திருப்பதி கோயிலில் டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த தரிசன டிக்கெட்டுகள் ரத்து! தேவஸ்தானம் அதிரடி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து தரிசன டிக்கெட் கோட்டாக்களும் டிசம்பர் 1 முதல் ரத்து செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Tirumala Tirupati
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் வரும் என்பார்கள் அதற்கு ஏற்றார் போல உலக புகழ்பெற்ற இக்கோவிலில் தினமும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றன. இதனால், அவ்வப்போது கூட்டம் அதிகமாக இருக்கும் போது விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அவ்வப்போது நடைமுறைப்படுத்தி வருகிறது.
Tirupati Temple
குறிப்பாக திருப்பதி தேவஸ்தானம் கோவில்களில் இந்துக்களை தவிர மற்ற மதத்தினர் பணியாற்ற அனுமதிக்க முடியாது. பணியாற்றும் அனைத்து மாற்று மதத்தினரும் வேறு பணிகளுக்கு மாற்றப்படுவர். ஒன்று அவர்களாகவே விஆர்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வு கேட்டு செல்லலாம் அல்லது வேறு துறைகளுக்கு பணியிடமாற்றம் கோரலாம். திருப்பதி கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் வைப்பதற்கு இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: Tirupati Temple: டோட்டலாக மாறும் திருப்பதி கோவில்! தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!
Tirupati News
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து தரிசன டிக்கெட் கோட்டாக்களையும் ரத்து செய்யப்படுவதாகவும், இந்த நடைமுறை டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தேவஸ்தானம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பல்வேறு மாநில சுற்றுலாத்துறை சார்பில் தரிசன டிக்கெட் கோட்டா வழங்கப்பட்டு வந்தது.
Tirumala Tirupati Devasthanams
இந்த டிக்கெட்டுகள் பெற பக்தர்கள் நேரடியாக அந்தந்த மாநில சுற்றுலாத்துறை இணைய ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதனை இடைத்தரகர்கள் மொத்தமாக வாங்கி அதிக விலைக்கு விற்பதாக தொடர் புகார்கள் வந்தது. இதனையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு அனைத்து மாநில சுற்றுலாத்துறைக்கும் வழங்கப்பட்ட தரிசன டிக்கெட் கோட்டாவை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்! ஒரே நிமிடத்தில் விஐபி தரிசன டிக்கெட்! பெறுவது எப்படி?
Tourism Ticket
தெலங்கானா, ஆந்திர மாநிலத்திற்கு ஒரு நாளைக்கு 1000 டிக்கெட்டுகளும், கர்நாடக மாநிலத்திற்கு 750, கேரளாவிற்கு 250, தமிழ்நாடு, புதுச்சேரிக்கு தலா 500 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இனி அனைத்து மாநில சுற்றுலாத்துறைக்கும் ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது.