Dragon Fruit: வாரம் ஒருமுறை டிராகன் பழம் சாப்பிட்டால்..உடலில் இவ்வளவு ஆரோக்கிய மாற்றம் வருமா..?
Dragon Fruit: டிராகன் பழம் பற்றி இதுவரை நீங்கள் கேள்விப்பட்டது உண்டா..? இதன் தோற்றம் டிராகன் போல் இருப்பதால் இதற்கு டிராகன் பழம் என்று பெயரிடப்பட்டது. இது தலை முதல் கால் வரை ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை தன்னுள் கொண்டுள்ளது.
Dragon Fruit
தாய்லாந்து மற்றும் வியட்நாம் மக்கள் இந்த பழத்தை அதிகமாக விரும்பு சாப்பிடுகின்றனர். டிராகன் பழத்திற்கு இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் கமலம் என்ற பெயர் சொல்லி அழைப்பார்கள். டிராகன் பழம் பார்ப்பதற்கு முட்கள் நிறைந்தது போன்ற பழமாகும். இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்தது. இது பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்தில் பச்சை மஞ்சள் நிற முட்களைக் கொண் காணப்படும். வெள்ளை சதைகளில் கருப்பு நிற விதைகள் கொண்டு காணப்படக் கூடியது.
Dragon Fruit
இதன் தோற்றம் பார்ப்பதற்கு டிராகன் போல் இருப்பதால் இதற்கு டிராகன் பழம் என்று பெயரிடப்பட்டது. டிராகன் பழத்தில் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளனஇந்த பழம் இரத்த சோகை நோயில் இருந்து இரத்த சர்க்கரை நோய் வரை குணப்படுத்த உதவுகிறது. இன்னும் கூடுதல் நன்மைகளையும், ஊட்டச்சத்துக்களையும் வழங்கும் டிராகன் பழத்தை பற்றி நாம் இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
Dragon Fruit
உடல் எடையை குறைக்க உதவும்:
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு டிராகன் பழம் சிறந்த ஒன்றாக உள்ளது. இது உங்கள் பசியை போக்கி வயிறு நிரம்பிய முழுமையான உணர்வை தருகிறது. ஏனெனில் இது கலோரிகள் இல்லாத பழம். இதன் விதைகள் பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது. இது உங்க எடை இழப்புக்கு மட்டுமின்றி, தொப்பையை குறைக்கவும் உதவுகிறது.
Dragon Fruit
சருமத்தை பாதுகாக்கும்:
டிராகன் பழம் தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் விட்டமின் ஈ உங்கள் அழகையும், சருமத்தையும் பாதுகாக்கிறது. டிராகன் பழத்தை அடிக்கடி சாப்பிடுவது முகப்பருவைக் குறைக்கவும், வறண்ட சருமத்திற்கு குளிர்ச்சி தரவும், சரும கோடுகள் மற்றும் சுருக்கங்களை போக்கவும் உதவி செய்கிறது.
Dragon Fruit
ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்:
உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்யும், இரும்புச் சத்து, மெக்னீசியம் நிறைவாக உள்ளது. அதுமட்டுமின்று, இதில் நோய் எதிர்ப்பு சக்தியை, அதிகரிக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளது. எனவே, நீங்கள் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க டிராகன் பழம் உதவுகிறது. அதோடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது.
செரிமானக் கோளாறுகளை சரி செய்யும்:
டிராகன் பழம் உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்னை, செரிமானக் கோளாறு உள்ளவர்களுக்கு கைக்கொடுக்கும். இதயத்திற்கும் சிறந்த ஆற்றலை அளிக்கிறது. மேலும், வயிறு, குடல் மற்றும் உணவுக்குழாய் பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது.
Dragon Fruit
அதுமட்டுமின்று, டிராகன் பழம் உங்கள் புற்றுநோய் செல்களை தடுக்கும் ஆற்றலும் இதில் உள்ளது. உங்கள் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.இந்த பழம் தற்போது எல்லா கடைகளிலும் கிடைக்கக் கூடிய பழமாக உள்ளது. எனவே இதனை நீங்கள் வாங்கி பயன்பெறலாம்.