- Home
- Lifestyle
- Relationship Advice: திருமணத்தை தவிர்க்கும் பார்ட்னர்.! இது போலி காதலா? டைம்பாஸ் காதலை அடையாளம் காணும் 5 உளவியல் ரகசியங்கள்!
Relationship Advice: திருமணத்தை தவிர்க்கும் பார்ட்னர்.! இது போலி காதலா? டைம்பாஸ் காதலை அடையாளம் காணும் 5 உளவியல் ரகசியங்கள்!
Relationship Advice: திருமணப் பேச்சை எடுத்தாலே உங்கள் பார்ட்னர் பேச்சை மாற்றுகிறாரா? உளவியலாளர்களின் கூற்றுப்படி, இந்த 5 அறிகுறிகளை வைத்து அவர் உண்மையிலேயே திருமணம் செய்ய விரும்புகிறாரா அல்லது டைம்பாஸ் செய்கிறாரா என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

குடும்பம் மற்றும் எதிர்காலத் திட்டங்களில் உங்களுக்கு இடமுண்டா?
திருமணத்தில் தீவிரமாக இருக்கும் ஒருவர், தனது எதிர்காலத் திட்டங்களை வகுக்கும்போது உங்களை அதிலிருந்து தனிமைப்படுத்த மாட்டார். 'நான் சாதனைகள் செய்வேன்' என்று பேசுவதற்குப் பதிலாக, 'நாம் சேர்ந்து வாழ்வை அமைப்போம்' என்று 'நாம்' என்ற வார்த்தைக்கு முன்னுரிமை அளிப்பார். இந்தச் சொல் மாற்றம் வெறும் பேச்சல்ல; அது உங்களை முழுமையாகத் தன் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டதன் வெளிப்பாடு. ஆரோக்கியமான, வலுவான உறவுக்கு இதுவே மிக முக்கியமான அறிகுறியாகும்.
சண்டைகளுக்குப் பிறகு சமாதானம் செய்கிறாரா அல்லது விலகிச் செல்கிறாரா?
உறவில் ஈகோவை விட சமாதானத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர், முதிர்ச்சியடைந்த மனநிலையைக் கொண்டவர். சண்டைக்குப் பிறகு யார் மீது தவறு இருந்தாலும், கோபத்தை வளர்க்காமல் அவரே முன்வந்து பேசிச் சரிசெய்வது, அவர் இந்த உறவையும் உங்களையும் எவ்வளவு மதிதிக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
சொந்த பெருமையை விட உறவின் நிம்மதியே முக்கியம் என நினைக்கும் இந்த விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, அவர் ஒரு ஆரோக்கியமான திருமண வாழ்க்கைக்கு முற்றிலும் தயாராக இருக்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.
உங்கள் கனவுகளுக்கும் கெரியருக்கும் உங்கள் பார்ட்னர் ஆதரவளிக்கிறாரா?
உங்கள் வளர்ச்சியையும் சாதனைகளையும் கண்டு பொறாமைப்படாமல், மனதாரக் கொண்டாடும் பார்ட்னர் அமைவது ஒரு வரம். நீங்கள் சவால்களை எதிர்கொள்ளும்போது உறுதியான ஆதரவாக நிற்பதும், உங்கள் இலக்குகளை அடையத் தன் சொந்த வெற்றியாக நினைத்து ஊக்கப்படுத்துவதும் ஒரு உண்மையான வாழ்க்கைத் துணையின் சிறந்த அடையாளமாகும்.
வாழ்வின் ஏற்ற இறக்கங்கள், இன்ப துன்பங்கள் என அனைத்துச் சூழ்நிலைகளிலும் தளர்வில்லாத துணையாக உங்களுடன் பயணிப்பவரே, காலத்திற்கும் நிலைத்து நிற்கும் அழகான திருமண வாழ்க்கைக்குப் பொருத்தமானவர்.
பணம் மற்றும் பொறுப்புகள் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறாரா?
எதிர்கால சேமிப்பு, முதலீடுகள் மற்றும் செலவுகள் குறித்து உங்களிடம் வெளிப்படையாகப் பேசும் பார்ட்னர், வெறும் கனவுகளில் வாழாமல் நிஜ வாழ்க்கையை நோக்கிச் சிந்திக்கிறார். நிதி மேலாண்மையைப் பகிர்ந்துகொள்வது, அவர் உங்கள் இருவரின் எதிர்காலத்தைப் பாதுகாப்பாகக் கட்டியெழுப்ப விரும்புகிறார் என்பதன் சான்றாகும்.
பணப் புழக்கம் மற்றும் பொறுப்புகளை மறைக்காமல் கலந்தாலோசிக்கும் இந்த முதிர்ச்சி, அவர் திருமணத்திற்குப் பிறகான குடும்ப வாழ்க்கையின் சுமையை ஏற்றுக்கொண்டு, உங்களுடன் இணைந்து பயணிக்க முழுமையாகத் தயாராகிவிட்டார் என்பதைக் காட்டுகிறது.
சமூகத்தில் உங்களை எப்படி அறிமுகப்படுத்துகிறார்? மறைக்கிறாரா அல்லது முன்னுரிமை தருகிறாரா?
தங்கள் உறவை உலகிற்கு மறைக்காமல், தனது நண்பர்களிடமும் சமூக ஊடகங்களிலும் உங்களை பெருமையுடன் அறிமுகப்படுத்தும் பார்ட்னர், உங்களை முற்றிலும் தன் வாழ்வின் அங்கமாக ஏற்றுக்கொண்டவர். இந்த வெளிப்படைத்தன்மை, அவர் இந்த உறவில் கொண்டிருக்கும் ஆழமான நம்பிக்கையையும் உங்களின் மீதுள்ள அளவற்ற மரியாதையையும் காட்டுகிறது.
உங்களை வெளிப்படையாகக் கொண்டாடும் இந்த மனப்பான்மை, அவர் எவ்வித தயக்கமுமின்றி உறவை திருமணத்தை நோக்கிய அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராக இருக்கிறார் என்பதற்கான மிகத் தெளிவான அடையாளமாகும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

