இனி தட்கல் டிக்கெட் எடுப்பது ரொம்ப ஈஸி; ரயில்வேயின் இந்த புதிய'ஆப்' ஒன்று போதும்!
இந்தியாயில் ரயில் தட்கல் டிக்கெட் எடுப்பது குதிரை கொம்பாக உள்ள நிலையில், ரயில்வே அறிமுகம் செய்த புதிய செயலி மூலம் தட்கல் டிக்கெட் எளிதாக எடுக்கலாம்.

இனி தட்கல் டிக்கெட் எடுப்பது ரொம்ப ஈஸி; ரயில்வேயின் இந்த புதிய'ஆப்' ஒன்று போதும்!
இந்தியாவில் தினமும் பல லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் ரயில்களில் இப்போதெல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெறுவது மிகவும் கடினமாகிவிட்டது. ஆனால் அவசர காலத்தில் ரயில்வேயின் தட்கல் திட்டம் கைகொடுக்கிறது. நாம் செல்ல வேண்டிய ரயிலுக்கு ஒரு நாளுக்கு முன்னதாக அதாவது முந்தைய தினம் கலை 10 மணிக்கு ஏ.சி. பெட்டிகளுக்கும், காலை 11 மணிக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கும் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
தட்கல் திட்டம் பயணிகள் தங்கள் பயணத்திற்கு ஒரு நாள் முன்பு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. இது உடனடி அல்லது அவசர பயணத் தேவைகளுக்கு ஏற்றதாக அமைகிறது. ஆனாலும் அதிக தேவை மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் இருப்பதால் உறுதிப்படுத்தப்பட்ட தட்கல் டிக்கெட்டை எடுப்பது பெரும் சவாலாக உள்ளது. பெரும்பாலனவர்களால் விரைவாக கன்பார்ம் செய்யப்பட்ட தட்கல் டிக்கெட்டுகளை எடுக்க முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம் மிக விரைவான நெட்வொர்க் இல்லை.
தட்கல் டிக்கெட்
மேலும் ஐஆர்சிடிசி இணையதளத்தை அல்லது செயலியை ஒரே நேரத்தில் பலர் பயன்படுத்தும்போது அதிக பாஸ்ட் சர்வர் கொண்டவர்களுக்கே தட்கல் டிக்கெட் கன்பார்ம் ஆவதற்கு அதிக வாய்ப்பு இருந்து வந்தது.இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவுகட்டப்பட்டு இனி அனைவரும் எளிதாக தட்கல் டிக்கெட் எடுக்கும் நிலை உருவாகியுள்ளது. அதாவது இந்திய ரயில்வே 'ஸ்வாரயில்' (SwaRail) என்ற பெயரில் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது.
Train Ticket: ரயில் டிக்கெட் தொலைந்தாலும் டூப்ளிகேட் டிக்கெட் பெறலாம்; எப்படி தெரியுமா?
இந்தியன் ரயில்வே
ரயில்வேயின் முன்பதிவு டிக்கெட்டுகள், முன்பதிவில்லாத டிக்கெட்டுகள், நடை மேடை டிக்கெட்டுகள், தட்கல் டிக்கெட்டுகள், உணவு ஆர்டர், பிஎன்ஆர் நிலை, ரயில்களில் அட்டவணை, ரயில் எங்கே வந்து கொண்டிருக்கிறது போன்ற விவரங்கள் என அனைத்தையும் இந்த 'ஸ்வாரயில்'செயலி மூலம் மேற்கொள்ள முடியும்.மிக முக்கியமாக 'ஸ்வாரயில்'மூலம் இனி தட்கல் டிக்கெட்டுகளை மிக எளிதாக கன்பார்ம் செய்ய முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
'ஸ்வாரயில்'செயலி
'ஸ்வாரயில்'செயலி அதிக செயல்திறனை கொண்டுள்ளதால் எந்தவித தடங்கலும் இல்லாமல் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும், அதற்கேற்ற வகையில் 'ஸ்வாரயில்' செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஸ்வாரயில்' செயலியை பொறுத்தப்வரை இப்போது சோதனை ஓட்டம் முறையில் சுமார் 1,000 ரயில்வே அதிகாரிகள் அதனை டவுன்லோட் செய்து அதன் செயல்பாடுகளை ஆரயாந்து வருகின்றனர். இந்த சோதனை ஓட்டம் முடிந்தபிறகு பொதுமக்களும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 'ஸ்வாரயில்'செயலியை டவுன்லோட் செய்ய அனுமதி கிடைக்கும்.