என்னங்க சொல்றீங்க..! கை தட்டுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? தெரிஞ்சா ஷாக் ஆவிங்க!!
'லாஃபிங் தெரபி' போல், 'கிளாப்பிங் தெரபி'யிலும் ஆரோக்கிய நன்மைகள் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? வாங்க தெரிஞ்சிகலாம்..
பொதுவாக ஒருவரை வாழ்த்தும்போது அல்லது நல்ல விஷயங்களைச் சொல்லும்போது கைதட்டுவது வழக்கம். மேலும் சில சமயங்களில் ஜோக்குகள் கேட்கும் போது அல்லது சொல்லும் போது கைதட்டுவது உண்டு. இப்படி கைதட்டுவதால் ஆரோக்கிய நன்மைகளும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? என்ன அதிர்ச்சி,. அதுதான் உண்மைதான்...
'லாஃபிங் தெரபி' போல், 'கிளாப்பிங் தெரபி'யும் இப்போது பிரபலமாகிவிட்டது. உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் மற்ற உடல் உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. கைகளில் உள்ள சிறு நரம்புகள் தூண்டப்பட்டால், உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது கைதட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்..
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று முடி உதிர்தல். ஆனால் கைதட்டல் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம். கைதட்டும்போது கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் கலந்து கைதட்டினால் முடி உதிர்வது கட்டுப்படும் என்பது கிளாப்பிங் தெரபியில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கருவில் உள்ள குழந்தை கைதட்டிய அதிசயம்...! தாயின் பாடலை ரசித்த உன்னதம்...!
கைதட்டல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது பருவகால நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையை அளிக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் ஞாபக சக்தியும், செறிவும் தொடர்ந்து கைதட்டுவதால் அதிகரிக்கிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மன அழுத்தம், பதட்டம் மற்றும் பயத்தில் இருந்து விடுபட கைதட்டவும். கைதட்ட ஆரம்பித்தவுடன் மூளையின் சிக்னல்கள் செல்லும். இது மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.