MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குளிர்காலத்தில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேன்‌.. இந்த '5' நோய்கள் உடனே நீங்கும்!

குளிர்காலத்தில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேன்‌.. இந்த '5' நோய்கள் உடனே நீங்கும்!

Honey Benefits In Winter : குளிர்காலத்தில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் என்னென்ன நன்மைகளை கிடைக்கும் என்பதை பற்றி இங்கு காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Dec 09 2024, 08:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Honey Health Benefits In Tamil

Honey Health Benefits In Tamil

தேன் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதில் நிறைய மருத்துவ குணங்களும் உள்ளன. அதுவும் குறிப்பாக, ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி பழங்கால வைத்தியத்திலும் தேன் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 

தேனில் வைட்டமின்கள், புரதங்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. இவை அனைத்தும் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Honey Benefits In Winter In Tamil

Honey Benefits In Winter In Tamil

இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் தேன் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லதாம். ஏனெனில், குளிர்காலத்தில் அதன் குளிர்ச்சியான ஈரப்பதம் காரணமாக நம்முடைய உடலை ஆரோக்கியமாகவும், சூடாகவும் வைத்துக்கொள்ள தேன் பெரிதும் உதவுகிறதாம்.

அந்த வகையில், குளிர் காலத்தில் தினமும் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பல நோய்கள் நீங்கும். இதுகுறித்து விரைவாக இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க: தேங்காய் எண்ணெயில் '1' ஸ்பூன் தேன் கலந்து யூஸ் பண்ணுங்க.. முக சுருக்கம் மறையும்!

35
Honey on empty stomach benefits in tamil

Honey on empty stomach benefits in tamil

குளிர்காலத்தில் தேன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

தேன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஏனெனில் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், குளிர்காலத்தில் ஒரு ஸ்பூன் தேனில் சிறிதளவு மஞ்சள் மற்றும் இஞ்சி சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால், தொற்று நோய்கள் வராமல் தடுக்கப்படும் மற்றும் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று சுகாதார நிபுணர்கள் சொல்லுகின்றன.

சளி & இருமல் குணமாகும்:

குளிர் காலத்தில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் சளி மற்றும் இருமல் குணமாகும். ஏனெனில் தேனில் ப்ரீபயாடிக் பண்புகள் உள்ளது. மேலும் சூடான நீரில் அல்லது மூலிகை தேநீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால், குளிர் காலத்தில் ஏற்படும் தொண்டை பிரச்சினை சரியாகும்.

45
Honey and immunity in tamil

Honey and immunity in tamil

இதயத்திற்கு நல்லது:

தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. எனவே குளிர்காலத்தில் தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் இதயம் எப்போதுமே ஆரோக்கியமாக இருக்கும். ஆனால், உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், நீங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அலர்ஜி பிரச்சனை நீங்கும்:

தேனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளதால், குளிர்காலத்தில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சினையை சரிசெய்ய தேன் உதவுகிறது. இதற்கு சிறிது சூடான் நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் சிறிதளவு மஞ்சள் கலந்து குடித்து வந்தால் அலர்ஜி போன்ற பல பிரச்சனைகள் நீங்கும்.

இதையும் படிங்க:  அப்ப தேன் சாப்பிட்டால் உடல் எடை குறையாதா? கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

55
Honey and energy in tamil

Honey and energy in tamil

செரிமான பிரச்சனை சரியாகும்:

குளிர்காலத்தில் ஏற்படும் செரிமான பிரச்சனையை சரிசெய்ய தினமும் 1 டீஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். இதுதவிர, வாயு மற்றும் அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.

முக்கிய குறிப்பு : உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சினைகள் இருந்தாலோ அல்லது அதற்கு மருந்து எடுத்துக் கொண்டாலோ மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Live
PAKPAK
325
SLSL
(89.4 ov) 98 & 295/8
Day 3 - Session 3
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரு மாதம் டீ, பிஸ்கட் மட்டுமே காலை உணவாக இருந்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்!
Recommended image2
Best Milk: பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால்.. எது உடலுக்கு நல்லது தெரியுமா?
Recommended image3
Shopping Mistakes: அதிகம் துணி வாங்கி குவிக்கும் பழக்கம் உள்ளவர்களா? அப்போ ஷாப்பிங்கில் நீங்கள் செய்யும் 5 தவறுகள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved