தமிழ்நாட்டில் கிளம்பும் இந்த 2 ரயில்கள் போதும்; ஒட்டுமொத்த இந்தியாவையே சுத்தி பாக்கலாம்!
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களை சுற்றிப்பார்க்க தமிழ்நாட்டில் இருந்து 2 நீண்ட தூர ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதைப்பற்றி பார்க்கலாம்.
Longest Train in India
நீண்ட தூர பயணங்களுக்கு நடுத்தர மக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பது ரயில்கள் தான். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் வகையில் ரயில் வழித்தடம் அமைந்துள்ளது. நீண்ட தூர பயணத்தை விரும்புபவர்களுக்கு ரயில் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். இந்தியாவில் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் 2 ரயில்கள் தமிழ்நாட்டில் இருந்து தான் கிளம்புகின்றன. அதில் பயணித்தால் ஒட்டுமொத்த இந்தியாவையும் சுற்றிப்பார்த்துவிடலாம்.
Vivek Express
அதில் ஒன்று தான் விவேக் எக்ஸ்பிரஸ். இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து இந்தியாவின் வட கிழக்கு மாநிலமான அசாமில் உள்ள திப்ருகர் வரை பயணிக்கிறது. இந்தியாவில் மிக நீண்ட தூரம் பயணிக்கும் ரயிலும் இதுதான். இந்த ரயில் மொத்தம் 4 ஆயிரத்து 189 கிலோமீட்டர் பயணிக்கிறது. அதனை 74 மணிநேரம் 35 நிமிடத்தில் கடக்கிறது. இந்தியாவில் உள்ள 8 முக்கிய மாநிலங்களை கடந்து இந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிக்கிறது.
இதையும் படியுங்கள்... இந்தியாவின் மிக நீளமான பெயரை கொண்ட ரயில் நிலையம் தமிழ்நாட்டில் தான் உள்ளது! எது தெரியுமா?
Kanyakumari Vivek Express
கன்னியாகுமரி முதல் திப்ருகர் வரை செல்லும் இந்த ரயில் மொத்தம் 57 நிறுத்தங்களில் நின்று செல்கிறது. இந்த ரயில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒரிசா, பீகார், மேற்கு வங்கம், நாகாலாந்து, அசாம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் வழியாக செல்கிறது. இந்த ரயிலில் 2 செகண்ட் ஏசி கோச்சுகளும், 4 3rd ஏசி கோச்சுகளும், 11 ஸ்லீப்பர் கோச்சுகளும், 4 முன்பதிவில்லா பெட்டிகள் என மொத்தம் 24 பெட்டிகளுடன் பயணிக்கிறது. இந்த ரயில் கடந்த 13 ஆண்டுகளாக தினசரி கன்னியாகுமரியில் இருந்து திப்ருகர் வரை இயக்கப்பட்டு வருகிறது.
Himsagar Express
விவேக் எக்ஸ்பிரஸுக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் இருந்து நீண்ட தூரம் பயணிக்கும் மற்றொரு ரயில் ஹிம்சகர் எக்ஸ்பிரஸ். இந்த ரயில் கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை பயணிக்கிறது. மொத்தம் 73 மணிநேரம் பயணிக்கும் இந்த ரயில் 3 ஆயிரத்து 790 கிலோமீட்டர் தூரம் செல்கிறது. அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள 12 மாநிலங்களை கடந்து செல்லும் இந்த ரயில் மொத்தம் 73 நிறுத்தங்களையும் கொண்டுள்ளது.
Himsagar Express Train
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் என மோத்தம் 12 மாநிலங்கள் வழியாம் ஹிம்சகர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிக்கிறது. மொத்தம் 20 பெட்டிகளுடன் இந்த ரயில் பயணிக்கிறது. விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் இந்தியாவின் வட கிழக்கு எல்லை வரை செல்வதுபோல் ஹிம்சகர் எக்ஸ்பிரஸ் ரயில் இந்தியாவின் தென்கோடியில் இருந்து வடகோடியை இணைக்கிறது.
இதையும் படியுங்கள்... இந்திய வரலாற்றில் மிகவும் தாமதமாக வந்த ரயில் எது தெரியுமா? நாள் கணக்கு இல்லை.. வருட கணக்கு ஆச்சு!