Weight Loss Tips : உடல் எடையை குறைக்கும் பாப்கார்ன்: காரணம் இது தான்!
சினிமா தியேட்டரில் படம் பார்க்கும் போது இடைவேளைகளில் வாங்கி சாப்பிடும் பாப்கார்னில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், உண்மை தான். நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள மற்றும் கலோரிகள் குறைவாக உள்ள பாப்கார்ன்களை சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.
பாப்கார்ன்
உடல் எடையை குறைப்பதில் மிக முக்கியமானதே எடையை சரியாக நிர்வகிப்பது தான். கலோரி மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், நாள் முழுவதும் செலவிட்ட கலோரிகளை, அது திரும்ப கொண்டு வந்து விடும். அதற்காக, அனைத்து விதமான நொறுக்குத் தீனிகளும் தவறானது என நம்மால் ஒதுக்கி விடவும் முடியாது. கலோரிகளை அதிகரிக்காத மற்றும் உடலுக்கு தீங்கிழைக்காத நல்ல நொறுக்குத்தீனிகளும் இருக்கிறது. உடல் எடையை குறைக்க டயட் இருப்பவர்கள் கண்ட கண்ட நொறுக்குத்தீனிகளை உண்பதற்கு பதிலாக பாப்கார்னை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பாப்கார்னில் கலோரிகளின் அளவு குறைவாக இருப்பதால், எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். மேலும், இதில் நார்ச்சத்தும் இருப்பதால், நல்ல உடல் ஆரோக்கியத்தை கொடுக்க வல்லது. பாப்கார்ன்களில் ஆற்றல் அடர்த்தி குறைவாக இருக்கும் காரணத்தால், எடை குறைப்புக்கு மிகச்சிறந்த உணவு என்று பலராலும் கூறப்படுகிறது. பாப்கார்னில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடண்ட்ஸ், சருமத்திற்கு நல்ல போஷாக்கை கொடுப்பது போலவே உடலுக்கும் கொடுக்கிறது.
Gray Hair : நரைமுடியா உங்களுக்கு? இனி கவலையே வேண்டாம்: இதைப் பயன்படுத்தி பாருங்கள்!
பாப்கார்னை உண்ணும் போது, உங்கள் தாடையும் சேர்ந்து நன்றாக இயங்குவதால் தாடை தசைகளுக்கு நல்ல பயிற்சியாக அமையும் என்று சொல்லப்படுகிறது. மேலும், நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவாகவும், இதனை உட்கொள்வதால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் கூறப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது புற்றுநோய். இந்த புற்றுநோய்க்கு காரணமான தொற்றுகளிடம் இருந்து நம்மை தற்காத்து கொள்ள மிகப்பெறிய அளவில் உதவுகிறது இந்த பாப்கார்ன்.
belly fat : தொப்பையைக் குறைக்க இந்த மேஜிக் பானத்தை குடிங்க!
பாப்கார்ன், உடல் எடையை குறைக்க உதவும் ஒரு சிறந்த நொறுக்கு தீனி என்றாலும் அதையும் அளவோடு தான் சாப்பிட வேண்டும். இதனை, உங்களின் டயட் பிளானில் சேர்ப்பதற்கு முன்பாக கவனம் தேவை. மற்ற நொறுக்குத்தீனிகளைப் போல, அதிகளவில் பாப்கார்ன் சாப்பிடுவதும் உடல் எடையை குறைக்கும் முயற்சியை சீரழித்து விடும். மற்றொன்று, அது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதும் முக்கியம். ஏனென்றால் உடல் எடையை குறைக்க நினைக்கும் ஒருவர் மால் அல்லது தியேட்டர்களில் விற்கப்படும் வெண்ணெய் உப்பு சேர்த்த பாப்கார்கன்களை எடுத்துக்கொள்வது நல்லது அல்ல. இவை இரண்டுமே உடல் எடையை அதிகரிக்கும் என்பதால், வீட்டிலேயே சிறிதளவு சோளத்தை பாப் செய்து சாப்பிடுவது நல்லது.