- Home
- இந்தியா
- INS Arnala: பாகிஸ்தானுக்கு பீதியைக் கிளப்பும் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட நீர் மூழ்கி கப்பல்!!
INS Arnala: பாகிஸ்தானுக்கு பீதியைக் கிளப்பும் தமிழ்நாட்டில் கட்டப்பட்ட நீர் மூழ்கி கப்பல்!!
INS Arnala, இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இந்தப் போர்க்கப்பல் கடலில் எதிரிகளின் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்கும்.

பாகிஸ்தான் பதற்றம்: கடற்படைக்கு புதிய பலம் INS Arnala
பாகிஸ்தானுடனான பதற்றம் உச்சத்தில் இருக்கும் இந்த நேரத்தில், INS அர்ணாலாவை இந்திய கடற்படை சேர்த்துள்ளது. கடல் வழியாக ஊடுருவல் மற்றும் கண்காணிப்பு அதிகரிக்கும் என உளவுத்துறையினர் எச்சரித்திருந்தனர்.
INS Arnala submarine built in Tamil Nadu Kattupalli L&T Shipyard
கொல்கத்தாவைச் சேர்ந்த கார்டன் ரீச் நிறுவனம் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரித்த முதல் நீர்மூழ்கி எதிர்ப்பு போர்க்கப்பல் 'INS Arnala'. INS Arnala வகை நீர்மூழ்கி எதிர்ப்பு போர் கப்பல் (ASW SWC) தமிழ்நாட்டின் காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி கப்பல் கட்டும் தளத்தில் மே 8, 2025 அன்று நடைபெற்ற விழாவில் இந்திய கடற்படைக்கு அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
INS Arnala work against Pakistan Submarines
77 மீட்டர் நீளமும் நவீன தொழில்நுட்பமும் கொண்ட INS அர்ணாலா, நீர்மூழ்கிகளைக் கண்டறிந்து அழிக்கும். பாகிஸ்தானின் கடல் ஊடுருவல் முயற்சிகளைத் தடுக்கும்.
INS Arnala under the sea
INS அர்ணாலா கடலோரக் கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்கு உதவும். குறைந்த ஆழத்தில் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
India's First Indigenous Anti-Submarine Shallow Water Craft
இந்தப் போர்க்கப்பலில் 80% க்கும் மேற்பட்ட உள்நாட்டுத் தயாரிப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது 'தற்சார்பு இந்தியா' இலக்கிற்கு எடுத்துக்காட்டு. மகாராஷ்டிராவின் வசாய் அருகே அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டையான 'அர்னாலா'வின் பெயரால் அர்னாலா பெயரிடப்பட்டது, இது இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தின் பிரதிபலிப்பாகும். 77 மீ நீளமுள்ள இந்த போர்க்கப்பல், டீசல் எஞ்சின்-வாட்டர்ஜெட் கலவையால் இயக்கப்படும் மிகப்பெரிய இந்திய கடற்படை போர்க் கப்பலாகும்.
INS Arnala is warning to Pakistan
INS அர்ணாலா, இந்திய கடற்படையின் பலத்தை அதிகரிக்கும். இது பாகிஸ்தானுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. கடலுக்கு அடியில் எதிரி நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பலை துல்லியமாக கண்டறியும்.