MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இயற்கை அழகின் சங்கமம்; சொர்க்கம் என்றால் இதுதான்; இந்தியாவில் தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற 5 இடங்கள்!

இயற்கை அழகின் சங்கமம்; சொர்க்கம் என்றால் இதுதான்; இந்தியாவில் தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற 5 இடங்கள்!

அமைதியான, தனிமையான பயணத்தை விரும்புபவர்களுக்கு ஏற்ற வகையில் இந்தியாவில் அமைதியாக இருக்கும் 5 இடங்கள் குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Rayar r
Published : Jan 09 2025, 08:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Spiti Valley

Spiti Valley

பயணம் செய்வது அன்றாட வேளைப்பளுவையும், மன அழுத்தத்தையும் குறைக்க உதவுகிறது. ஆகையால் இந்தியாவில் இப்போது மக்கள் பயணம் செய்வது அதிகரித்து விட்டது. கடற்கரைகள், மலைபிரதேசங்கள், அருவிகள் என தங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற இடங்களுக்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். இதில் சிலர் ஆள் அரமில்லாத தனிமையான சுற்றுலா இடங்களை மிகவும் விரும்புவார்கள். அதாவது நகர நெருக்கடி இல்லாமல், மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்களுக்கு செல்ல விரும்புவார்கள். இத்தகைய தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற 5 இடங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

26
Himachal Pradesh Tourist Places

Himachal Pradesh Tourist Places

ஸ்பிட்டி பள்ளத்தாக்கு (இமாச்சலப் பிரதேசம்)

நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து விலகி அமைதியை விரும்புவோருக்கு ஸ்பிட்டி ஒரு சிறந்த இடம். அமைதியான அழகு மற்றும் மாறுபட்ட நிலப்பரப்புடன், இந்த இடம் உயரமான குளிர்ந்த பாலைவன நிலப்பரப்பில் ஒரு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்குகிறது. 'லிட்டில் திபெத்' என்று அழைக்கப்படும் இந்த பகுதி, மலைகள் மற்றும் படிக-தெளிவான ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. நீண்ட காலம் குளிராக இருக்கும் இந்த பகுதி கோடையை சமாளிக்க ஏற்ற இடமாகும். பழங்கால மடங்கள், காசா மற்றும் டாபோ போன்ற தொலைதூர கிராமங்கள் மற்றும் நட்சத்திரங்கள் நிறைந்த இரவுகள் ஸ்பிட்டியின் அழகை மெருகூட்டுகின்றன.
 

36
Ziro Valley

Ziro Valley

ஜிரோ பள்ளத்தாக்கு (அருணாச்சலப் பிரதேசம்) 

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஜிரோ பள்ளத்தாக்கில் நெல் வயல்கள் மற்றும் பாரம்பரிய அபதானி பழங்குடி கிராமங்கள் உள்ளன. நகர வாழ்க்கையிலிருந்து விலகி அமைதியான வாழ்க்கையை நீங்கள் விரும்பினால், நெல் வயல்கள், அழமான மலைகள் மற்றும் ஏராளமான இயற்கையுடன் கூடிய பசுமையான சொர்க்கத்தை உங்களுக்கு வழங்குகிறது. மன அழுத்தத்தைக் குறைக்க விரும்புவோருக்கும், அழகிய நடைப்பயணங்களையும் மெதுவான வாழ்க்கையையும் அனுபவிக்க விரும்புவோருக்கும் இந்த இடம் சரியானது.

கி.மீ.க்கு வெறும் 68 பைசா! இந்தியாவின் மிக மலிவான ரயில் சேவை இதுதான்!

46
Nako

Nako

நாகோ (இமாச்சலப் பிரதேசம்)

இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து 3,600 மீ உயரத்தில் அமைந்துள்ளது நாகோ. நகரத்திலிருந்தும் நெரிசலான சுற்றுலா இடங்களிலிருந்தும் தப்பிக்க விரும்புவோருக்கு உண்மையிலேயே இது ஒரு சிறப்பான இடமாகும். வெள்ளை பனிபோர்த்திய மலைகள், நாகோ ஏரி மற்றும் உள்ளூர் மக்களின் அமைதியான வாழ்க்கை முறை இந்த இடத்தை அமைதியான விடுமுறை இடமாக மாற்றுகிறது. நீங்கள் தனிமையைத் தேடினால் நாகோ உங்களை தேடுகிறது என்று அர்த்தம்.

56
Agatti Island

Agatti Island

அகட்டி தீவு (லட்சத்தீவு)

லட்சத்தீவில் அமைந்துள்ள அகட்டி தீவு தனிமையான தீவு பகுதிகளை விரும்புபவர்களுக்கு சிறந்த இடம். வெள்ளை மணல் கடற்கரைகளில் நடப்பதற்கும், நீல நிற நீரில் நீந்துவதற்கும், துடிப்பான பவளப்பாறைகளை கண்டு ரசிப்பதற்கும்  அகட்டி தீவை விட்டால் வேறு இடமில்லை.  ஒரு சில விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதால் இந்த தீவுக்கு அதிக மக்கள் வருவதில்லை. ஆகவே தனிமையை விரும்புபவர்களுக்கும்  ஸ்நோர்கெல்லிங், டைவிங்கை விரும்புபவர்களுக்கும் அகட்டி தீவு தான் பெஸ்ட் சாய்ஸ்.

ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்.. இனி எல்லாமே ஒரே இடத்தில்.. இந்திய ரயில்வேயின் புதிய வசதி!

66
Mechuka

Mechuka

மெச்சுகா, (அருணாச்சல பிரதேசம்)

இந்தோ-திபெத்திய எல்லைக்கு அருகிலுள்ள மற்றொரு சிறந்த இடம் மெச்சுகா ஆகும். இந்தியாவின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இது அமைந்துள்ளது. சியோம் நதியால் இந்த பள்ளத்தாக்கு அழகை கூட்டுகிறது. நதியின் பின்னணியில் பனி மூடிய மலைகள், அழகான பசுமையான காடுகள் நிறைந்த மலைகள் உங்களை சொர்கத்திற்கே அழைத்துச் செல்லும்.
 

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தியா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved