சோபிதாவை விடுங்க.. நிச்சயதார்த்த புடவையில் காதல் கதையை சொன்ன சமந்தா.. மீண்டும் வைரலாகும் போட்டோஸ்..
நாக சைதன்யா - சோபிதாவின் நிச்சயதார்த்தம் தலைப்பு செய்திகளில் இடம்பிடித்துள்ள நிலையில், தற்போது சமந்தாவின் நிச்சயதார்த்த புடவை போட்டோஸ் இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது.
Naga Chaitanya-Sobhita Dhulipala
நாகார்ஜுனாவின் மகனும் பிரபல நடிகருமான நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலகி வரும் நிலையில் நாக சைதன்யா, அவரின் முன்னாள் மனைவி சமந்தா, வருங்கால மனைவி சோபிதா ஆகியோர் குறித்து பல்வேறு தகவல் வெளியான வண்ணம் உள்ளன.
அந்த வகையில் தற்போது சமந்தாவின் நிச்சயதார்த்த புடவை இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. சமந்தா தனது நிச்சயதார்த்த விழாவில் வெள்ளை நிற டிசைனர் புடவையை அணிந்திருந்தார். சமந்தாவின் புடவையின் சிறப்பம்சமாக, கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட எம்ப்ராய்டரி டிசைன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
Samantha Saree
சமந்தாவின் வெள்ளைப் புடவையின் பார்டரில் நாக சைதன்யா சமந்தாவின் காதல் கதை வடிவமைக்கப்பட்டது. அந்த வகையில் சமந்தாவும் சைதன்யாவும் முதன்முறையாக முன்னணி ஜோடியாக இணைந்து நடித்த யே மாயா சேசவே படத்தின் முக்கியமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
Samantha Saree
இருவரும் பைக்கில் சென்றது, சைதன்யாவின் தம்பி அகில் அக்கினேனியின் நிச்சயதார்த்தத்தில் எடுக்கப்பட்ட குடும்பப் படம், என பல படங்கள் அந்த புடவையில் இடம்பெற்றுந்தன. சமந்தா மற்றும் சைதன்யாவின் வாழ்க்கையில் ஒரு சிறப்பு தருணமும் புடவையில் சிக்கலாக எம்ப்ராய்டரி செய்யப்பட்டது.
எனினும் சமந்தாவும் சைதன்யாவும் 2021 இல் பிரிந்தனர். இருவரும் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் விவாகரத்து செய்வதாக அறிவித்தனர்.
Naga Chaitanya Sobhita
சமந்தாவை விவாகரத்து செய்த அடுத்த ஆண்டு சொபிதா உடன் நாக சைதன்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நட்பு காதலாக மாற இருவரும் சில மாதங்கள் டேட்டிங் செய்து வந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் நேற்று நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஹைதராபாத்தில் ஒரு நெருக்கமான விழாவில் நிச்சயதார்த்தம் செய்தனர். இவர்கள் திருமண தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்ப்படுகிறது.