MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஆந்திரா.. தெலுங்கானா வெள்ளம்.. கிள்ளி கொடுக்காமல் அள்ளிக்கொடுத்த ஜூனியர் என்.டி ஆர்!

ஆந்திரா.. தெலுங்கானா வெள்ளம்.. கிள்ளி கொடுக்காமல் அள்ளிக்கொடுத்த ஜூனியர் என்.டி ஆர்!

Junior NTR : தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.

2 Min read
Ansgar R
Published : Sep 03 2024, 05:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Andhra Floods

Andhra Floods

கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மையமானது, அதீத காற்றழுத்த மண்டலமாக மாறியது. ஆகையால் ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெரிய அளவிலான மழைப்பொழிவு இந்த மூன்று மாநிலங்களில் ஏற்பட்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ஆந்திராவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை; ஏன்? சேதம் என்ன?

24
Heavy Floods Telangana

Heavy Floods Telangana

கடந்த செப்டம்பர் 2ம் தேதி (நேற்று) வரை, ஆந்திராவின் குண்டூர், அமராவதி, மங்களகிரி பாபட்லா மற்றும் விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்கு பல சாலைகளும், ரயில் பாதைகளும் துண்டிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மாநிலங்கள் வழியாக செல்லக்கூடிய சுமார் 140 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கனமழை காரணமாக சுமார் 5 மாவட்டங்களில் இருந்து 290க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசித்து வந்த 13,000 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

34
Prime Minister Modi

Prime Minister Modi

இதுவரை வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களுடைய எண்ணிக்கை 19ஆக உயர்ந்திருக்கிறது. நேற்று இரு மாநில முதல்வர்களிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுக்கு தைரியம் அளித்ததோடு, இந்த கடும் சிக்கலில் இருந்து மீண்டு வர, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் நிலையில் இருப்பதாக அறிவித்தார். இதற்கிடையில் திரையுலக பிரபலங்களும் தற்பொழுது நிதிகளை இரு மாநிலங்களுக்கும் அளிக்க துவங்கியுள்ளனர்.

44
Junior NTR

Junior NTR

இந்நிலையில் பிரபல தெலுங்கு திரையுலக நடிகர் ஜூனியர் NTR, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு வழங்கியுள்ளார். அதே போல ‘கல்கி 2898 AD’ பட தயாரிப்பாளர்களும் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா, தெலங்கானா; 19 பேர் பலி; பள்ளிகளுக்கு விடுமுறை; 140 ரயில்கள் ரத்து!

About the Author

AR
Ansgar R
ஜூனியர் என்டிஆர்
நரேந்திர மோடி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved