இரவு தூக்கம் வராமல் அவதிப்படுறீங்களா? இந்த '6' உணவுகள் சாப்பிடுங்க.. நல்லா தூக்கம் வரும்!
Best Foods For Sleep : தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இரவு தூங்கும் முன் சில உணவுகளை சாப்பிட்டு வந்தால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
good sleep tips in tamil
நீங்கள் இரவு படுத்தவுடனே தூங்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அதற்கு முதலில் உங்களது உணவு முறையில்தான் மாற்றம் செய்ய வேண்டும். ஏனென்றால், இன்றைய காலகட்டத்தில் பலரும் தூக்கமின்மை பிரச்சனைகள் அவதிப்படுகிறார்கள். இதற்கு மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்கள் தான். தூக்கமின்மையால் சர்க்கரை நோய், எடை அதிகரிப்பு, இதய பிரச்சினை, உயரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற உடல்நல பிரச்சனைகள் வரும்.
Best foods for sleep in tamil
மேலும் ஒரு நபர் சுமார் 7-8 மணி நேரம் நிம்மதியாக தூங்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், தற்போது இது சாத்தியமில்லை. காரணம் பலர் தூங்குவதற்கு முன் டிவி , மொபைல் போன் லேப்டாப் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்ற விஷயங்களில் அதிக நேரம் செலவழிகிறார்கள். இதனால் இரவு அவர்களது தூக்கம் பாதிக்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் இரவு தூங்கும் முன் சில உணவுகளை நீங்கள் சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். அது என்னென்ன உணவுகள் என்று இப்போது இந்த பதிவில் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: இரவு நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் '7' பானங்கள்; இதுல '1' மட்டும் குடிச்சா போதும்!
Foods to eat for good sleep in tamil
டார்க் சாக்லேட்:
டார் சாக்லேடை கோபமாக இருக்கும் போது மனதை அமைதிப்படுத்த இதை பலர் சாப்பிடுகிறார்கள். ஆனால் நீங்கள் இரவு தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் இரவு தூங்கும் முன் டார்க் சாக்லேட் சாப்பிட்டால் நிம்மதியாக தூங்கலாம்.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் அதிகமாகவே உள்ளது. இது தசைகள் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி வாழைப்பழம் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இரவு தூங்கும் முன் வாழைப்பழம் சாப்பிடுங்கள் ஆழ்ந்த தூக்கம் வரும்.
Foods that help you sleep in tamil
ஹெர்பல் டீ:
இரவு டீ அல்லது காபி குடித்தால் அதில் இருக்கும் காஃபின் தூக்கத்தை பாதிக்கும். அதற்கு பதிலாக நீங்கள் தூங்கும் முன் ஹெர்பல் டீ குடித்தால் மன பதற்றம் குறையும் மற்றும் நல்ல தூக்கம் வரும்.
வறுத்த பூசணி விதைகள்:
பூசணி விதையில் அமினோ அமிலம் இருக்கிறது. இது உங்களது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் துத்தநாகம், தாமிரம், செலினியம் இரவு நன்றாக தூங்க உதவுகிறது.
இதையும் படிங்க: நைட் டைம்ல இந்த '8' உணவுகளை தொட்டு கூட பாக்காதீங்க; நிம்மதியா தூங்க முடியாது!!
Foods that improve sleep quality in tamil
ஊற வைத்த சியா விதைகள்:
சியா விதையில் அமினோ அமிலங்கள் இருக்கிறது. இது உங்களது மனநிலையை மேம்படுத்தி இரவு நன்றாக தூங்க உதவுகிறது.
நட்ஸ்கள்:
பாதாம்,வால்நட் போன்ற நட்ஸ்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் வைட்டமின்கள் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் அதிகமாகவே உள்ளது. இதுதவிர அவற்றில் மெக்னீசியம் அதிகமாகவே உள்ளன. ஒருவரது உடலில் மெக்னீசியம் குறைவாக இருந்தால், அவருக்கு தூக்கமின்மை பிரச்சனை வரும். எனவே இரவு தூங்கும் முன் நட் கல் சாப்பிட்டால் ஆழமான தூக்கம் வரும். இவை தவிர சூடான பால், ஓட்ஸ், பார்லி போன்றவற்றையும் சாப்பிடலாம்.