MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Cooling Paint: இனி ஏசி தேவையில்லை! இந்த பெயிண்ட் அடிச்சா வீடு ஜில்லுனு இருக்கும்! முழு விவரம்!

Cooling Paint: இனி ஏசி தேவையில்லை! இந்த பெயிண்ட் அடிச்சா வீடு ஜில்லுனு இருக்கும்! முழு விவரம்!

Cooling Paint: இனி ஏசி செலவு இல்லாமலேயே வீட்டைக் குளிர்ச்சியாக வைத்திருக்க ஒரு புதிய பெயிண்ட் வந்துள்ளது. இதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது வீட்டை எப்படி குளிர்ச்சியாக வைத்திருக்கிறது என்று பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 01 2026, 01:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
வீட்டை ஜில்லென மாத்தும் கூலிங் பெயிண்ட்
Image Credit : AI

வீட்டை ஜில்லென மாத்தும் கூலிங் பெயிண்ட்

கடுமையான வெயிலில் ஏசி இல்லாமல் இருப்பது கஷ்டம். ஆனால், ஏசி போட்டால் கரண்ட் பில் எகிறிவிடும். இதற்கு ஒரு தீர்வாக விஞ்ஞானிகள் இந்த கூலிங் பெயிண்ட்டை உருவாக்கியுள்ளனர். இந்த ஸ்மார்ட் பெயின்ட்டை வீட்டின் மேற்கூரை மற்றும் சுவர்களில் பூசினால், அது 97% சூரியக் கதிர்களை மீண்டும் வளிமண்டலத்திற்கே திருப்பி அனுப்பிவிடும். இதனால், சுவர்கள் வெப்பத்தை உறிஞ்சாது, வீட்டிற்குள் வெப்பநிலை குறைந்து, ஏசியின் தேவை குறையும்.

ஸ்மார்ட் கூலிங் பெயிண்ட்

இந்த ஸ்மார்ட் கூலிங் பெயிண்ட் ஒரு சிறப்பு பாலிமர் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள நுண்துளைகள் (micropores) சூரிய ஒளியை உறிஞ்சாமல், அதை மீண்டும் விண்வெளிக்கே திருப்பி அனுப்புகிறது. மேலும், வீட்டிற்குள் இருக்கும் வெப்பத்தையும் இது வெளியேற்றும். சோதனைகளின் போது, இந்த பெயிண்ட் பூசப்பட்ட மேற்கூரைகள், சாதாரண மேற்கூரைகளை விட 25 டிகிரி செல்சியஸ் வரை குளிர்ச்சியாக இருந்தது தெரியவந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
ஈரப்பதத்தை நீர்த் துளிகளாக மாற்றும் திறன்
Image Credit : Getty

ஈரப்பதத்தை நீர்த் துளிகளாக மாற்றும் திறன்

இந்த கூலிங் பெயிண்ட் காற்றில் உள்ள ஈரப்பதத்தை நீர்த் துளிகளாக மாற்றும் திறனையும் கொண்டுள்ளது. மின்சாரம் இல்லாமலேயே இந்த செயல்முறை நடக்கும். ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதை கண்டுபிடித்துள்ளனர். அங்கு நடந்த சோதனைகளில், ஒரு சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு நாளைக்கு 390 மில்லி லிட்டர் வரை தண்ணீர் சேகரிக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

எந்த கெமிக்கலும் கிடையாது

பொதுவாக சந்தையில் இருக்கும் கூலிங் பெயிண்ட்டுகள் சூரிய ஒளியைப் பிரதிபலிக்க 'டைட்டானியம் டை ஆக்சைடு' (Titanium dioxide) என்ற வேதிப்பொருளைப் பயன்படுத்துகின்றன. ஆனால், இந்த புதிய பெயிண்ட்டில் எந்தவிதமான கெமிக்கல் பிக்மென்ட்டுகளும் (Pigments) சேர்க்கப்படவில்லை; மாறாக, இதன் தனித்துவமான நானோ-பாலிமர் நுண்துளை அமைப்பே சூரிய ஒளியைச் சிதறடித்து 97% வெப்பத்தை வெளியேற்றுகிறது. இதனால் கடுமையான வெயிலிலும் இந்த பெயின்ட் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும் என்று ஆறு மாத கால சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

33
எப்போது சந்தைக்கு வரும்?
Image Credit : Getty

எப்போது சந்தைக்கு வரும்?

இந்த கூலிங் பெயிண்ட் எப்போது சந்தைக்கு வரும் என்று யோசிக்கிறீர்களா? இது இன்னும் சோதனை கட்டத்தில்தான் உள்ளது. அதிகரித்து வரும் வெப்பம், மின்சார செலவுகள் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண, இதை விரைவில் சந்தைக்கு கொண்டு வர விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக, இந்தியா போன்ற வெப்பம் அதிகம் உள்ள நாடுகளுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Phone Pocket: உஷார்..! சட்டைப் பாக்கெட்டில் போன் வைப்பவர்களே.. இந்த விஷயம் தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
Blouse Design : அட! இது கோலமா..பிளவுஸ் டிசைனா? சேலை லவ்வர்களுக்கான லேட்டஸ்ட் டிரெண்ட்
Recommended image3
White Clothes Laundry Hacks: வெள்ளை துணி மங்கவே மங்காது! புதுசு போல பளபளக்க வைக்கும் சிம்பிள் டிப்ஸ்
Related Stories
Recommended image1
Roof Cooling: ஏசி, கூலர் இல்லாமல் வீட்டை கூல் ஆக்கலாம்! இந்த மேஜிக் பெயிண்ட் அடிச்சு பாருங்க‌!
Recommended image2
Modern Wall Tile: பெயிண்ட் அடித்து அலுத்துப் போயிட்டீங்களா? உங்கள் வீட்டை மாடர்ன் அரண்மனையாக மாற்றும் லேட்டஸ்ட் டைல் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved