- Home
- Lifestyle
- ஆடி மாதத்தில் ஊற்றப்படும் அம்மன் கோவில் கூழின் விசேஷம் தெரியுமா? என்ன ஸ்பெஷல் பக்தர்களே தெரிஞ்சுக்கோங்க
ஆடி மாதத்தில் ஊற்றப்படும் அம்மன் கோவில் கூழின் விசேஷம் தெரியுமா? என்ன ஸ்பெஷல் பக்தர்களே தெரிஞ்சுக்கோங்க
Aadi Month 2022- Aadi koozh Parasatham Receipe: அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவது விசேஷமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கூழ் செய்முறை விளக்கம் பற்றி தெரிந்து கொள்வோம்.

Aadi Month 2022 :
அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், அம்மன் கோயில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுவது விசேஷமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்றைய நவீன கால கட்டத்தில் பெரும்பான்மையான விஷயங்கள் காரணம் புரியாமல் செய்து வருகிறோம். ஆனால் நமது முன்னோர்களின் ஒவ்வொரு பழக்க வழக்கத்திற்கு பின்பும் அறிவியல் உள்ளது . அந்த வகையில் ஆடி மாதத்தில் நாம் ஏன் அம்மனுக்கு கூழ் ஊற்றுகிறோம் என்பதை தெரிந்து கொள்வோம்.
Aadi Month 2022 :
அம்மை நோய் என்பது கடும் வெயில் காலமான சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்கள் முடிந்து அடுத்த பருவ காலம் தொடங்குகிற ஆடியில்தான் அதிகமாகக் காணப்படும். குறிப்பாக, ஆடி மாதத்தில் நிலவும் தட்ப வெப்ப நிலை காரணமாக, இந்த மாதத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் இருமல் போன்ற பல்வேறு உடல் உபாதைகளுக்கு வலி வகுக்கும். அதோடு இந்த காலகட்டத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குளிர்ச்சி தேவை என்பதால், இந்த நேரத்தில் கம்பு மற்றும் கேழ்வரகை பயன்படுத்தி கூழ் செய்து அருந்தினோம். ஏழை எளியோர் பசியை ஆற்றும் அரு மருந்து கூழ் ஆகும். அதோடு வேப்பிலை, மஞ்சள் நீர், வைத்து அம்மனுக்கு வழிபாடு செய்யப்படுகிறது. இதனால், ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது.
Aadi Month 2022 :
தேவையான பொருட்கள்:
ராகி மாவு – 1 கப்
தண்ணீர் – 1 லிட்டர்
உப்பு – தேவைக்கேற்ப
தயிர் – 5 டீஸ்பூன்
வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 1 பொடியாக நறுக்கியது
கொத்தமல்லி இலை – சிறிதளவு
Aadi Month 2022 :
செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு பாத்திரத்தில் ராகி அல்லது கேப்பை மாவை எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
பிறகு, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு, கரைத்து வைத்த ராகி அல்லது கேப்பை மாவை ஒன்றாக சேர்த்து கிளற ஆரம்பிக்கவும்.
Aadi Month 2022 :
ஒரு பத்து பதினைந்து நிமிடம் அப்படியே கிண்டி கொண்டே இருக்க வேண்டும். மாவு நன்கு கொதித்து வரும் நேரத்தில் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக் கொள்ளவும். வாசனை வந்ததும் அடுப்பினை அணைத்து விட வேண்டும். அவற்றை கீழே இறக்கியதும் அவற்றுடன் தயிர், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை போன்றவை சேர்க்க வேண்டும். இப்போது நீங்கள் எதிர்பார்த்த சத்தான மற்றும் சுவையான கேழ்வரகு கூழ் தயாராகிவிட்டது. இதனை குடும்பத்தினருடன் உண்டு மகிழுங்கள்.