எலான் மஸ்க்குடன் பேசிய பிரதமர் மோடி! தொழில்நுட்ப ஒத்துழைப்பு பற்றி பேச்சுவார்த்தை!
பிரதமர் மோடி டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க்கைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் வாஷிங்டன் டிசியில் நேரில் சந்தித்தபோது விவாதிக்கப்பட்ட பல விஷயங்கள் குறித்து மீண்டும் விவாதித்ததாக பிரதமர் கூறியுள்ளார்.

Elon Musk Narendra Modi
மோடி - மஸ்க் பேச்சு:
பிரதமர் நரேந்திர மோடி டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் உடன் தொலைபேசியில் உரையாடிதாகத் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புத் துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் வாஷிங்டன் டிசியில் நேரில் சந்தித்தபோது விவாதிக்கப்பட்ட பல விஷயங்கள் கூறித்து மீண்டும் நினைவுகூர்ந்ததாகவும் பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்திருக்கிறார்.
Elon Musk Narendra Modi
இந்தியா - அமெரிக்கா:
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இந்தியா-அமெரிக்கா இணையும்போது உண்டாகும் மகத்தான ஆற்றலை பிரதமர் வலியுறுத்தினார். உலகளாவிய கண்டுபிடிப்புகளின் மையமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதில் இந்தியா தொடர்ச்சியாக ஆர்வம் காட்டிவருவதன் அடையாளமாக இந்த உரையாடல் அமைந்துள்ளது. இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் ஆலையைத் திறப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்துவரும் சூழலில் எலான் மஸ்க்கை மோடி தொடர்புகொண்டு பேசியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
14வது மகனுக்குப் பெயர் வைத்த எலான் மஸ்க்! தாய்க்குக் 15 மில்லியன் டாலர் பரிசு!
Elon Musk Narendra Modi
மோடியின் அமெரிக்கப் பயணம்:
பிப்ரவரி மாத தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பயணம் மேற்கொண்டிருந்தார். அதிபர் டொனால்ட் டிரம்புடனான இருதரப்புப் பேச்சுவார்த்தையை முன்னிட்டு அந்நாட்டுச் சென்ற மோடி எலான் மஸ்க்கையும் சந்தித்தார். அப்போது விண்வெளி, தொழில்நுட்பம், எரிசக்தி ஆகிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றுவதற்கு உள்ள வாய்ப்புகள் குறித்து எலான் மஸ்க்குடன் விவாதித்தார்.
"புதுமையான கண்டுபிடிப்புகள், விண்வெளி ஆய்வு, செயற்கை நுண்ணறிவு மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றில் இந்திய மற்றும் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடியும் எலான் மஸ்க்கும் விவாதித்தனர்" என்று வெளியுறவுத்துறை அறிக்கையில் கூறப்பட்டது.
Elon Musk Narendra Modi
பிரதமர் மோடி மகிழ்ச்சி:
பிரதமர் மோடியைச் சந்திக்க வந்த எலான் மஸ்க் தனது மூன்று குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் பிளேர் ஹவுஸுக்கு வந்தார். மஸ்க்கின் குடும்பத்தினருடனான உரையாடலைப் பற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, “எலான் மஸ்க்கின் குடும்பத்தினரைச் சந்தித்ததும், பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேசியதும் மகிழ்ச்சியாக இருந்தது!” எனத் தெரிவித்தார்.
ரகசிய வேலைகளில் இறங்கும் எலான் மஸ்க்; கடுப்பான டொனால்டு டிரம்ப்!