இனி ரயிலில் போர்வைகள், பெட்ஷீட்களின் சுத்தம் பற்றி கவலைப்பட வேண்டாம்.! ரயில்வே முக்கிய முடிவு!
இந்திய ரயில்வே பயணிகளின் சுகாதாரத்தை மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் போர்வைகள் UV ரோபோடிக் சுத்திகரிப்பு செய்யப்படும்.
Indian Railway About Bedsheet
பயணிகளின் வசதிக்கா இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதன்படி பயணிகளுக்கு பயணத்தை தூய்மையாகவும் வசதியாகவும் மாற்றுவதற்கு இந்திய ரயில்வே முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரயில்களில் வழங்கப்படும் கம்பளி மற்றும் போர்வைகளின் தரம் மற்றும் தூய்மை குறித்து பயணிகளிடையே அதிகரித்து வரும் கவலைகளுக்கு மத்தியில், UV ரோபோடிக் சுத்திகரிப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
Indian Railway About Bedsheet
அதன்படி, இனி ஒவ்வொரு பயணத்திற்குப் பிறகும் போர்வைகள் புற ஊதா சுத்திகரிப்பு செய்யப்படும். வடக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி ஹிமான்ஷு சேகர் உபாத்யாய் இதுகுறித்து பேசிய போது “ இப்போது ஜம்மு மற்றும் திப்ருகார் ராஜ்தானி ரயில்களில் உள்ள போர்வைகள் ஒவ்வொரு சுற்றுப் பயணத்திற்குப் பிறகும் UV ரோபோடிக் சுத்திகரிப்பு செயல்முறை மூலம் சுத்தம் செய்யப்படும்.போர்வைகளில் இருக்கும் பாக்டீரியா மற்றும் கிருமிகளின் அகற்றுவதில் இந்த செயல்முறை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
Indian Railway About Bedsheet
ரயில்களில் பயன்படுத்தப்படும் பெட்ஷீட், போர்வைகள், தலையணைகள் சுத்தம் செய்வது ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகு குறிப்பாக இயந்திர சலவைகளில் செய்யப்படுகிறது என்று ரயில்வே தெரிவித்துள்ளது. இந்த செயல்முறை சிசிடிவி கேமராக்கள் மூலம் முழுமையாக கண்காணிக்கப்படுகிறது. அதிகாரிகளால் வழக்கமான சோதனைகளும் செய்யப்படுகின்றன. பயணிகளுக்கு சுத்தம் செய்து சோதனை செய்த பின்னரே ரயிலில் போர்வைகள் வழங்கப்படுகிறது.” என்று தெரிவித்தார்.
Indian Railway About Bedsheet
ராஜ்தானி மற்றும் தேஜாஸ் ரயில்களில் முன்னோடி திட்டம்
ராஜ்தானி, தேஜாஸ் போன்ற சிறப்பு ரயில்களில் முன்னோடித் திட்டத்தின் கீழ் புதிய தரநிலைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சிறந்த துணி மற்றும் நீண்ட அகலமான தாள்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாற்றம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதோடு அவர்களின் திருப்தியையும் அதிகரிக்கும்.
Indian Railway About Bedsheet
போர்வைகளை சுத்தம் செய்வதில் பெரிய மாற்றம்
2010ஆம் ஆண்டுக்கு முன்பு 2-3 மாதங்களுக்கு ஒருமுறை போர்வைகளை சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வந்ததாக ரயில்வே தெரிவித்துள்ளது. தற்போது மாதம் இருமுறை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், நாப்தலீன் வேப்பர் ஹாட் ஏர் கிரிஸ்டலைசேஷன் தொழில்நுட்பம் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. போர்வைகளை சுத்தம் செய்வதற்கு இது ஒரு பயனுள்ள வழியாகும்.
Indian Railway About Bedsheet
பயணிகள் சிறந்த அனுபவத்தைப் பெறுவார்கள்
இந்த புதிய முயற்சியால், பயணிகள் முன்பை விட தூய்மையான மற்றும் வசதியான பயணத்தை அனுபவிப்பார்கள். ரயில்வேயின் இந்த நடவடிக்கை தூய்மையை உறுதி செய்வது மட்டுமின்றி பயணிகளின் திருப்தியையும் நம்பிக்கையையும் வலுப்படுத்தும்.