போட்றா வெடிய..! ஆந்திரா காரரை தண்ணீர் குடிக்க வைத்த நம்ம கோவைக்காரர்..
இந்திய குடியரசு துணைத்தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் 452 முதல் விருப்பு வாக்குகளைப் பெற்று, எதிர்க்கட்சி வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை 152 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்

இந்திய குடியரசு துணைத்தலைவர் தேர்தல் இன்று காலை தொடங்கியது. தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் (67), தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிர ஆளுநருமானவர் களத்தில் உள்ளார். இந்தியா கூட்டணி (INDIA)சார்பில் பி. சுதர்சன் ரெட்டி (79), தெலங்கானாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியும் போட்யிட்டனர். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறு விறுப்பாக நடைபெற்றது.
மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆரம்ப முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் முன்னனியில் இருந்தார்.
மொத்தம் 767 உறுப்பினர்கள் குடியரசு துணை தலைவர் தேர்தலில் வாக்களித்தனர். இதில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அவர் 452 முதல் விருப்பு வாக்குகளைப் பெற்று கலக்கினார். இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளை பெற்றார். இதனையடுத்து 152 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியையடுத்து இந்திய குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) வேட்பாளரான சிபி ராதாகிருஷ்ணன் இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வேட்பாளரான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை அவர் தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம், சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் மற்றும் ஆர். வெங்கட்ராமனுக்கு பிறகு, இப்பதவியை வகிக்கும் மூன்றாவது தமிழராக சி.பி. ராதாகிருஷ்ணன் பதவியேற்கவுள்ளார்.
இதனிடையே தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாஜகவினர் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக கோவையில் விழாக்கோலம் பூண்டுள்ளது.