- Home
- இந்தியா
- துணை குடியரசுத் தலைவருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.? கொட்டிக் கிடக்கும் சலுகைகள் இவ்வளவா.?
துணை குடியரசுத் தலைவருக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.? கொட்டிக் கிடக்கும் சலுகைகள் இவ்வளவா.?
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் பதவி, நாட்டின் இரண்டாவது உயரிய பதவியாகும். ராஜ்ய சபையின் தலைவராகவும் செயல்படும் இப்பதவி, சம்பளம், சலுகைகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களையும் தற்போது காணலாம்.

நாட்டின் உட்சபட்ச பதவிக்கான தேர்தல்
இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் பதவி முக்கியமான ஒரு அரசியலமைப்பு பதவியாகும். நாட்டின் உட்சபட்ச பதவியில் இரண்டாவது இடத்தில் துணை குடியரசு தலைவர் பதவி உள்ளது. துணை குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும், 35 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்,
ராஜ்ய சபையின் தலைவர் துணை குடியரசுத் தலைவர், இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையான ராஜ்ய சபையின் தலைவராக செயல்படுகிறார். ராஜ்ய சபா கூட்டங்களை நடத்துவது, மாநிலங்களவையில் ஒழுங்கைப் பராமரிப்பது மேலும் மசோதாக்கள், விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்புகளை நிர்வகிக்க கூடியவராகவும் உள்ளார்.
துணை குடியரசு தலைவர் பதவிக்கான அதிகாரம்
குடியரசுத் தலைவரின் பதவி காலியாகும்போது அல்லது பொறுப்பு குடியரசுத் தலைவரின் பதவி காலியாகும்போது துணை குடியரசுத் தலைவர் தற்காலிகமாக குடியரசுத் தலைவராக செயல்படுவார். இந்தக் காலகட்டத்தில், அவர் குடியரசுத் தலைவரின் அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்தலாம்.
அதே நேரம் துணை குடியரசுத் தலைவரை பதவியில் இருந்து நீக்கவும் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ராஜ்ய சபையில் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி ஆதரவுடன் பதவி நீக்கப்படலாம்,
சம்பளமும் சலுகைகளும்
இந்தியாவின் துணை குடியரசுத் தலைவருக்கு மாத சம்பளமாக 4 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த சம்பளம், துணை குடியரசுத் தலைவர் பதவிக்காக அல்லாமல், அவர்கள் ராஜ்யசபாவின் தலைவராக செயல்படுவதற்காக வழங்கப்படுகிறது,
இது மட்டுமில்லாமல் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. டெல்லியில் துணை ஜனாதிபதியின் இல்லமான அரசு பங்களாவில் வசிக்க உரிமை. பராமரிப்பு, மின்சாரம், தொலைபேசி செலவுகள் மத்திய அரசால் ஏற்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசு பயணங்களுக்கு இலவச விமானம், ரயில், மற்றும் வாகன வசதிகள். வெளிநாட்டு பயணங்களில் தூதரக மரியாதை வழங்கப்படுகிறது. துணை குடியரசுத் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு AIIMS உள்ளிட்ட மத்திய அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவ வசதி பெற்றுக்கொள்ளலாம்.
ஓய்வூதியம் எவ்வளவு தெரியுமா.?
தினசரி அலவன்ஸ், அலுவலக செலவுகள், மற்றும் பயண அலவன்ஸ்கள் அரசால் வழங்கப்படுகின்றன. மேலும் குடியரசு துணை தலைவர் பதவி முடிந்த பிறகு மாதம் மாதம் 1.5 லட்சம் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. மேலும், குறிப்பிட்ட காலத்திற்கு அரசு வீடு, பாதுகாப்பு, மற்றும் மருத்துவ வசதிகள் தொடர்ந்து கிடைக்கும்.
மேலும் துணை குடியரசு தலைவருக்கு நாட்டின் உயரிய பாதுகாப்பான Z+ பாதுகாப்பு வழங்கப்படுகிறது. NSG, டெல்லி காவல்துறை, மற்றும் CISF ஆகியவை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.
இந்த நிலையில் இன்று குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன், இந்தியா கூட்டணி (INDIA)சார்பில் பி. சுதர்சன் ரெட்டி போட்டியிடுகின்றனர். இன்று மாலை தேர்தல் களத்தில் வெற்றி வாகை சூடப்போவது யார் என தெரியவரும்.