MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • நைட் டைம்ல இந்த '8' உணவுகளை தொட்டு கூட பாக்காதீங்க; நிம்மதியா தூங்க முடியாது!!

நைட் டைம்ல இந்த '8' உணவுகளை தொட்டு கூட பாக்காதீங்க; நிம்மதியா தூங்க முடியாது!!

Worst Foods At Night : இரவு தூங்கும் முன் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன. அவை உங்களது ஆரோக்கியத்திற்கு மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். அது என்னென்ன உணவுகள் என்று இங்கு காணலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 07 2025, 08:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Sleep Better Tonight in Tamil

Sleep Better Tonight in Tamil

இரவில் புரண்டு புரண்டு படுத்தும் உங்களால் தூங்க முடியவில்லையா? ஆம் எனில், இதற்கு உங்களது உணவு பழக்கம் தான் முக்கிய காரணமாகும். உண்மையில், நீங்கள் இரவு சாப்பிடும் சில உணவுகள் உங்களது தூக்கத்தை தொந்தரவு செய்யும். அதுமட்டுமின்றி, அவை உங்களது ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே இந்த பதிவில் சில உணவுகளை பற்றி சொல்ல போகிறோம். அவை பகலில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றாலும், இரவில் அவற்றை சாப்பிட்டால் தீங்கு தான் விளைவிக்கும். அவை என்னென்ன உணவுகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Worst Foods to Avoid Eating at Night in Tamil

Worst Foods to Avoid Eating at Night in Tamil

டீ & காபி:

நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் இரவு தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் டீ அல்லது காபி  குடித்தால் உங்களது தூக்கம் பாதிக்கப்படும். ஏனெனில் அவற்றில் இருக்கும் காஃபின் உங்களது தூக்கத்தை கெடுக்கும். எனவே நீங்கள் தூங்குவதற்கு 6 மணி நேரத்திற்கு முன் இவற்றை குடிக்க வேண்டாம். வேண்டுமானால் மூலிகை டீ குடிக்கலாம்.

மசாலா உணவுகள்:

இரவு உணவில் அதிக எண்ணெய் அல்லது காரமான உணவுகள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது தூங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும். இரவில் இந்த உணவுகளை சாப்பிட்டால் அமில பிரச்சினை, நெஞ்செரிச்சல் போன்ற வயிற்று தொடர்பான பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். இதனால் உங்களது தூக்கம் களைக்கப்படும். எனவே இரவு நேரத்தில் லேசான உணவை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரை இருக்கிறார்கள்.

இதையும் படிங்க:  மறந்து கூட நைட் டைம்ல இந்த காய்கறிகளை சாப்பிடாதீங்க! காரணம் தெரியுமா..?

35
Foods to avoid before bedtime in tamil

Foods to avoid before bedtime in tamil

இனிப்புகள்:

இரவு தூங்கும் முன் இனிப்பு சாப்பிடுவதே தவிர்க்க வேண்டும். இதனால் நீங்கள் தூக்கமின்மையால் பாதிக்கப்படலாம். ஏனெனில் இனிப்பு அதிகளவு ஆற்றலை உருவாக்கும். இதனால் தூங்குவதில் சிரமம் ஏற்படும். அதுமட்டுமின்றி இதனால் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். எனவே சிறந்த தூக்கத்திற்காக இரவு தூங்குவதற்கு சுமார் 3 மணி நேரத்திற்கு முன் இனிப்பு உணவுகள் எதையும் சாப்பிட வேண்டாம்.

மதுபானம்:

மதுபானம் அருந்தினால் உடனே தூக்கம் வரும். ஆனால் ஆழ்ந்த தூக்கம் அல்ல அதாவது நீங்கள் மது அருந்திய உடனே தூங்கினாலும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு உங்களது தூக்கம் தடைப்படும். இதனால் நீங்கள் அடுத்த நாள் காலை மிகவும் சோர்வாக உணர்வீர்கள்.

இதையும் படிங்க: இரவு 9 மணிக்கு மேல் சாப்பிடும் நபரா..? உங்களுக்கு பக்கவாதம் வருவது கன்பார்ம்..!!

45
Sleep-disrupting foods in tamil

Sleep-disrupting foods in tamil

தயிர்:

தயிர் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அது பகலில் சாப்பிடுவது தான் நல்லது. இரவு நேரத்தில் தயிர் சாப்பிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மைக்கு பதிலாக தீங்கு தான் விளைவிக்கும். முக்கியமாக அதன் குளிர்ச்சி தன்மையால் சளி, வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்.

சிக்கன்: 

கோழியில் அதிகளவு புரதம் உள்ளதால், இது ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே சிக்கனை இரவில் சாப்பிடுவதே தவிர்ப்பது நல்லது. இல்லையெனில், உங்களது தூக்கம் சீர்குலைந்து விடும்.

55
Better sleep tips in tamil

Better sleep tips in tamil

கொழுப்புள்ள உணவுகள்:

இரவில் அதிக கொழுப்புள்ள உணவை சாப்பிடுவது தவிர்ப்பது நல்லது. ஏனெனில் செரிமான அமைப்பு இரவு நேரத்தில் குறைவாக செயல்படுவதால், கொழுப்புள்ள உணவை இரவு நேரத்தில் சாப்பிட்டால் செரிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் உங்கள் தூக்கம் பாதிக்கப்படும். எனவே முடிந்த அளவிற்கு கொழுப்புள்ள உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.

உலர் பழங்கள்:

உலர் பழங்களில் அதிக அளவு கார்போஹைட்ரேட் சர்க்கரை வைட்டமின்கள் தாதுக்கள் போன்றவை நிறைந்துள்ளன. எனவே அவற்றை காலையில் சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். அதுவே நீங்கள் இரவு நேரத்தில் சாப்பிட்டால், அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் உங்கள் தூக்கம் சீர்குலைந்து விடும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
329
AUSAUS
(92.4 ov)338/4
Day 3 - Session 1
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
குளிர்ந்த நீரா, வெந்நீரா? சாப்பிட்டதும் நீங்கள் செய்யும் இந்தத் தவறு செரிமானத்தைப் பாதிக்குமா?
Recommended image2
Silk Saree : பட்டுப் புடவையின் ஜரிகையில் இருந்து எவ்வளவு தங்கம் கிடைக்கும்? கணக்கு இதோ!
Recommended image3
Tips to Beat Loneliness: தனிமையா ஃபீல் பண்றீங்களா? மனச்சோர்வை விரட்ட 10 சிம்பிள் டிப்ஸ் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved