Post Mortem: உடற்கூறு ஆய்வு - பிரேதம் பொய் சொல்லாது..? என்னென்ன தகவல்கள் கிடைக்கும்..
Post Mortem: இறந்துவிட்ட ஒருவரிடம் செய்யப்படும், உடற்கூறு ஆய்வில் என்னென்ன தகவல்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.
post mortem
இறந்துவிட்ட ஒருவரின் இறப்புக்கான சரியான காரணம் பற்றி அறிவதற்குச் செய்யப்படும் மருத்துவ பரிசோதனையை `பிரேதப் பரிசோதனை’ என்று அழைக்கிறோம். பொதுவாக மனித உடல் சார்ந்த குற்றங்கள் அனைத்திற்கும் பிரேத பரிசோதனை நடத்தப்படும். பிரேதப் பரிசோதனை செய்யப்படுவது மருத்துவப் பண்டிதத்துவங்களுக்கெல்லாம் தலையாயது ஆகும்.
post mortem
ஏதேனும், ஆபத்து ஏற்பட்டு உயிர் பிழைத்த நபரிடம், உங்களை யார் தாக்கினார்..? என்ன காரணம்..? நடந்தது என்ன..? போன்ற முழு விவரங்களை வாங்கி விட முடியும். ஆனால், இறந்து போன ஒருவரிடம்
மேற்சொன்ன எதையும் எதிர்பார்க்க முடியாது. எனவே, அந்தப் பிரதேத்திற்கு நடந்த என்ன..? என்ன காரணத்திற்காக உயிர் பிரிந்தது..? நடந்தது விபத்தா..? தற்கொலையா..? இல்லை கொலையா..? போன்ற நடந்த அனைத்தையும் பிரேதப் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது.
post mortem
உடற்கூறு ஆய்வில் என்னென்ன தகவல்கள் கிடைக்கும்:
1. பரிசோதனை செய்யும் மருத்துவர், முதலில் உடல் காயம் மற்றும் உடலின் வெளிப்புற தோற்றத்தை ஆய்வு செய்வார். பின்னர், கீறல், நகக்காயம், வெட்டுக்காயம், காயத்தின் தன்மை, ஆழம் போன்றவை ஏதேனும் உள்ளதா..? என்பதை ஆய்வு செய்வார்.
2. ஒருவேளை உயிரிழந்த நபர் ஆயுதத்தால் தாக்கப்பட்டிருந்தால் அந்த தாக்கம் உடலின் எந்த உள்ளுறுப்பை பாதித்தது? மரணம் எதனால் ஏற்பட்டது? மரணமடைந்த நேரம் என்ன..? என இவை அனைத்தையும் மருத்துவர் ஆய்வு செய்வார்.
post mortem
3. பின்னர், கொலையா..? விபத்தா..? இல்லை உண்மையிலேயே தற்கொலைதானா? என்பதை ஆராய்வார்.
4. இறந்த உடலை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்கும் போதே, கொலைக்கான விசாரணை அறிக்கையை மருத்துவரிடம் காவல் துறையினர் அளித்திருக்க வேண்டும். மருத்துவர் அந்த அறிக்கையை வைத்து, போலீசார் தந்த அறிக்கை, இறந்த உடலுடன் ஒத்துள்ளதா என்பதை சரிபார்த்து உறுதிபடுத்துவார்.
post mortem
5. இறுதியாக, மருத்துவர் இந்த பரிசோதனை பற்றி நீதிமன்றத்தில் நேரடியாகவோ (பெரும்பாலும்) அல்லது பரிசோதனை அறிக்கையாகவோ தாக்கல் செய்வார். குறிப்பாக காவல்துறையின் விசாரணை, பிரேதப் பரிசோதனை முடிவு பற்றி ஒப்பிட்டு விரிவாக விளக்கம் அளிப்பார்.
இதனால், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கிறது. தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கிறது. எனவே, பிரேதப் பரிசோதனை செய்வது, நவீன மருத்துவத்துறையின் மிக முக்கிய பொறுப்பு ஆகும்.