- Home
- Lifestyle
- Parenting Tips : ஏங்க!! உங்க குழந்தைக்கு 5 வயசு ஆகுதா? கண்டிப்பா இதை சொல்லிக் கொடுங்க!!
Parenting Tips : ஏங்க!! உங்க குழந்தைக்கு 5 வயசு ஆகுதா? கண்டிப்பா இதை சொல்லிக் கொடுங்க!!
குழந்தைகளின் 5 வயதில் அவர்களுக்கு பெற்றோர் கற்றுக் கொடுக்க வேண்டிய 5 விஷயங்களை இங்கு காணலாம்.

குழந்தை வளர்ப்பு என்பது கண்ணாடி மாதிரி கவனமாக கையாள வேண்டிய விஷயமாகும் இந்த விஷயத்தில் கூடுதல் பொறுப்பு உடையவர்கள் பெற்றோர்தான். பெற்றோரிடமிருந்து தான் குழந்தைகள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வார்கள்.
அதற்காக பெற்றோர் 100 விஷயங்களை கற்றுக் கொடுத்தாலும், குழந்தைகள் அத்தனையும் கற்பார்களா? என்றால் இல்லை என்பதுதான் பதில். குழந்தைகளின் 5 வயதில் அவர்களாகவே கற்றுக் கொள்ளும் விஷயங்கள் தான் காலத்திற்கும் அவர்களுக்கு உதவும். அதற்கு பெற்றோர் எவ்வாறு வழிகாட்ட வேண்டும் என இங்கு காண்போம்.
குழந்தைகளுக்கு அவர்களின் 5 வயதில் சமூக-உணர்ச்சி திறன்களை வளர்க்க உதவ வேண்டும். மற்றவர்களுடன் பழகுதல், பச்சாதாபம் காட்டுதல் உள்ளிட்டவைகளை அவர்களின் 5 வயதுக்குள்ளாக சொல்லிக் கொடுக்க வேண்டும். மனதில் உள்ள கேள்விகள் கேட்பது, தேவைகளை சொல்வது ஆகியவற்றையும் பழக்குதல் அவசியம்.
எண்கள், வண்ணங்களை அறிதல், தனிமனித சுகாதாரம் போன்றவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும். சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்செயல்பாடுகள், காகிதத்தை வெட்டுதல் மாதிரியான அடிப்படை திறன்களை பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு அன்பு, பாசம், கண்டிப்பு எல்லாவற்றையும் ஒரே அளவில் காட்ட வேண்டும். அப்போதுதா அவர்களின் புரிதல் மேம்படும். இல்லையென்றால் அவநம்பிக்கை, விரக்தி, கோபம் போன்ற உணர்வுகளுடன் வளர்வார்கள். சிறுவயதில் பெற்றோரின் அன்பும் அக்கறையும் சரிசமமாக கிடைக்கப்பெறும் குழந்தைகள் வளரும் போது படிப்பிலும் விளையாட்டிலும் சுட்டியாக திகழ்கிறார்கள்.
அவர்களாகவே ஆடை அணிதல் குறித்து சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய சின்ன சின்ன பணிகளை அவர்களையே செய்ய வைக்க வேண்டும். சிறிய பிரச்சினைகளை அவர்களே தீர்க்க அனுமதித்தால் அவர்களுக்கு முடிவெடுக்கும் திறன் மேம்படும்.
பிறர் மீது அக்கறையை வளர்க்க வழிகாட்டுங்கள். உதவுதல், பகிர்தல் போன்ற பண்புகளை சொல்லிக் கொடுக்க வேண்டும். மற்றவர்களிடம் அனுதாபம் காட்டுதல், நண்பர்களை உருவாக்குதல் போன்றவை மனிதர்களின் அடிப்படை குணங்கள்.
குழந்தைகளின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துங்கள். இதனால் அவர்களும் அதே பண்புடன் வளர்வார்கள். குழு நடவடிக்கைகளில் பங்கேற்பதை ஊக்குவியுங்கள். மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதை ஊக்குவியுங்கள்.
அவர்களை அருகில் உள்ள உறவினர் அல்லது பக்கத்து வீட்டுக்காரர் வீட்டிற்கு தனியாக அனுப்பி பழகுங்கள். ஆனால் மற்றவர்களுடைய தீய தொடுகைகள், நடவடிக்கைகளை பிரித்தறிய கற்றுக் கொடுங்கள். குழந்தைகளை தொட்டு பேசுதல், அதை பெற்றோரிடம் மறைத்தல் தவறு என சொல்லிக் கொடுங்கள். குழந்தைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம்.