- Home
- Lifestyle
- Milk: பால் பிரியர்களே எச்சரிக்கை...பால் குடிப்பதற்கு முன் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்...
Milk: பால் பிரியர்களே எச்சரிக்கை...பால் குடிப்பதற்கு முன் இந்த உணவுகளை கட்டாயம் தவிர்த்து விடுங்கள்...
பால் பிரியர்களா..? நீங்கள் அப்படி என்றால் இந்த உணவுகளை பால் குடிப்பதற்கு முன்பு கட்டாயம் தவிர்த்து விடுங்கள்.

Milk
உலகம் முழுவதும் சத்தான ஆகாரங்களில் ஒன்றாகபால் எப்போதும் இருக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பால் குடிப்பதால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. உடலுக்குத் அத்தியாவசியத் தேவையான கால்சியம் சத்து பால் மற்றும் பால் பொருட்களில் அதிகம் இருக்கிறது. ஆனால்
அத்தகைய பால் குடிப்பதற்கு முன்னர் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது எனபதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
Milk
இறைச்சி:
மீன் போன்ற இறைச்சியில் அதிக புரோட்டீன் இருப்பது நம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். எனவே, பாலையும் இறைச்சியுடன் சேர்த்து சாப்பிட்டால் பல வேதி வினைகள் செரிமானம் பாதிக்கும். அதுமட்டுமின்றி, வயிற்றுவலி, சருமத்தில் வெண் புள்ளிகள் ஏற்படவும் செய்யும். எனவே இது செரிமான மண்டலத்தில் அழுத்தத்தை தந்து ஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். அத்துடன் உடல் உபாதைகளை தரும்.
Milk
எலுமிச்சை போன்ற பழங்கள்:
புளிப்பு தன்மை அதிகம் கொண்ட ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களை பால் குடிப்பதற்கு முன்பு தவிர்த்துவிட வேண்டும். அவ்வாறு குடிக்கும் போது, குடலில் அலர்ஜி போன்றவை ஏற்படும். அத்துடன் ஜீரண மண்டலம் பாதிப்படையும். இத்தகைய பழங்களை சாப்பிட்ட உடனே பால் குடித்தால் பாலில் இருக்கும் கால்சியம் பழத்தின் என்சைம்களை உறிஞ்சிவிடும். மேலும் பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்களும் உடலில் சேராது. எனவே, மேற்கூறிய பழங்கள் உட்கொண்டால் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் கழித்துதான் பால் பருக வேண்டும்.
Milk
உளுத்தம் பருப்பு:
பால் பொருட்களை உளுத்தம் பருப்பு கலந்த உணவு பொருட்களுடன் சேர்த்து சாப்பிட கூடாது. இல்லையெனில், அது செரிமானத்தை பாதிக்கும். பாலையும், உளுத்தம் பருப்பு உணவுகளையும் ஒன்றாக உட்கொள்வது நம்முடைய உடலுக்கு அவ்வளவு நல்லது அல்ல. அதனால் வயிற்று வலி, வாந்தி உருவாகும். உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.