MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • டிராகன் விண்கலத்தில் பூமிக்குப் புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

டிராகன் விண்கலத்தில் பூமிக்குப் புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா நாளை (செவ்வாய்க்கிழமை) பூமிக்குத் திரும்ப உள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக உள்ளது.

1 Min read
Author : SG Balan
| Updated : Jul 14 2025, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Axiom/X

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, நாளை (செவ்வாய்க்கிழமை) பூமிக்குத் திரும்பத் தயாராகி வருகிறார். அவர் பயணிக்கும் ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து புறப்பட ஆயத்தமாகியுள்ளது. சுக்லா தனது சக விண்வெளி வீரர்களுடன் விண்கலத்திற்குள் பாதுகாப்பாக நுழைந்தவுடன், விண்கலத்தின் கதவு மூடப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Image Credit : X-@ISROSpaceflight

சுக்லாவும் அவரது குழுவினரும் விண்கலத்திற்குள் அமர்ந்த பின்னர், விண்வெளி நிலையத்தின் அழுத்தம் குறைக்கும் செயல்முறை (depressurisation process) தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயல்முறை பொதுவாக ஒரு மணிநேரம் நீடிக்கும். விண்கலம் விண்வெளி நிலையத்தில் இருந்து விடுவிக்கப்படுவதற்கு முன், ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா இரண்டும் வாக்கெடுப்பு நடத்தி இறுதி முடிவு அறிவிக்கப்படும். இந்திய நேரப்படி மாலை 4:30 மணியளவில் அதற்கான கட்டளை வழங்கப்படும்.

Related Articles

Related image1
Now Playing
சுபான்ஷி சுக்லா புதிய ஆராய்ச்சி விண்வெளியில் செரிமான மண்டலம் வேலை செய்யுமா?
Related image2
இது நம்பமுடியாத பயணம்! விண்வெளியில் சுபான்ஷு சுக்லாவின் பிரியாவிடை பேச்சு!
34
Image Credit : X-@mygovindia

கட்டளை வழங்கப்பட்டவுடன், டிராகன் விண்கலத்திற்கும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கும் இடையில் தரவுகளை வழங்கும் இணைப்புகள் (umbilicals) விடுவிக்கப்பட்டு, டிராகன் விண்கலம் அதன் பிடிப்பு கொக்கியை (capture hook) துண்டிக்கும். இது நடப்பதற்கு சுமார் நான்கு நிமிடங்கள் ஆகும். அதன் பிறகு, டிராகன் தனது உந்துவிசைகளை (thrusters) இயக்கத் தொடங்கும்.

44
Image Credit : ANI

ஆக்ஸியம் ஸ்பேஸ் (Axiom Space) நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்படி, குழுவினர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து சரியாக மாலை 4:35 மணிக்கு (இந்திய நேரம்) துண்டிக்கப்படுவார்கள். பிறகு, சுமார் 22.5 மணிநேரம் கழித்து, அதாவது செவ்வாய்க்கிழமை மாலை 3:01 மணிக்கு (இந்திய நேரம்), கலிஃபோர்னியா கடற்கரை அருகே விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே டிராகன் விண்கலம் 580 பவுண்டுகளுக்கும் அதிகமான பொருட்களை சுமந்து வரும் என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இதில் நாசாவின் உபகரணங்கள் மற்றும் திட்டத்தின்போது நடத்தப்பட்ட 60 க்கும் மேற்பட்ட சோதனைகளில் இருந்து பெறப்பட்ட மதிப்புமிக்க தரவுகளும் அடங்கும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
நாசா
விண்வெளி
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Railway Rules: பிளாட்பாரத்துல சுத்துனா ஜெயில்? ரயில்வேயின் 'டாப் சீக்ரெட்' விதிகள்.. பயணிகள் உஷார்!
Recommended image2
CM Vijay: இம்மாத இறுதியில் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்..! பிரதமருடன் முக்கிய சந்திப்பு..
Recommended image3
மொத்தமாக மாறும் விதிமுறை..? நோட்டமிடும் Income Tax.. ஒருவர் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் தெரியுமா?
Related Stories
Recommended image1
Now Playing
சுபான்ஷி சுக்லா புதிய ஆராய்ச்சி விண்வெளியில் செரிமான மண்டலம் வேலை செய்யுமா?
Recommended image2
இது நம்பமுடியாத பயணம்! விண்வெளியில் சுபான்ஷு சுக்லாவின் பிரியாவிடை பேச்சு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved