MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இரவு நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் '7' பானங்கள்; இதுல '1' மட்டும் குடிச்சா போதும்!

இரவு நிம்மதியான தூக்கத்திற்கு உதவும் '7' பானங்கள்; இதுல '1' மட்டும் குடிச்சா போதும்!

Beverage For Good Sleep : இரவில் நீங்கள் நிம்மதியாக தூங்க விரும்பினால், உங்கள் தூக்கத்திற்கு உதவும் சில வானங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 11 2025, 07:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Drinks to Help You Sleep at Night in tamil

Drinks to Help You Sleep at Night in tamil

நல்ல தூக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். நீங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டுமானால், போதுமான அளவு தூங்க வேண்டும். ஏனெனில், நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் பல உடல்நல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். நிபுணர்களின் கூற்றுப்படி ஒரு நபர் ஆரோக்கியமாக இருக்க தினமும் 7-8 மணி நேரம் கண்டிப்பாக தூங்க வேண்டும். ஆனால் நம்மில் பலருக்கு இரவில் ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை. இதனால் அவர்கள் பல வகையான நோய்களை தினமும் சந்திக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், இரவல் நன்றாக தூங்கு உதவும் சில பானங்கள் பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஏதேனும் மூன்றை நீங்கள் தினமும் இரவு நிம்மதியான தூக்கம் உங்களுக்கு கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Sleeping

Sleeping

சூடான பால்:

இரவில் நீங்கள் நிம்மதியாக தூங்க விரும்பினால், சூடான பால் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இருக்கும் அமினோ அமிலம் உங்களது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். முக்கியமாக சூடான பால் குடிப்பதும் மூலம் மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற தூக்கம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள். இது தவிர, தொண்டை மற்றும் உடலில் மற்ற பகுதிகளுக்கும் சூடான பால் நல்லது.

கெமோமில் டீ:

இரவு தூங்க செல்வதற்கு முன்பாக கெமோமில் டீ குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இது வீக்கத்தை குறைக்கும் மற்றும் சருமத்திற்கு நல்லது. முக்கியமாக இந்த டீ தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பெரிது உதவுகிறது. எனவே நீங்கள் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இரவில் தூங்கும் முன் இந்த டீ குடியுங்கள்.

35
sleep

sleep

புதினா டீ:

புதினா டீயில் காஃபின் மற்றும் கலோரிகள் இல்லை என்பதால், இது உங்களது உடல் மற்றும் மன அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகின்றது. மேலும் இந்த டீ தசைகளுக்கும் நல்லது. இந்த டீயில் இருக்கும் ஆன்ட்டி-பாக்டரியல் பண்புகள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.

மஞ்சள் பால்:

மஞ்சள் பாலில் குர்குமின் உள்ளது.  இது உங்களது மனசோர்வு, கவலை போன்ற பிரச்சினைகளை நீக்க உதவுகிறது முக்கியமாக இரவு தூங்கும் முன் இந்த பால் குடித்தால் நன்றாக தூங்குவீர்கள்.

45
sleep

sleep

பாதாம் பால்:

பாதாம் பாலில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. எனவே நீங்கள் தினமும் இரவு தூங்கும் முன் இந்த பால் குடித்து வந்தால் உங்கள் தூக்கத்தின் தரம் மேம்படும். இது தவிர உடல் சோர்வும் நீங்கும்.

அஸ்வகந்தா டீ:

அஸ்வகந்தா டீ உங்களது தூக்கமின்மை பிரச்சனைக்கு நல்லது ஏனெனில் இதில் இருக்கும் பண்புகள் மன அழுத்த ஹார்மோனை குறைக்க உதவுகிறது. எனவே ல், நீங்கள் தூக்கமின்மை பிரச்சனைகள் அவதிப்படுகிறீர்கள் என்றால் தினமும் 1 முன் ஒரு கப் இந்த டீ குடியுங்கள்.

இதையும் படிங்க:  இந்த சிம்பிள் டிப்ஸ் மட்டும் போதும்; நைட் படுத்த உடனே நல்ல தூக்கம் வரும் - வாங்க பார்க்கலாம்!

55
sleep

sleep

வாழைப்பழம் ஸ்மூத்தி:

வாழைப்பழத்தை ஆரோக்கியமான சிற்றுண்டியாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதற்கு வாழைப்பழத்தில் ஸ்மூத்தி செய்து தூங்கும் முன் குடியுங்கள். இதனால் இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். ஏனெனில் வாழைப்பழத்தில் பொட்டாசியம் மெக்னீசியம் அதிகமாக உள்ளது.

இதையும் படிங்க:  ஒருநாள் தலையணை இல்லாமல் தூங்கி பாருங்க; எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Washing Machine : ரூ.15,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5 வாஷிங் மெஷின்கள்! எந்த மாடலில் என்னென்ன வசதிகள்?
Recommended image2
காலையில் வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்க வேண்டும்? நிபுணர் தரும் எச்சரிக்கை!
Recommended image3
தினமும் காலையில் இட்லி வித் ஃபில்டர் காபியா? நிபுணர் சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved