MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃபேஷன்
  • Blouse Design : அட! இது கோலமா..பிளவுஸ் டிசைனா? சேலை லவ்வர்களுக்கான லேட்டஸ்ட் டிரெண்ட்

Blouse Design : அட! இது கோலமா..பிளவுஸ் டிசைனா? சேலை லவ்வர்களுக்கான லேட்டஸ்ட் டிரெண்ட்

Blouse Design : வாசலில் போடும் சிக்கு கோலம் இப்போது பிளவுஸ் டிசைனாகவும் டிரெண்டாகி வருகிறது. பாரம்பரிய கோலத்தின் அழகை நவீன எம்பிராய்டரி டிசைனுடன் இணைக்கும் இந்த பிளவுஸ், சேலை விரும்பும் பெண்களுக்கு புதுமையான தேர்வாக அமைகிறது.

3 Min read
Author : Vishnupriya
Published : Oct 04 2026, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
இது கோலமா..பிளவுஸ் டிசைனா?
Image Credit : Pinterest

இது கோலமா..பிளவுஸ் டிசைனா?

சேலை அணியும்போது சேலையின் நிறத்துக்கு மட்டுமல்ல, அதற்கு ஏற்ற பிளவுஸ் டிசைனுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வழக்கமான பூ டிசைன், எம்பிராய்டரி, ஸ்டோன் ஒர்க் என பார்த்துப் பார்த்து பழகிய டிசைன்களுக்கு மத்தியில், இப்போது சற்று வித்தியாசமான ஒரு டிரெண்ட் பெண்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அதுதான் நம் வீட்டு வாசலில் தினமும் போடும் பாரம்பரிய சிக்கு கோலத்தின் அழகிய வளைவுகளை அப்படியே பிளவுஸ் டிசைனாக மாற்றும் ஃபேஷன். வாசலில் கோலமாக தொடங்கிய அந்த அழகு இப்போது உங்கள் ஆடையிலும் மிளிரட்டும்.

கோலத்தின் ஒவ்வொரு கோடும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து உருவாக்கும் அந்த நுணுக்கமான வடிவங்கள், பிளவுஸில் பயன்படுத்தப்படும்போது பார்ப்பதற்கே மிகவும் அழகாகவும் தனித்துவமாகவும் இருக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
சேலை லவ்வர்களுக்கான லேட்டஸ்ட் டிரெண்ட்
Image Credit : Pinterest

சேலை லவ்வர்களுக்கான லேட்டஸ்ட் டிரெண்ட்

குறிப்பாக பட்டு சேலை, காஞ்சிபுரம் சேலை, சில்க் காட்டன் மற்றும் பாரம்பரிய சேலைகளுடன் இந்த டிசைன் அணிந்தால், பாரம்பரியமும் நவீன ஃபேஷனும் கலந்த ஒரு ஸ்டைலான தோற்றம் கிடைக்கும்.

எல்லோரும் அணிவது போல இல்லாமல், எனக்கென்று ஒரு தனி டிசைன் வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு இந்த சிக்கு கோலம் பிளவுஸ் ஒரு சூப்பர் தேர்வாக இருக்கலாம். எளிமையான கோடு வேலை முதல் அடர்த்தியான சிக்கு கோலம் வரை, உங்கள் விருப்பத்துக்கும் சேலையின் தன்மைக்கும் ஏற்ப பல விதங்களில் இதை வடிவமைக்க முடியும்.

இந்த சிக்கு கோலம் பிளவுஸ் டிசைனின் முக்கிய சிறப்பே அதன் தொடர்ச்சியான வளைவு கோடுகள்தான். சிக்கு கோலத்தில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து அழகாக நகரும் கோடுகளைப் போலவே, பிளவுஸின் பின்புறம், கைப்பகுதி, கழுத்து வடிவம் அல்லது முன்புறத்தில் நுணுக்கமான எம்பிராய்டரி அல்லது பிரிண்ட் வேலைப்பாடுகள் அமைக்கப்படுகின்றன.

38
எந்த இடத்தில் சிக்கு கோலம் டிசைன் அழகாக இருக்கும்?
Image Credit : Pinterest

எந்த இடத்தில் சிக்கு கோலம் டிசைன் அழகாக இருக்கும்?

கோலத்தின் அழகை அப்படியே வைத்துக்கொண்டு, சரியான இடத்தில் டிசைன் செய்தால் பிளவுஸ் மிகவும் நேர்த்தியாகவும் ஸ்டைலாகவும் காட்சியளிக்கும்.

முதுகுப்பகுதியில் பெரிய சிக்கு கோலம்

பிளவுஸின் பின்புறத்தை முழுமையாக மறைக்காமல், நடுப்பகுதியில் ஒரு பெரிய சிக்கு கோலத்தை எம்பிராய்டரி செய்வது பாரம்பரியமான அதே நேரத்தில் கண்களை கவரும் தோற்றத்தை கொடுக்கும்.

48
கை ஓரத்தில் சிறிய கோல டிசைன்
Image Credit : Pinterest

கை ஓரத்தில் சிறிய கோல டிசைன்

கைகளின் ஓரத்தில் சிறிய சிக்கு கோல வடிவங்களை வரிசையாக அமைத்தால், அதிக வேலைப்பாடு இல்லாமலேயே பிளவுசுக்கு ஒரு அழகான பாரம்பரிய டச் கிடைக்கும்.

ஸ்லீவ்ஸ் முழுவதும் தொடர்ச்சியான சிக்கு கோலம்

சற்று வித்தியாசமாக முயற்சி செய்ய விரும்புபவர்கள், ஸ்லீவ்ஸ் முழுவதும் தொடர்ச்சியாக செல்லும் சிக்கு கோல டிசைனை தேர்வு செய்யலாம். குறிப்பாக ஒற்றை நிற பிளவுஸில் இது அழகாக எடுப்பாக தெரியும்

58
முன்புறத்தில் மெல்லிய கோடு வேலை
Image Credit : Pinterest

முன்புறத்தில் மெல்லிய கோடு வேலை

பிளவுஸின் முன்புறத்தில் மிகப்பெரிய டிசைனுக்குப் பதிலாக, மெல்லிய சிக்கு கோலம் போன்ற தொடர்ச்சியான கோடு வேலை செய்தால் எளிமையான, எலிகண்ட் லுக் கிடைக்கும்.

கழுத்தைச் சுற்றி கோல வடிவ எம்பிராய்டரி

கழுத்து வடிவத்தைச் சுற்றி சிக்கு கோலத்தின் வளைவு கோடுகளை அமைத்தால், நெக்லைன் தனியாக ஹைலைட் ஆகும். எளிமையான பிளவுசுக்கு இது மிகவும் அழகான தேர்வாக இருக்கும்.

68
முதுகில் சிறிய வட்ட வடிவ கோலம்
Image Credit : Pinterest

முதுகில் சிறிய வட்ட வடிவ கோலம்

பெரிய டிசைன் வேண்டாம் என்பவர்களுக்கு முதுகின் நடுப்பகுதியில் சிறிய வட்ட வடிவ சிக்கு கோலத்தை மட்டும் அமைப்பது சிறந்த தேர்வு. குறைந்த வேலைப்பாட்டிலேயே பிளவுஸுக்கு தனித்துவமான தோற்றத்தை கொடுக்கலாம்.

78
எந்த சேலைக்கு பொருத்தமாக இருக்கும்?
Image Credit : Pinterest

எந்த சேலைக்கு பொருத்தமாக இருக்கும்?

கோலம் என்றாலே பாரம்பரியத்தின் அழகு நினைவுக்கு வரும். அதனால், சிக்கு கோலம் டிசைன் கொண்ட பிளவுஸ் பாரம்பரிய தோற்றம் கொண்ட சேலைகளுடன் மிகவும் இயல்பாகவும் அழகாகவும் பொருந்துகிறது.

குறிப்பாக காஞ்சிபுரம் பட்டு சேலை அணியும்போது, அதற்கு ஏற்ற நிறத்தில் சிக்கு கோலம் எம்பிராய்டரி செய்யப்பட்ட பிளவுஸை தேர்வு செய்தால், பாரம்பரிய தோற்றத்துடன் ஒரு புதுமையான ஃபேஷன் டச் கிடைக்கும்.

அதேபோல், செட்டிநாடு காட்டன், கைத்தறி சேலை, காட்டன் சில்க், சுங்குடி மற்றும் ஆர்கானிக் காட்டன் போன்ற எளிமையான மற்றும் இயற்கையான தோற்றம் கொண்ட சேலைகளுடனும் இந்த டிசைன் அழகாக இருக்கும்.

88
சிக்கு கோலம் டிசைன் பிளவுஸ் இருக்கிறதா?
Image Credit : Pinterest

சிக்கு கோலம் டிசைன் பிளவுஸ் இருக்கிறதா?

குறிப்பாக அதிகப்படியான ஜிகினா, ஸ்டோன் அல்லது ஹெவி எம்பிராய்டரி இல்லாத சேலைகளில் சிக்கு கோலம் பிளவுஸ் தனியாக கவனம் ஈர்க்கும். சாதாரணமாக இருக்கும் ஒரு சேலையைக்கூட, வித்தியாசமான பிளவுஸ் டிசைன் மூலம் ஸ்டைலான தோற்றத்திற்கு மாற்றலாம்.

மேலும், சேலையில் ஏற்கனவே அதிகமான பார்டர் அல்லது வேலைப்பாடுகள் இருந்தால், பிளவுஸில் பெரிய சிக்கு கோலத்தை தவிர்த்து கழுத்து, கை ஓரம் அல்லது முதுகில் மட்டும் சிறிய கோல டிசைனை தேர்வு செய்வது மிகவும் நேர்த்தியாக இருக்கும்

சேலை கட்டுவதையே விரும்பும் பெண்களே, உங்கள் கலெக்ஷனில் சிக்கு கோலம் டிசைன் பிளவுஸ் இருக்கிறதா? இல்லையென்றால் அடுத்த சேலைக்கு இந்த டிசைனை முயற்சி செய்து பார்க்கலாமே.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thick Eyebrows: அடர்த்தியான கருமையான புருவம் வேண்டுமா? இதோ 6 டிப்ஸ்
Recommended image2
Global Baby Names 2026: குழந்தைகளுக்கான 30 மாடர்ன் Cute பெயர்கள்.!
Recommended image3
Saravana Stores: மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் 10 பொருட்கள்.! மூட்டை மூட்டையாய் அள்ளிக்கிட்டு போகலாம் வாங்க.!
Related Stories
Recommended image1
Fashion Tips: புது டிரஸ் வேண்டாம்..இருக்கும் Dress-க்கே புது Look கொடுக்க இந்த Tricks-ஐ Try பண்ணுங்க!
Recommended image2
Dress Washing Tips: டிரஸ் கலர் சீக்கிரம் மங்குதா? துவைக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved