செகந்திராபாத்-விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்! ரயில்வே சொன்ன குட்நியூஸ்!
பயணிகளின் வசதிக்காக செகந்திராபாத்-விழுப்புரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
Railway
ஆசியாவிலேயே மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்காக இந்திய ரயில்வே திகழ்கிறது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொள்கின்றனர். பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகளையும் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
வசதியான பயணம், டிக்கெட் விலை குறைவு உள்ளிட்ட பல காரணங்களால் ரயில் பயணத்தையே பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். பண்டிகை, தொடர் விடுமுறை காலங்களில் இந்திய ரயில்வே கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பயன்பெறுகிண்றனர்.
Railway
இந்த நிலையில் பயணிகளின் வசதிக்காக, செகந்திராபாத்-விழுப்புரம்-செகந்திராபாத் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. - எண்.07601 செகந்திராபாத்-விழுப்புரம் சிறப்பு ரயில் இம்மாதம் 7 மற்றும் 14 ஆகிய தேதிகளில் செகந்திராபாத்தில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.05 மணிக்கு விழுப்புரத்தை சென்றடையும்.
2025 மகா கும்பமேளா: பக்தர்களுக்கு குட்நியூஸ் சொன்ன ரயில்வே துறை!
Railway
மறுமார்க்கத்தில் விழுப்புரம்-செகந்திராபாத் சிறப்பு ரயில் எண்.07602 விழுப்புரத்தில் இருந்து இம்மாதம் 8 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.40 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த ரயில் ஓங்கோல், காவாலி, நெல்லூர், ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை வழியாக விழுப்புரம் சென்றடைகிறது.
Indian Railway System
சார்மினாருக்கு கூடுதல் பொது பெட்டிகள்..
ஹைதராபாத்-தாம்பரம் இடையே இயங்கும் எண். 12750 சார்மினார் எக்ஸ்பிரஸ் (சார்மினார் எக்ஸ்பிரஸ்) இரண்டு ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகளுடன் இணைக்கப்படும் மற்றும் எண். இந்த பெட்டிகள் வரும் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை பயணிகளுக்கு கிடைக்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
IRCTC : இனி அனைத்தும் ஒரே செயலியில்! ரயில் பயணிகளுக்கு குட்நியூஸ்!