MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உங்கள் பால்கனிக்கு பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் 7 சிறந்த செடிகள்: பால்கனித் தோட்டக் குறிப்புகள்!

உங்கள் பால்கனிக்கு பட்டாம்பூச்சிகளை ஈர்க்கும் 7 சிறந்த செடிகள்: பால்கனித் தோட்டக் குறிப்புகள்!

நகர அடுக்குமாடி பால்கனியை அழகாக்க, ஒருமுறை நட்டால் பல வருடங்கள் பூக்கும் பல்லாண்டுத் தாவரங்களை வளர்க்கலாம். இவை உங்கள் சிறிய வெளியை, வண்ணத்துப் பூச்சிகள் சிறகடிக்கும் குட்டிப் பூங்காவாக மாற்றி இயற்கையை வீட்டிற்கே கொண்டு வரும்.

2 Min read
Author : Priya Velan
Published : Jun 25 2026, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
லாவண்டர் :
Image Credit : Getty

லாவண்டர் :

லாவண்டர் செடியின் இதமான நறுமணமும், அதன் ஊதா நிறப் பூக்களும் பட்டாம்பூச்சிகளுக்கு மிகவும் பிடித்தமானவை. இதன் வாசனை மனிதர்களுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் தன்மையுடையது.

பராமரிப்பு: இதற்கு அதிக சூரிய ஒளி (குறைந்தது 6 மணிநேரம்) தேவைப்படும். பால்கனியின் வெயில் படும் பகுதியில் வைப்பது சிறந்தது. மண்ணில் தண்ணீர் தேங்கக் கூடாது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
பட்டாம்பூச்சி புஷ் :
Image Credit : Getty

பட்டாம்பூச்சி புஷ் :

பெயருக்கு ஏற்றாற்போலவே இது பட்டாம்பூச்சிகளின் காந்தம் என்று அழைக்கப்படுகிறது. இதன் தேன் நிறைந்த பூக்களின் வாசனை, சுற்றியுள்ள பட்டாம்பூச்சிகளை உங்கள் பால்கனி நோக்கி சுலபமாக ஈர்க்கும்.

பராமரிப்பு: இது சற்று பெரிய புதர் போல வளரக்கூடியது என்பதால், ஓரளவு பெரிய தொட்டியில் வளர்க்க வேண்டும். அவ்வப்போது கவாத்து (Pruning) செய்வது புதிய கிளைகளையும் பூக்களையும் உருவாக்கும்.

Related Articles

Related image1
Home Decor: வீட்டை இயற்கையாக அழகுபடுத்த 5 எளிய வழிகள்: சூழல் நட்பு இல்ல அலங்கார டிப்ஸ்!
Related image2
Home Interiors: உங்கள் வீட்டின் சுவர்களை அழகாக்க 5 எளிய இன்டீரியர் டிசைன் டிப்ஸ்!
38
மில்க்வீட் :
Image Credit : Getty

மில்க்வீட் :

மோனார்க் (Monarch) வகை பட்டாம்பூச்சிகளுக்கு மில்க்வீட் செடி மிகவும் முக்கியமானது. பட்டாம்பூச்சிகள் முட்டையிட்டு, அவற்றின் புழுக்கள் (Caterpillars) வளர்வதற்கு இந்த செடியின் இலைகள் மட்டுமே முக்கிய உணவாகப் பயன்படுகின்றன.

பராமரிப்பு: இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள மண் தேவை. இலைகளைப் புழுக்கள் சாப்பிட்டாலும் கவலைப்பட வேண்டாம், அது பட்டாம்பூச்சியாக மாறுவதற்கான இயற்கை சுழற்சி மட்டுமே!

48
பர்பிள் கோன்ஃப்ளவர் :
Image Credit : Getty

பர்பிள் கோன்ஃப்ளவர் :

வட்ட வடிவமான, பெரிய இதழ்களைக் கொண்ட இந்த மலர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இதன் மையப்பகுதியில் அதிகளவு தேன் இருப்பதால் பட்டாம்பூச்சிகள் நீண்ட நேரம் இதன் மேல் அமர்ந்து தேன் குடிக்க விரும்பும்.

பராமரிப்பு: வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தண்ணீர் ஊற்றினாலே போதுமானது.

58
சால்வியா :
Image Credit : Getty

சால்வியா :

நீண்ட குச்சிகள் போன்ற அமைப்பில் பூக்கும் சால்வியா மலர்கள், பால்கனித் தொட்டிகளில் வளர்க்க ஏதுவானவை. இதன் பிரகாசமான சிவப்பு, ஊதா மற்றும் நீல நிறங்கள் பட்டாம்பூச்சிகளை வெகு தொலைவில் இருந்தே கவர்ந்திழுக்கும்.

பராமரிப்பு: பூக்கள் பூத்து முடிந்தவுடன் அந்தப் பகுதியை வெட்டிவிட்டால், மீண்டும் புதிய மொட்டுகள் வைக்கும்.

68
மேரிகோல்ட் :
Image Credit : Getty

மேரிகோல்ட் :

நம்ம ஊரில் சுலபமாகக் கிடைக்கக்கூடிய சாமந்திப் பூக்கள், பட்டாம்பூச்சிகளுக்குப் பிடித்தமான மற்றொரு தாவரமாகும். இதன் அடர்ந்த மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்கள் பால்கனிக்கு கூடுதல் அழகைத் தரும். மேலும், இது தேவையில்லாத பூச்சிகளைத் தோட்டத்திற்குள் வரவிடாமல் தடுக்கும்.

பராமரிப்பு: தினமும் மிதமான தண்ணீர் மற்றும் நல்ல சூரிய ஒளி இருந்தால் போதும், மிக வேகமாக வளரும்.

78
செடம் :
Image Credit : Getty

செடம் :

குறைந்த பராமரிப்பே தேவைப்படும் இந்தச் சதைப்பற்றுள்ள (Succulent) தாவரம், கோடையின் இறுதியிலும் இலையுதிர் காலத்திலும் அழகாகப் பூக்கும். மற்ற பூக்கள் குறையும் காலத்தில், பட்டாம்பூச்சிகளுக்கு இது சிறந்த உணவாதாரமாக மாறும்.

பராமரிப்பு: இதற்கு மிகக் குறைந்த தண்ணீரே தேவை. பால்கனியில் அதிக வெயில் படும் இடங்களில் தாராளமாக வைக்கலாம்.

88
பட்டாம்பூச்சிகளை ஈர்க்க சில கூடுதல் டிப்ஸ் :
Image Credit : Getty

பட்டாம்பூச்சிகளை ஈர்க்க சில கூடுதல் டிப்ஸ் :

சாயனங்களைத் தவிர்க்கவும்: பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்களை உங்கள் பால்கனித் தோட்டத்தில் பயன்படுத்த வேண்டாம். இது பட்டாம்பூச்சிகளையும் அவற்றின் புழுக்களையும் அழித்துவிடும். இயற்கை உரங்களான மண்புழு உரம், தொழு உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

தண்ணீர் வசதி: ஒரு சிறிய தட்டில் அல்லது அகல் விளக்கில் தண்ணீர் ஊற்றி, அதில் சில கூழாங்கற்களைப் போட்டு வைக்கவும். பட்டாம்பூச்சிகள் கற்களின் மீது அமர்ந்து தண்ணீர் குடிக்க இது உதவும்.

வெயில் படும் இடம்: பட்டாம்பூச்சிகள் குளிர் இரத்தம் கொண்டவை (Cold-blooded), எனவே அவை சிறகடிக்க சூரிய வெப்பம் தேவை. உங்கள் பால்கனியில் வெயில் படும் திசையில் இந்தச் செடிகளை வரிசைப்படுத்துங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
வீட்டு அலங்காரம்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
இந்த 5 பழங்களை மட்டும் அலட்சியப்படுத்தீடாதீங்க.. ஜென்மத்துக்கும் கிட்னி பிரச்சினையே வராது
Recommended image2
Gold Earrings: ரூ.5000-க்குள் அசத்தலான தங்கக் கம்மல் டிசைன்கள்.!
Recommended image3
Cooking Tips: இனி சமையல் எண்ணெய் செலவு பாதியாக குறையும்.! இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 டிப்ஸ்!
Related Stories
Recommended image1
Home Decor: வீட்டை இயற்கையாக அழகுபடுத்த 5 எளிய வழிகள்: சூழல் நட்பு இல்ல அலங்கார டிப்ஸ்!
Recommended image2
Home Interiors: உங்கள் வீட்டின் சுவர்களை அழகாக்க 5 எளிய இன்டீரியர் டிசைன் டிப்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved