வேகமாக கொழுப்பை குறைக்கும் 5 டேஸ்டி & ஹெல்த்தியான உணவுகள்!
உடல் எடையை மிகவும் வேகமாக கொழுப்பை குறைக்க கூடிய ஐந்து ஹெல்தியான மற்றும் டேஸ்டியான உணவுகள் பற்றி இன்ஸ்டா பிரபலமான மருத்துவர் சந்தோஷ் ஜாகோப் பகிர்ந்து கொண்டுள்ள தகவலை இந்த பதிவில் பார்ப்போம்.
Fat Low Foods
உங்கள் உடலில் 18% சதவீதத்தை விட மிகவும் குறையான கொழுப்பை மெயின்டெயின் செய்ய நினைத்தால் கண்டிப்பாக இந்த 5 சத்தான மற்றும் சுவையான உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
Chicken Leg
சிக்கன் லெக்:
கொழுப்பை குறைக்க விரும்பும் பலர், காய்கறிகள் மற்றும் பழங்களை தான் அதிகம் சாப்பிட வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அசைவம் உணவு எடுத்து கொள்வதன் மூலமாகவும் உங்கள் எடையை குறைக்க முடியும். சிக்கென லெக் பீஸை, குறையான என்னை ஊற்றி கிரில் செய்து சாப்பிடலாம். அதே போல் சிக்கன் குழம்பில் வைத்து சாப்பிடுவது கொழுப்பை குறைக்க வழி செய்யும். அசைவ விரும்பிகளுக்கு, இது மிகவும் பிடித்த உணவாக அமையும்.
1200 வருட பழமையான நெல்லையப்பர் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்!
Vegetable Rice
சாதத்துடன் - காய் கறிகள்:
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், சாதம் சாப்பிட கூடாது என ஒரு கருத்து பரவலாக உள்ளது. ஆனால் சாதம் உங்கள் உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாக கூட, எடையை குறைக்க முடியும். கால் பங்கு வெள்ளை சாதம் எடுத்து கொண்டு, அதில் முக்கால் வாசி காய்கறிகள் இருக்கும் படி பார்த்து கொள்ளுங்கள்.
பொடிப்பொடியாக வெட்டிய கேரட், கேப்சிகம், முட்டை கோஸ் போன்ற பல காய்கறிகளை கடாயில் சிறிதளவு என்னை, உப்பு, மற்றும் மிளகு பொடி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தால் அதில் ஸ்பைசியான சில மசாலா பொருட்களை கூட சேர்த்து கொள்ளலாம். இந்த காய்கறிகள் கலவையுடன் சாதத்தை மிக்ஸ் செய்து சாப்பிடும் போது, அதிக அளவில் உணவு எடுத்து கொண்ட பீல் கிடைக்கும். கொழுப்பை கூடுவது தவிர்க்கப்படும்.
Potato And Brinjal
உருளைக்கிழங்கு - கத்தரிக்காய்:
மிகவும் எளிதாக கிடைக்க கூடிய காய்கறிகளில் ஒன்று தான் உருளை கிழங்கு மற்றும் கத்தரிக்காய். இவை இரண்டிலும் கேலரிஸ் மற்றும் ஃபேட் மிகவும் குறைவு. இவர் இரண்டையும் குட்டி குட்டியாக நறுக்கி மசாலா போட்டு வதக்கி அப்படியே சாப்பிடுவது உங்களுக்கு எனர்ஜியை கொடுக்கும். விருப்படுபவர்கள் இத்துடன் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி பொரித்து சாப்பிடும் போது... மினி டிபன் சாப்பிட்ட ஃபீல் உங்களுக்கு கிடைக்கும்.
தொங்கும் தொப்பை கரைய, எடை வேகமாக குறைய.. தினமும் காலை இதுல '1' சாப்பிடுங்க!
Pineapple and Grapes
ஐஸ்கிரீம்:
உடல் எடையை குறைபவர்கள் ஐஸ் கிரீம் பக்கமாவே போக கூடாது என சொல்வதுண்டு. ஆனால சுகர் ஃப்ரீ ஐஸ் கிரீமில், சாதாரண ஐஸ் கிரீமுடன் ஒப்பிடும் போது கேலோரிஸ் மற்றும் ஃபேட் கம்மி தான். சுகர் ஃப்ரீ ஐஸ் கிரீமை கொஞ்சம் ஹெல்தியாக மாற்ற, அத்துடன் பைனாப்பிள் மற்றும் கிராப்ஸ் பொடியாக நறுக்கி போட்டு, சாப்பிட்டு பாருங்கள்.. உண்மையாகவே டேஸ்ட் அல்டிமேட்டாக இருக்கும். பைனாப்பிள் மற்றும் திராச்சை போன்றவை, எடை குறைப்புக்கு சிறந்த பழங்களாகும்.
Indian Goat:
இந்தியன் கோட்:
ஆட்டு கரியில் அதிக கொழுப்பு இருக்கும் என்பதால், பலருக்கு பிடித்தால் கூட சாப்புடுவதில் தயக்கம் காட்டுவார்கள். மற்ற ஆடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியன் கோட்டில் அதிக புரோட்டீன் உள்ளது. அதே போல் கலோரிஸ் மிகவும் குறைவு.
வாரத்தில் '2' நாட்கள் பின்னோக்கி நடந்தால் கூட போதும்.. இத்தனை நன்மைகளா?