MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இந்தியாவின் மிக நீளமான பெயரை கொண்ட ரயில் நிலையம் தமிழ்நாட்டில் தான் உள்ளது! எது தெரியுமா?

இந்தியாவின் மிக நீளமான பெயரை கொண்ட ரயில் நிலையம் தமிழ்நாட்டில் தான் உள்ளது! எது தெரியுமா?

இந்திய ரயில்வேயானது ஆசியாவின் மிகப்பெரியது மற்றும் உலகின் நான்காவது பெரியது. இந்தியாவில் மட்டும் 7,335 ரயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவின் மிக நீளமான பெயரை கொண்ட ரயில் நிலையம் தமிழ்நாட்டில் தான் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?

2 Min read
Author : Ramya s
Published : Sep 16 2024, 11:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Indian Railway station with longest name

Indian Railway station with longest name

நாம் அனைவரும் கண்டிப்பாக ரயிலில் பயணித்திருப்போம். இந்திய ரயில்வே என்பது ஆசியாவின் மிகப்பெரிய ரயில் நெட்வொர்க்காகவும் உலகின் 4-வது பெரிய இரயில்வே நெட்வொர்க்காகவும் இந்திய ரயில்வே உள்ளது.

சுமார் 68,000 கி.மீ-க்கு மேல் ரயில் பாதைகளை கொண்ட நாடாக இந்தியா உள்ளது. இதில் 45,000க்கும் கிலோமீட்டருக்கும் அதிகமான மின்மயமாக்கப்பட்ட ரயில் நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி உலகளவில் அரசாங்கத்தால் இயக்கப்படும் ஒரே ரயில்வே என்றால் அது இந்திய ரயில்வே தான். வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 4உலக பாரம்பரிய தளங்களை இந்திய ரயில்வே கொண்டுள்ளது. அவை டார்ஜிலிங் இமயமலை இரயில்வே, சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், மும்பை, நீலகிரி மலை இரயில் மற்றும் கல்கா சிம்லா இரயில் ஆகியவை ஆகும். 

25
Indian Railway station with longest name

Indian Railway station with longest name

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ், பேலஸ் ஆன் வீல்ஸ், தி கோல்டன் தேர், தி மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் தி டெக்கான் ஒடிஸி என்ற 5 ராயல் ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. இதில், பேலஸ் ஆன் வீல்ஸ் பழமையான ஆடம்பர ரயில் ஆகும். ஆனால், இந்த ரயில்களின் கட்டணம் சாதாரண ரயில் கட்டணத்தை விட பன்மடங்கு அதிகம் என்பதால் இந்த ராயல் ரயில்களில் அனைவரும் பயணிக்க முடியாது.

இந்தியாவில் ரயில்வேயில் சுமார் 1.4 மில்லியன் மக்கள் பணிபுரிகின்றனர். இந்த நேரடி வேலைவாய்ப்பு தவிர, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்வதன் மூலம் பலர் இரயில்வே என்பது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாராத்திற்கு உதவுகிறது.

ரயில் சேவைகளை வழங்கும் இ-கேட்டரிங் மற்றும் ரயில் பயன்பாடுகளும் வேலை வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இப்படி இந்திய ரயில்வே பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் பல உள்ளன. அப்படி மற்றொரு சுவாரஸ்யமான தகவல் பற்றி பார்க்கலாம். 

35
Indian Railway station with longest name

Indian Railway station with longest name

அதாவது இந்தியாவில் மொத்தம் 7,335 ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில், "புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு தனிச்சிறப்பை கொண்டுள்ளது. அதாவது, இந்தியாவின் மிக நீளமான ரயில் நிலையப் பெயர் கொண்ட ரயில் நிலையம் தமிழ்நாட்டில் தான் உள்ளது என்பது பலருக்கும் தெரியாத தகவல்.

ஆம். இதற்கு முன்பு மெட்ராஸ் சென்ட்ரல் என்றும் பின்னர் சென்னை சென்ட்ரல் என்றும் அழைக்கப்பட்ட இந்த ரயில் நிலையத்தின் பெயர் 2019-ம் ஆண்டு மாற்றப்பட்டது. அதன்படி, இந்த ரயில் நிலையம் தற்போது புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம் என்று அழைக்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு முன்வைத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டதை அடுத்து, சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் பெயர் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

45
Indian Railway station with longest name

Indian Railway station with longest name

தெற்கு ரயில்வே புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் ரயில் நிலையம்  பற்றிய சில சுவாரஸ்யமான விவரங்களைப் பகிர்ந்துள்ளது. சென்னையில் உள்ள இந்த ரயில் நிலையம், இந்தியாவின் மிக நீளமான பெயரைக் கொண்ட ரயில் நிலையம் என்று தெரிவித்துள்ளது. மொத்தம் 57 எழுத்துக்களைக் கொண்டுள்ளதால் இது நீளமனா பெயரை கொண்ட ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
Railway station with longest name

Railway station with longest name

சரி. உலகிலேயே நீளமான பெயரை கொண்ட ரயில் நிலையம் எந்த நாட்டில் உள்ளது தெரியுமா? ஐரோப்பிய நாடான வேல்ஸ் நாட்டில் உள்ள ஒரு ரயில் நிலையம் மிகவும் நீளமான பெயரை கொண்டுள்ளது. 

Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwlllantysiliogogogoch.என்பது அதன் பெயர். 58 எழுத்துக்கள் கொண்ட இந்த ரயில் புகழ்பெற்று நிற்கும் இந்த நிலையம், மிக நீளமான ஸ்டேஷன் பெயரை மட்டுமல்லாமல், ஐரோப்பா மட்டுமின்றி உலகின் மிக நீளமான இடப் பெயரையும் கொண்டுள்ளது. 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
இந்திய இரயில்வே
இந்திய இரயில்வே
தொடருந்து நிலையம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
High Blood Pressure : வெறும் 'பிபி' மாத்திரைகள் போதாது!! இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் 6 வழிகள் இதோ!!
Recommended image2
Green Tea For Weight Loss : க்ரீன் டீ குடிக்க 'சரியான' வழி இதுதான்! எடை மளமளவென குறையும்! ஆனா 'இப்படி' மட்டும் குடிக்காதீங்க
Recommended image3
இதயத்தைப் பாதுகாக்கும் '7' முக்கியமான டிப்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved