Anemia Solutions : இரத்த சோகையா? ஒரே வாரத்தில் இரத்தம் ஊற இந்த உணவுகளை சாப்பிடுங்கள்
இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று அனீமியா. அனீமியா என்பது இரத்த சோகையாகும். இரத்த சோகை வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. உடலில் இரத்தம் ஊறுவதற்கு சில உணவுகள் உதவுகின்றன. அந்த உணவு வகைகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.

சுவரொட்டி
ஆட்டின் மண்ணீரலில் அதிக அளவு புரதம், வைட்டமின், விட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. குறிப்பிட்ட கால இடைவெளியில் 50 கிராம் அளவில் ஆட்டு ஈரலை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலில் இரத்த அணுக்களின் உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கலாம்.
பீட்ரூட்
காய்கறிகளில் அதிக இரும்புச்சத்து உள்ள காய்தான் பீட்ரூட். இதை தினமும் உணவாகவும், ஜூஸாகவும் எடுத்துக் கொண்டு வந்தால், நம் உடலில் இரத்தம் அதிகரிக்கும். மேலும் பீட்ரூட் ஆனது சரும பொலிவிற்கும் உதவுகிறது. பீட்ரூட்டை எந்த வகையிலாவது உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மாதுளை
மாதுளையில் அதிக அளவு இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள் அடங்கியுள்ளது. விதை உள்ள நாட்டு மாதுளையை அரை மூடி அளவிற்கு தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலில் சிகப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக வழங்கலாம்.
கருப்பு திராட்சை
கருப்பு திராட்சையில் அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. உலர் கருப்பு திராட்சையை தினமும் ஒரு கைப்பிடி அளவு இரவில் ஊற வைத்து மறுநாள் அதே தண்ணீருடன் அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் இரத்த அணுக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.
பேரிச்சை
இரத்த சோகையால் ஏற்படும் சோர்வை நீக்கி உடலை சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்துக்கொள்ள பேரிச்சம்பழம் உதவுகிறது. தினமும் நான்கு முதல் ஐந்து பேரிச்சம் பழங்களை எடுத்துக் கொள்ளலாம். உடலுக்கு உடனடி எனர்ஜி கொடுக்க கூடியது மற்றும் இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மையும் உள்ளது.
அத்திப்பழம்
அத்திப்பழம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இரண்டு அத்திப்பழங்களை பால் சேர்த்து அரைத்து ஸ்மூத்தி போல குடிக்கலாம் அல்லது உலர்ந்த அத்திப்பழத்தை தேனில் ஊற வைத்து சாப்பிடுவதன் மூலம் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். ஆண்களுக்கு அத்திப்பழம் மிகவும் ஏற்றது.