MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • vatha kulambu recipe : ஐயர் வீட்டு கல்யாண வத்தக் குழம்பு அதே சுவையில் செய்வது எப்படி?

vatha kulambu recipe : ஐயர் வீட்டு கல்யாண வத்தக் குழம்பு அதே சுவையில் செய்வது எப்படி?

ஐயர் வீட்டு கல்யாண வத்தக்குழம்பிற்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அப்பளம், தேங்காய் துவையல் அல்லது கூட்டுடன் இதன் சுவை அலாதியானது. சைவ உணவுகளின் ராஜா என்று போற்றப்படும் வத்தக்குழம்பின் ருசிக்கு மயங்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. அசத்தலான காம்போ!

1 Min read
Author : Priya Velan
Published : Jun 26 2026, 06:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
வத்தல்களை வதக்கும் ரகசியம் :
Image Credit : Google

வத்தல்களை வதக்கும் ரகசியம் :

சுண்டக்காய் அல்லது மணத்தக்காளி வத்தலை நேரடியாகக் குழம்பில் சேர்க்கக் கூடாது. நல்லெண்ணெயில் வத்தல்கள் கருகிவிடாமல், பொன்னிறமாக உப்பி வரும் வரை தனியாக வறுத்து எடுத்து வைத்துக் கொண்டு, குழம்பு கொதித்து முடியும் தருவாயில் சேர்த்தால் அதன் மொறுமொறுப்பும் சுவையும் மாறாமல் இருக்கும். இன்னும் சிலர் இதில் மாங்காய் வத்தல், கத்தரிக்காய் வத்தல் கூட சேர்ப்பதுண்டு. இது மாங்காய் மற்றும் கத்தரிக்காய் பிரியர்களுக்கு விருப்பமானதாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பிரத்யேக வத்தக்குழம்பு பொடி :
Image Credit : Google

பிரத்யேக வத்தக்குழம்பு பொடி :

கடையில் வாங்கும் பொடிகளைத் தவிர்த்து, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மல்லி, மிளகு, சீரகம் மற்றும் காரசாரமான குண்டு மிளகாயை வெறும் வாணலியில் வறுத்து, நைசாக அரைக்காமல் சற்றே கொரகொரப்பாக அரைத்துச் சேர்ப்பதே இந்த குழம்பின் பிரதான சுவையாகும். இப்படி அரைத்து சேர்ப்பதால் குழம்பின் சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்.

Related Articles

Related image1
Cooking Methods : அசைவ உணவை சரியாத்தான் சமைக்குறீங்களா? இப்படி செய்றதுதான் கெட்ட விளைவுகளை தடுக்கும்!!
Related image2
Cooking Oils : கொலஸ்ட்ரால் பிரச்சினையே வரக்கூடாதா? அப்ப சமையலுக்கு இந்த 'ஆயில்' யூஸ் பண்ணுங்க..
36
கட்டியான புளிக்கரைசல் பக்குவம் :
Image Credit : Google

கட்டியான புளிக்கரைசல் பக்குவம் :

வத்தக் குழம்பிற்குப் பயன்படுத்தும் புளிக்கரைசல் தண்ணீராக இருக்கக் கூடாது. பழைய புளியை திக்கான கூழ் பதத்திற்குக் கரைத்துச் சேர்க்க வேண்டும். இது குழம்பிற்கு நல்ல அடர் நிறத்தையும், கல்யாண வீட்டுக்கே உரிய பளபளப்பையும் தரும்.

46
வெந்தயமும் பெருங்காயமும் :
Image Credit : Google

வெந்தயமும் பெருங்காயமும் :

தாளிப்பின் போது கட்டியாயிருக்கும் பால் பெருங்காயத்தை எண்ணெயில் பொரித்துச் சேர்ப்பதும், வெந்தயத்தை கருகவிடாமல் பொன்னிறமாக வதக்குவதும் ஐயர் வீட்டு சமையலின் மிக முக்கியமான ரகசியமாகும். அதே போல் வத்தகுழம்பு தாளிக்கும் போது வெந்தயம் சேர்த்து தாளித்தால் வீடே மணக்கும். இது இரண்டுமே குழம்பிற்கு அலாதியான நறுமணத்தை வழங்கும். பார்த்ததுமே நாவில் எச்சில் ஊறி சாப்பிட தூண்டும்.

56
அரிசி மாவு கரைசல் (தடிமனுக்கான ரகசியம்):
Image Credit : Google

அரிசி மாவு கரைசல் (தடிமனுக்கான ரகசியம்):

குழம்பு நன்றாகக் கொதித்ததும், ஒரு ஸ்பூன் பச்சரிசி மாவைச் சிறிதளவு தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து குழம்பில் ஊற்ற வேண்டும். இது குழம்பை நீர்மமாக இல்லாமல், பந்தியில் பரிமாறப்படும் கெட்டியான பக்குவத்திற்கு மாற்றும்.

66
இறுதித் தொடுப்பாக வெல்லம் :
Image Credit : Google

இறுதித் தொடுப்பாக வெல்லம் :

காரமும் புளிப்பும் சமநிலை பெற, குழம்பு இறக்குவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் ஒரு சிறிய துண்டு அளவு வெல்லம் சேர்க்க வேண்டும். இது சுவையைத் தூக்கிக் காட்டுவதோடு, கல்யாண வீட்டு வத்தக் குழம்பின் பாரம்பரிய சுவையை முழுமையாக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
சமையலறை குறிப்புகள்
பெண்கள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Money Saving Habits: இந்த 5 பழக்கங்கள் உங்களை பணக்காரர் ஆக்கும்!
Recommended image2
புகழின் உச்சம் தொடும் ராசிக்காரர்கள்... இதில் உங்கள் ராசியும் இருக்கா?
Recommended image3
Silver Bracelets: கைகளுக்கு அழகூட்டும் சில்வர் பிரேஸ்லெட் டிசைன்கள்.!
Related Stories
Recommended image1
Cooking Methods : அசைவ உணவை சரியாத்தான் சமைக்குறீங்களா? இப்படி செய்றதுதான் கெட்ட விளைவுகளை தடுக்கும்!!
Recommended image2
Cooking Oils : கொலஸ்ட்ரால் பிரச்சினையே வரக்கூடாதா? அப்ப சமையலுக்கு இந்த 'ஆயில்' யூஸ் பண்ணுங்க..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved