கட்டையை போட்ட BJD-BRS- Akali Dal.. யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்? NDA vs INDIA
ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான BJD கட்சி, NDA மற்றும் INDIA கூட்டணிகளில் இருந்து விலகியே இருப்பதாகவும், தேர்தலில் பங்கேற்கவும் மாட்டார்கள் எனவும் கூறினார்.

துணை ஜனாதிபதி தேர்தல்
இன்று துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், ஒடிசாவின் முக்கிய எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம் (BJD) மற்றும் தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி (BRS) ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என அறிவித்துள்ளனர். இந்த முடிவு, எதிர்க்கட்சியின் வேட்பாளருக்கான வாக்குகள் குறையக் காரணமாகவும், NDA வேட்பாளருக்கு சாதகமாகவும் அமையலாம் எனக் கூறப்படுகிறது.
நவீன் பட்நாயக்
ஒடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான BJD கட்சி, NDA மற்றும் INDIA கூட்டணிகளில் இருந்து விலகியே இருப்பதாகவும், தேர்தலில் பங்கேற்கவும் மாட்டார்கள் எனவும் கூறினார். BJD நாடாளுமன்ற உறுப்பினர் சஸ்மித் பத்ரா, மூத்த தலைவர்களும், அரசியல் குழு உறுப்பினர்களும் கலந்தாலோசித்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
“எங்கள் முக்கிய கவனம் மாநில முன்னேற்றத்திலும் 4.5 கோடி மக்களின் நலனிலும் தான்” என்று அவர் வலியுறுத்தினார். 2012 துணை ஜனாதிபதி தேர்தலிலும் BJD உறுப்பினர்கள் வாக்களிக்காதது குறிப்பிடத்தக்கது. இந்த முடிவுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் வேறு வேறு கருத்துக்கள் உள்ளன.
கே.டி. ராம ராவ்
மறுபுறம், தெலங்கானாவின் BRS கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராம ராவ், “விவசாயிகளுக்கு யூரியா உரம் கிடைக்கவில்லை, இதற்குப் பொறுப்பு காங்கிரஸுக்கும், BJP-க்கும் உள்ளது. அதனால் எங்கள் எம்.பிக்கள் வாக்களிக்க மாட்டார்கள். NOTA வசதி இருந்தால் அதைப் பயன்படுத்தியிருப்போம்” என்று தெரிவித்துள்ளார். BJD மற்றும் BRS விலகியதால், NDA வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
NDA கூட்டணியில் தற்போது 427 எம்.பிக்கள் உள்ளனர். இந்தியா கூட்டணியின் வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டிக்கு முழுமையான எதிர்க்கட்சி ஆதரவு இல்லாததால், முடிவு NDA-க்கு சாதகமாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன. தேர்தல் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. மாலை வாக்குகள் எண்ணப்பட்டு அதே நாளில் முடிவு வெளியாக உள்ளது.
பிஜேடி மற்றும் பிஆர்எஸ்
துணை ஜனாதிபதி வேட்பாளர்களில் எவருக்கும் பிஜேடி மற்றும் பிஆர்எஸ் வாக்களிக்காதது இத்தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். ராஜ்யசபாவில் மொத்தம் 11 எம்.பி.க்களை (பிஜேடி-11 மற்றும் பிஆர்எஸ்-4) கொண்டுள்ளன. துணை ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தொகுப்பில் 787 உறுப்பினர்கள் உள்ளனர்.
மாநில சட்டமன்ற எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கும் ஜனாதிபதித் தேர்தலைப் போலல்லாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே துணை ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கின்றனர். ஒரு வேட்பாளர் வெற்றிபெற குறைந்தபட்சம் 394 வாக்குகள் தேவை. ராதாகிருஷ்ணனை ஆதரிக்கும் 422 எம்.பி.க்களில், மக்களவையில் இருந்து 293 பேரும், மாநிலங்களவையில் இருந்து 129 பேரும் உட்பட, என்.டி.ஏ.வின் வெற்றிக்கான பாதை கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது.
சிரோமணி அகாலிதளம்
ஒவ்வொரு எம்.பி.யும் 'ஒன்று' என்று கணக்கிடப்படுவதால், 11 எம்.பி.க்கள் வாக்களிக்காமல் இருப்பது இரு தரப்பினரின் வாய்ப்புகளையும் பாதிக்காது, வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாக இருக்கும் வரை’ என்று கூறுகின்றனர். அதேபோல பி.ஆர்.எஸ் மற்றும் பி.ஜே.டி கட்சிகளுக்குப் பிறகு, சிரோமணி அகாலிதளம் கட்சியும் துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.