MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பாப்கார்ன் வெறும் நொறுக்குத்தீனினு நினைச்சிருப்பீங்க.. அது உடல் ஆரோக்கியத்துக்கு எவ்ளோ முக்கியம் தெரியுமா? 

பாப்கார்ன் வெறும் நொறுக்குத்தீனினு நினைச்சிருப்பீங்க.. அது உடல் ஆரோக்கியத்துக்கு எவ்ளோ முக்கியம் தெரியுமா? 

Health Benefits Of Popcorn : பாப்கார்ன் உண்பதால் உடலுக்கு சில ஆரோக்கியமான நன்மைகளும் கிடைக்கின்றன. நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஹார்மோனை தூண்டும் ஆற்றல் கூட பாப்கார்னுக்கு உண்டு. 

3 Min read
Author : Kalai Selvi
Published : Sep 26 2024, 07:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Health Benefits Of Popcorn In Tamil

Health Benefits Of Popcorn In Tamil

பாப்கார்ன் என்றாலே அது ஒரு நொறுக்குத்தீனியாக தான் எல்லோர் நினைவுக்கும் வரும். ஆனால் அது மக்காச்சோளம். சோளத்தை நாம் நேரடியாக உண்ணாமல் ஏர் பாப் முறையில் வெடிக்கச் செய்து உண்கிறோம். இப்போதெல்லாம் அவை தியேட்டர், பஸ் ஸ்டாண்ட், சூப்பர் மார்க்கெட் என எல்லா இடங்களிலும் விற்கின்றன.

பல குழந்தைகளுக்கு சோளம் என்றால் தெரியாது ஆனால் பாப்கார்ன் தான் பேவரைட். பாப்கார்ன் எல்லோரும் விரும்பி சாப்பிட அறிவியல் சார்ந்த ஒரு காரணமும் உண்டு. அதில் மகிழ்ச்சியை தூண்டும் ஹார்மோன் என சொல்லப்படும் டோபமைனை தூண்டும் ஆற்றல் உண்டு. பாப்கார்ன் நம் மனநிலையை சீராக்கிவிடுகிறது. 

இதெல்லாம் பெரிய விஷயமா என்றால், ஆம் பெரிய விஷயம் தான். மனநிலை ஒருவருக்கு சீராக இருந்தாலே மன அழுத்தம் இருக்காது. இதுவே நம்மை பாதி நோய்களில் இருந்து காப்பாற்றும். உண்மையில், சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனிகளை விட பாப்கார்ன் பல வழிகளில் சிறந்ததாக உள்ளது. அதை குறித்து இந்தப் பதிவில் காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Health Benefits Of Popcorn In Tamil

Health Benefits Of Popcorn In Tamil

பாப்கார்னில் அடங்கியுள்ளவை: 

ஒரு கப் பாப்கார்னில் 30 கலோரிகள் உள்ளன. இதில் கொழுப்பு 0.5 கிராம், நார்ச்சத்தும், புரதமும் 1 கிராம் உள்ளன. கார்போஹைட்ரேட் 6 கி, உப்பு 1 மிகி, பொட்டாசியம் 70 மிகி உள்ளது. மனிதனுக்கு அன்றாடம் தேவைப்படும் வைட்டமின் பி6 10%, மாங்கனீசு 10% உள்ளது. இதில் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் உள்ளன. 

ஆரோக்கிய நன்மைகள்:

பாப்கார்ன் முழு தானியமான சோளத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில்  அதிக ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. நாம் உண்ணும் சில பழங்கள், காய்கறிகளை விட பாப்கார்னில் அதிகளவு ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து காணப்படுகிறது. 

தானியங்களில் உள்ள பசையத்தை சிலரால் ஜீரணிக்க முடியாது. அவர்கள் கூட பாப்கார்ன் உண்ணலாம். எளிதில் செரிமானம் அடையும். செலியாக் நோய் இருப்பவர்களும் பாப்கார்ன் உண்ணலாம். 

எடையை குறைக்க நினைப்பவர்கள் சாப்பிடத் தகுந்த ஸ்நாக் பாப்கார்ன். குறைந்த கலோரியுள்ள நொறுக்குத்தீனி பாப்கார்ன். 

35
Health Benefits Of Popcorn In Tamil

Health Benefits Of Popcorn In Tamil

எலும்புகளின் ஆரோக்கியம், காயம் விரைந்து குணமாதல்போன்றவற்றிற்கு தேவையான மாங்கனீஸ் பாப்கார்னில் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்திற்கும் உதவும். 

பாப்கார்னில் நார்ச்சத்து அதிகமுள்ளது. ஆகவே செரிமானம் மேம்பாடு அடைய செய்யும். குடல் செயல்பாட்டையும் பாப்கார்ன் ஆதரிக்கிறது. 
 
பாப்கார்னில் காணப்படும் கரையும் நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது.

நம் உடலின் செரிமான மண்டலத்தில் முக்கியமான குடல் பாக்டீரியாவை பாப்கார்ன் ஊக்குவிக்கிறது. இதில் உள்ள ப்ரீபயாடிக் ஃபைபர் நன்மை செய்யும் குடல் பாக்டீரியாவுக்கு உணவாகிறது. 

இரத்தச் சர்க்கரை அளவை கூட பாப்கார்ன் கட்டுப்பாட்டுக்குள் வைக்கும். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன. 

பாப்கார்ன் சாதாரண நொறுக்குத்தீனி தான். ஆனால் இதில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள் கூட உள்ளன. இதில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், பைட்டோ கெமிக்கல்கள் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன. 

இதையும் படிங்க:  Chicken Popcorn : நான்-வெஜ் பிரியர்களுக்கு பிடித்த க்ரிஸ்பியான KFC பாப் கார்ன் சிக்கன் வீட்டிலேயே செய்யலாமா?

45
Health Benefits Of Popcorn In Tamil

Health Benefits Of Popcorn In Tamil

இந்த ஆரோக்கிய நன்மைகள் ஒருபுறம் என்றால் டோபமைன் சுரப்பை தூண்டுவது இன்னொருபுறம். பாப்கார்னுக்கும் நம் உடலில் சுரக்கும் மகிழ்ச்சி ஹார்மோனான டோபமைனுக்கும் ஒரு  தொடர்பு உள்ளது. நாம் ஒவ்வொரு முறை பாப்கார்ன் சாப்பிடும் போதும் மகிழ்ச்சியாக உணர்வோம் என்பது அறிவியல் ரீதியான உண்மை.

நாம் தியேட்டரில் படம் பார்க்கும்போது பார்கார்னை கொறித்திருப்போம். அதனுடைய சுவை மற்றும் வாசனை இரண்டும் நமக்கு கிளர்ச்சியை கொடுக்கும். பாப்கார்னில் உள்ள உப்பு, வெண்ணெய் அல்லது சீஸ்   டோபமைன் சுரப்பை தூண்டுகிறது. மொருமொருப்பாக பாப்கார்னை உண்பது, திருப்திகரமான உணர்வை அளித்து டோபமைனைத் தூண்டும். 

பாப்கார்னில் உள்ள சில பொருள்களும் டோபமைன் சுரப்பை அதிகரிக்கும். அதனால் நாம் அதை உண்ணும்போது மகிழ்ச்சியாக உணர்வோம். பாப்கார்னில் உள்ள ஃபைனிலெதிலமைன் (PEA) இயற்கையாக மனநிலை மேம்படுத்தும் பொருளாகும். ஏக்கம், உணர்ச்சி ரீதியான டோபமைன் சுரப்பை அதிகரிக்கும். பார்கார்னில் உள்ள டைரோசின் தான் மூளையில் டோபமைனாக மாற்றமடையும் அமினோ அமிலமாகும். மற்றொரு அமினோ அமிலமான டிரிப்டோபான் செரோடோனினாக மாற்றப்படுவதால் மகிழ்ச்சியாக உணர்கிறோம். 

55
Health Benefits Of Popcorn In Tamil

Health Benefits Of Popcorn In Tamil

எந்த மாதிரியான பாப்கார்ன் ஆரோக்கியமானது? 

வீட்டில் குக்கரில் ஏர்-பாப் முறையில் செய்யலாம். மைக்ரோவேவ் பயன்படுத்தி செய்வதும் நல்லது. ஏர்-பாப் முறையில் செய்யும் பாப்கார்ன் சிறந்தது. உப்பு குறைவாக அல்லது உப்பு சேர்க்காத பாப்கார்ன் ஆரோக்கியமானது. முழு தானியமாக இருக்கும் சோளம் அல்லது விளைந்த சோளத்தை பயன்படுத்தலாம். கூடுதல் சுவை தேவைப்பட்டால் மூலிகை பொருள்கள், காரம் சேர்க்கலாம். என்னதான் நல்ல விளைவுகளை தந்தாலும் 1 முதல் 2 கப் பாப்கார்ன் சாப்பிட்டாலே போதும். வரம்பு மீற வேண்டாம்.

இதையும் படிங்க:  Weight Loss Tips : உடல் எடையை குறைக்கும் பாப்கார்ன்: காரணம் இது தான்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Eating While Watching TV: டிவி, மொபைல் பார்த்துக்கிட்டே சாப்பிடுறீங்களா? இத படிங்க!
Recommended image2
Healthy Mutton Recipe: குறைந்த எண்ணெயில் ருசியான மட்டன் குழம்பு ரெசிபி.. ஈசியா செய்யலாம்!
Recommended image3
சாப்பாடு சாப்பிட்டதும் கேஸ் தொல்லையா? நிபுணர் சொல்லும் இந்த 4 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved