MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • குறைந்த கட்டணம் வசூலிக்கும் டாப் 10 மருத்துவ கல்லூரிகள்; தமிழ்நாட்டின் 2 கல்லுரிகள் லிஸ்ட்ல இருக்கு!

குறைந்த கட்டணம் வசூலிக்கும் டாப் 10 மருத்துவ கல்லூரிகள்; தமிழ்நாட்டின் 2 கல்லுரிகள் லிஸ்ட்ல இருக்கு!

இந்தியாவில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கும் டாப் 10 மருத்துவ கல்லூரிகள் குறித்து இந்த செய்தியில் விரிவாக அலசுவோம்.

2 Min read
Rayar r
Published : Jan 10 2025, 12:11 PM IST| Updated : Jan 10 2025, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Mmedical Colleges

Mmedical Colleges

எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு 

இந்தியாவில் கிராமம் முதல் நகரம் வரையிலான மாணவ,மாணவிகள் ஒவ்வொரும் MBBS படிக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். ஆனால் எம்பிபிஎஸ் படிப்புக்கான விலையுயர்ந்த கட்டணம் அவர்களை இந்த கனவில் இருந்து பின்வாங்கச் செய்து விடுகிறது. ஏனெனில் பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல லட்சக்கணக்கான ரூபாயை கட்டணமாக வசூலித்து வருகின்றன. 

ஆனால் நாட்டில் சில மருத்துவ கல்லூரிகள் நர்சரி பள்ளியில் செலுத்தும் கட்டணத்தை விடக் குறைந்த கட்டணத்தை எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு வசூலித்து வருகின்றன. எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு குறைவான கட்டணம் வசூலிக்கும் 10 மருத்துவ கல்லூரிகள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம். 

24
Top 10 medical colleges in India

Top 10 medical colleges in India

டெல்லி எம்ய்ஸ் 

டெல்லி எம்ய்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எம்பிபிஎஸ் படிக்கு ஆண்டுக்கு ரூ.1,638 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஐந்து வருட படிப்பு முழுவதற்கும் மாணவர்கள் ரூ.19,896 மட்டுமே செலுத்த வேண்டும். இங்கு விடுதி கட்டணம் ரூ.2,000 மட்டுமே. மிகவும் குறைவான கட்டணத்தில் தரமான கல்வித்தரத்தை எம்ய்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெறலாம்.

டெல்லி எய்ம்ஸில் மொத்தம் 132 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அவற்றில் 125 இந்திய மாணவர்களுக்கும், 7 வெளிநாட்டு மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரியில் சேர, மாணவர்கள் இளங்கலை நீட் தேர்வில் சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாட்டில் ஒவ்வொரு மாணவரும் இங்கு சேர போட்டி போடுகின்றனர். 

இயற்கை அழகின் சங்கமம்; சொர்க்கம் என்றால் இதுதான்; இந்தியாவில் தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற 5 இடங்கள்!

34
Delhi AIMS

Delhi AIMS

ராஜஸ்தான், பாட்னா மருத்துவ கல்லுரிகள்

2வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள ஆர்என்டி மருத்துவக் கல்லூரியில் ஆண்டு கட்டணம் ரூ.4,000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. 5 ஆண்டுகளில் மொத்த கட்டணம் ரூ.20,000 மட்டுமே ஆகும். 3வது இடம் பிடித்துள்ள பாட்னாவில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆண்டு கட்டணம் ரூ.6,000 மட்டுமே. 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.30,000 செலுத்தினால் போதும். டெல்லி எய்ம்ஸைப் போலவே, இங்கும் 125 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. 

4வது இடம் பிடித்துள்ள கோரக்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 125 எம்பிபிஎஸ் இடங்களுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. இங்கு ஆண்டு கட்டணம் ரூ.6,100. 5 ஆண்டுகளில் ரூ.30,500 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 5வது இடம் வகிக்கும் டெல்லியில் உள்ள மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் ஆண்டு கட்டணம் ரூ.12,000 மட்டுமே.

44
medical students

medical students

தமிழ்நாட்டில் 2 கல்லூரிகள் 

இந்த பட்டியலில் சென்னையில் அமைந்துள்ள மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி 6வது இடத்தில் உள்ளது, இங்கு ஆண்டு கட்டணம் ரூ.13,000 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி 7வது இடத்தில் உள்ளது, இதன் ஆண்டு கட்டணம் சுமார் ரூ.53,000 ஆகும். உத்தரபிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் 8வது இடத்தில் உள்ளது, இங்கு ஆண்டு கட்டணம் ரூ.81,000 வசூலிக்கப்படுகிறது. இங்கு 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.4,00,000 கட்டணம் வாங்கபடுகிறது. இங்கு 200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (Bஹூ) 9வது இடத்தில் உள்ளது. இங்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இங்கு ஆண்டு கட்டணம் ரூ.1.34 லட்சம் ஆகும். 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.6,70,000 கட்டணமாக செலுத்த வேண்டும். அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் (Aமூ) 10வது இடத்தில் உள்ளது. இங்கு ஆண்டு கட்டணம் ரூ.2.20 லட்சம். இங்கு 150 MBBS இடங்கள் உள்ளன. 5 ஆண்டுகளுக்கான மொத்த கட்டணம் ரூ.11 லட்சம் ஆகும்.

மகா கும்பமேளா 2025: பிரயாக்ராஜில் ஜப்பானிய தொழில்நுட்பத்தால் உருவான ஆக்சிஜன் காடுகள்!
 

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மருத்துவக் கல்லூரிகள்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved