Aadi Month 2022 Rasi Palan: ஆடி மாதத்தை ஒட்டி நிகழ்ந்த சூரியன் பெயர்ச்சி....கஜகேசரி யோகம் பெறவுள்ள 4 ராசிகள்..
Aadi Month 2022 Rasi Palan: ஜூலை 16-ம் தேதி கிரகங்களின் அரசனான சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இதனால், ஆடி மாதம் ஜூலை 17 பிறக்கிறது. எனவே, எந்தெந்த ராசிகளுக்கு என்னென்னெ பலன் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
Aadi Month 2022 Rasi Palan:
ஆடி மாதம் ராசி பலன் 2022
தமிழில் ஆடி மாதம் என்பது, கடக ராசியில் சூரியனின் சஞ்சாரம் செய்யக்கூடிய காலம் ஆகும். ஜூலை 16-ம் தேதி கிரகங்களின் அரசனான சூரியன் சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த மாற்றம் வடக்கில் இருந்து, தெற்கு நோக்கி துவங்கும். சரியாக சூரியன், ஜூலை 16ம் தேதி இரவு 10.50 மணிக்கு கடகத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். இதனால், ஆடி மாதம் ஜூலை 17 பிறக்கிறது. இதனுடன் இந்த மாதம் முழுவதும், செவ்வாய், சுக்கிரன் மாற்றமும் அடுத்த மாதம் நடக்கும். இதனால், எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.
Aadi Month 2022 Rasi Palan:
கடகம்:
கடக ராசியில் சூரியனின் சஞ்சாரம் உங்களுக்கு மிகவும் சாதகமானதான பலனைத் தரும். உங்கள் தொழிலில் சிறந்த வெற்றியைப் பெற்றிட முடியும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவி, குழந்தைகளால் வீட்டில் குதூகலம் பிறக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள்.அரசு வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வுகிடைக்கும். வேலையில முன்னேற்றம் இருக்கும்திடீர் பண வரவு இருக்கும்.
Aadi Month 2022 Rasi Palan:
மிதுனம்:
மிதுன ராசிக்கு ஆடி மாதத்தை ஒட்டி நிகழும் சூரியன் பெயர்ச்சி, பொருளாதார ரீதியாக நற்பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டில் ஆன்மீக காரியங்கள், சுப காரியங்கள் நடக்கும். இந்த நேரத்தில் அதிக லாபம் பெறலாம். இந்த ஆடி மாதம் முழுவதும் உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு எதிர்பார்ப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும்.
Aadi Month 2022 Rasi Palan:
மகரம்:
ஆடி மாதத்தை ஒட்டி நிகழும் சூரியன் பெயர்ச்சியால், உங்களுக்கு வியாபாரம் பெருகும். உத்தியோகத்தில் புதிய மாற்றம் ஏற்படலாம். பொருளாதார முன்னேற்றம் காணப்படும். தொழிலில் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளித்தரும். பணியிடத்தில் உய அதிகாரிகளின் ஆலோசனையை பெறுவீர்கள். திடீரென புதிய இடத்தில் இருந்து நல்ல செய்திகளையும், பரிசுகளையும் பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்லலாம்.
Aadi Month 2022 Rasi Palan:
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு, ஆடி மாதத்தில் சூரியன் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நாளில், நண்பர்களின் உதவியுடன் எந்த ஒரு கடினமான விஷயத்தையும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவார்கள். உங்கள் சம்பளமும் உயரக்கூடும். இந்த மாதத்தில் புதிய நண்பர்களுடன் பழக்கம் ஏற்படும். ஆரோக்கியத்தை கவனித்து கொள்ளுங்கள்.