Train Ticket: ரயில் டிக்கெட் தொலைந்தாலும் டூப்ளிகேட் டிக்கெட் பெறலாம்; எப்படி தெரியுமா?
ரயில் டிக்கெட் தொலைந்தாலும் டூப்ளிகேட் டிக்கெட் பெறலாம். அது எப்படி என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

Train Ticket: ரயில் டிக்கெட் தொலைந்தாலும் டூப்ளிகேட் டிக்கெட் பெறலாம்; எப்படி தெரியுமா?
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் ரயிலில் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். அதுவும் பண்டிகை காலங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும். பண்டிகை காலங்கள் மட்டுமின்றி சாதாரண நாட்களிலும் ரயிலில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது என்பது குதிரை கொம்புதான். நீண்ட தூரம் களைப்பின்றி வசதியாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் ரயில் பயணத்தை விரும்புகின்றனர்.
ரயில் டிக்கெட்
இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். தினமும் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான ரயில் நிலையங்கள் 24 மணி நேரமும் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
நாம் ரயிலில் பயணிக்க டிக்கெட் எடுத்து வருகிறோம். முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை ஆன்லைன் வாயிலாகவும், டிக்கெட் கவுண்ட்டரிலும் எடுத்து வருகிறோம்.
இந்திய ரயில்வேயின் அனைத்து சேவைகளையும் பெற ஒரே மொபைல் ஆப்!
ரயில் டிக்கெட் தொலைந்தால் என்ன செய்வது?
ரயிலில் பயணம் செய்யும் போது நீங்கள் கவுண்ட்டரில் எடுத்த டிக்கெட் தொலைந்துவிட்டதா? இனிமேல் கவலைப்படாதீர்கள்.. பதற்றமடையாதீர்கள்.. உங்களுக்காக ஒரு முக்கியமான புதுப்பிப்பு எங்களிடம் உள்ளது.
தொலைந்த ரயில் டிக்கெட்டை எப்படி மீட்டெடுப்பது எப்படி? எனப்து குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். இந்திய ரயில்வே தினமும் ஆயிரக்கணக்கான ரயில்களை இயக்குகிறது. இதன் மூலம், கோடிக்கணக்கான பயணிகள் பயன்களை பெறுகின்றனர்.
டூப்ளிகேட் டிக்கெட் பெறுவது எப்படி?
ஸ்லீப்பர் வகுப்பு அல்லது இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுக்கான நகல் டிக்கெட்டுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். எந்த முதல் வகுப்பிற்கும் 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். உங்கள் ரயில் டிக்கெட் கிழிந்தால், கட்டணத்தில் 25 சதவீதத்தை செலுத்தி நகல் டிக்கெட்டைப் பெறலாம்.
உங்கள் ரயில் டிக்கெட் தொலைந்து போனாலோ அல்லது கிழிந்தாலோ, கவலைப்பட வேண்டாம், உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும்; உடனடியக டூப்ளிகேட் டிக்கெட்ட்டை பெற்று உங்கள் பயணத்தை எந்தவித தடையுமின்றி தொடரலாம்.
Kumbh Mela: வசந்த பஞ்சமிக்கு பிரயாக்ராஜிலிருந்து சிறப்பு ரயில் சேவை: கும்பமேளா செல்ல ஏற்பாடு!