MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Mosquitoes: கெமிக்கல் ஸ்ப்ரே இனி தேவையில்லை.. கொசுக்களை தெறித்து ஓடவைக்கும் 4 செடிகள் இதோ!

Mosquitoes: கெமிக்கல் ஸ்ப்ரே இனி தேவையில்லை.. கொசுக்களை தெறித்து ஓடவைக்கும் 4 செடிகள் இதோ!

4 Best Indoor Plants to Repel Mosquitoes: மழைக்காலம் ஆனாலும் சரி, வெயில் காலம் சரி இந்த கொசுத்தொல்லை தாங்க முடியாது. வீட்டில் சில செடிகள் இருந்தால் கொசுக்கள் வராது. அவை எந்தெந்த செடிகள்? என்று பார்ப்போம்.. 

2 Min read
Author : Rayar A
Published : May 09 2026, 02:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கொசுக்களை விரட்ட டிப்ஸ்
Image Credit : AI

கொசுக்களை விரட்ட டிப்ஸ்

வெயில் காலம் வந்தாலே கொசுத் தொல்லை அதிகமாகிவிடும். இந்த கொசுக்கள் வீட்டுக்குள் நுழைந்து நம் தூக்கத்தைக் கெடுப்பது மட்டுமல்லாமல், டெங்கு, மலேரியா போன்ற கடுமையான நோய்களையும் பரப்புகின்றன. பலர் கொசுக்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள கடைகளில் விற்கும் Mosquito Repellents-ஐ பயன்படுத்துகிறார்கள். ஆனால், அவற்றில் உள்ள கெமிக்கல்கள் நமது உடலுக்கு நல்லதல்ல. சில சமயம், அவற்றை பயன்படுத்தினாலும் கொசுக்கள் போகாது. ஆனால், உங்கள் பால்கனியில் சில செடிகளை வளர்ப்பதன் மூலம் கொசுக்களை நிரந்தரமாக விரட்டலாம். அவை என்னென்ன செடிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
துளசி
Image Credit : Instagram

துளசி

உங்கள் வீட்டில் துளசிச் செடி இருந்தால், கொசுக்கள் வீட்டிற்குள் நுழைய யோசிக்கும். துளசி இலைகளின் வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது. கொசுக்கள் நுழையும் கதவு அல்லது ஜன்னல் அருகே துளசிச் செடியை வைத்தால், கொசுக்கள் வருவது குறையும். அதுமட்டுமல்ல, வீட்டில் துளசிச் செடி இருந்தால் பாசிட்டிவ் எனர்ஜியும் அதிகரிக்கும்.

புதினா

புதினாவின் நறுமண வாசனை கொசுக்களைத் தூரத்தில் வைக்க உதவுகிறது. உங்கள் வீட்டில் ஒரு புதினா செடியை வளர்க்கலாம். இல்லை என்றால், புதினா இலைகளை பேஸ்ட் செய்து ஜன்னல் அருகே வைக்கலாம். இந்த வாசனைக்கு கொசுக்கள் வீட்டிற்குள் நுழையாது.

Related Articles

Related image1
உங்களை மட்டும் கொசுக்கள் குறிவைக்கிறதா? ரத்த வகை முதல் ஆடை வரை.. ஆச்சரியமான காரணங்கள்!
Related image2
மழைக்காலத்தில் சமையலறையை மொய்க்கும் கொசுக்கள், ஈக்கள்... வராமல் தடுக்க சூப்பர் டிப்ஸ்!!
34
சாமந்திப் பூ
Image Credit : stockphoto

சாமந்திப் பூ

சாமந்திப் பூவின் வாசனையை கொசுக்களால் தாங்க முடியாது. உங்கள் வீட்டு பிரதான வாசல் மற்றும் ஜன்னல்கள் அருகே சாமந்தி செடிகளை நட்டு வைத்தால் போதும். இந்த வாசனைக்கு கொசுக்கள் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்காது.

கற்பூரம், வேப்பிலை

அறையில் கற்பூரத்தை ஏற்றி வைத்தால், அதன் வாசனைக்கு கொசுக்கள் தூரமாக ஓடிவிடும். இது நன்றாக வேலை செய்யும். வேப்ப இலைகளைப் புகை போட்டாலோ அல்லது வேப்ப எண்ணெயைப் பயன்படுத்தினாலோ கொசுக்கள் குறையும். வேப்பிலையின் வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது.

44
வீட்டில் தண்ணீர் தேங்கவே கூடாது
Image Credit : Freepik

வீட்டில் தண்ணீர் தேங்கவே கூடாது

கொசுக்கள் வீட்டிற்குள் வரக்கூடாது என்றால் வீட்டில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியமாகும். கூலர்கள், பூந்தொட்டிகளில் கூட தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். சாயங்கால நேரத்தில்தான் கொசுக்கள் அதிகமாக வீட்டிற்குள் நுழையும். எனவே, ஜன்னல்கள் மற்றும் கதவுகளுக்கு மெஷ் போட்டுக் கொள்வது நல்லது. குப்பைகள், ஈரமான இடங்கள், மற்றும் மூலைகளில் தூசி அதிகமாக இருந்தால் கொசுக்கள் பெருகும். எனவே, வீட்டை தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mutton Biryani : ஹோட்டல் ஸ்டைல் மட்டன் பிரியாணி செய்ய 7 சூப்பர் டிப்ஸ்.! 5 நிமிடத்தில் மணக்க மணக்க ரெடியாகும் மட்டன்.!
Recommended image2
Parenting Tips : வீட்ல வாயாடியாக இருக்கும் குழந்தை ஸ்கூல் போனா சைலண்ட் ஆகுதா? இது கூச்சம் இல்ல, ஒருவித மனப் பிரச்சனை!
Recommended image3
LED Bulb: சுவிட்சை ஆஃப் செய்த பிறகும் LED பல்பு மினுமினுக்கிறதா? கரண்ட் பில் டபுலாகும் ஜாக்கிரதை.!
Related Stories
Recommended image1
உங்களை மட்டும் கொசுக்கள் குறிவைக்கிறதா? ரத்த வகை முதல் ஆடை வரை.. ஆச்சரியமான காரணங்கள்!
Recommended image2
மழைக்காலத்தில் சமையலறையை மொய்க்கும் கொசுக்கள், ஈக்கள்... வராமல் தடுக்க சூப்பர் டிப்ஸ்!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved