பது மற்றும் தண்டிப்பதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.. இருப்பினும், இந்த நடைமுறை எதிர் விளைவுகளைக் கொண்டுள்ளது. தவறு செய்த ஒருவரை உடல் ரீதியாகவும் வாய்மொழியாகவும் துஷ்பிரயோகம் செய்வது சரியானது என்பதை இது குழந்தைக்கு கற்பிக்கிறது. எனவே பெற்றோர் ஒருபோதும் தங்கள் பிள்ளைகளை கடுமையான வார்த்தைகளால் திட்டவோ அல்லது அடிக்கவோ கூடாது.
மோசமான உணவு தேர்வுகள்
இளம் வயதிலேயே உங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கற்றுக்கொடுப்பது, நல்லது. அப்போது அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது ஆரோக்கியமான உணவுக்கு முன்னுரிமை கொடுப்பார்கள். ஆரோக்கியமான உணவு மனப்பான்மை நீண்டகால ஆரோக்கியத்திற்கும் இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களைத் தடுப்பதற்கும் இன்றியமையாதது. ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் செயற்கை பானங்கள் வேண்டாம் என்று கூறுவதற்குப் பதிலாக, அவற்றை சாப்பிடும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பது நல்லது.
தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பது
குழந்தைகள் தங்கள் தவறுகளை ஒப்புக்கொள்ள மறுப்பது இயல்பானது. பெரும்பாலும் அவமானம் அல்லது தண்டனை பற்றிய பயம் காரணமாக குழந்தைகள் தங்கள் செயலுக்கு பொறுப்பேற்க மறுக்கலாம். ஆனால் . கடமையின் மதிப்பைப் புரிந்துகொள்வது அவர்களின் வளர்ச்சிக்கு முக்கியமானது. குழந்தைகள் தங்கள் தவறுகளுக்கான பொறுப்பை ஏற்கக் கற்றுக்கொடுக்காதபோது, அவர்கள் பொய் சொல்லக்கற்றுக்கொள்ளலாம். அவர்கள் பெரியவர்களாகும் போது தங்கள் பொறுப்பை ஏற்க மறுப்பது போன்ற கடுமையான பிரச்சினைகளை உருவாக்கலாம். குழந்தைகள் தங்கள் தவறுகளை பின்விளைவுகளுக்கு பயப்படாமல் ஒப்புக்கொள்ளும் சூழலை உருவாக்க வேண்டியது பெற்றோரின் கடமை..
கிசுகிசு
பொதுவாக ஊடகங்கள், குடும்பம் அல்லது பள்ளியில் சாதாரண உரையாடல்களில் இருந்து வதந்திகள் பரவலாம். பிறரைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவதால் ஏற்படும் பாதிப்புகளை குழந்தைகள் அறியாமல் இருக்கலாம். இது தனிநபர்களை புண்படுத்தும் மற்றும் நட்பை சேதப்படுத்தும் சாத்தியம் உள்ளது. கண்ணியமான மற்றும் மரியாதைக்குரிய சொற்கள் மற்றும் ஆரோக்கியமான விவாதத்தின் மதிப்பை குழந்தைகளுக்கு கற்பிக்க பெற்றோரின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும்.