MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • 14வது மகனுக்குப் பெயர் வைத்த எலான் மஸ்க்! தாய்க்குக் 15 மில்லியன் டாலர் பரிசு!

14வது மகனுக்குப் பெயர் வைத்த எலான் மஸ்க்! தாய்க்குக் 15 மில்லியன் டாலர் பரிசு!

எலான் மஸ்க் தனது 14வது குழந்தைக்கு ரொமுலஸ் என்று பெயரிட்டு, தாய்க்கு 15 மில்லியன் டாலர் பரிசு வழங்கியுள்ளார். குழந்தைகளின் தாய்மார்களுடன் ரகசிய ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டு நிதியுதவி செய்வதாகவும் கூறப்படுகிறது.

2 Min read
Author : SG Balan
| Updated : Apr 17 2025, 04:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Elon Musk's 14th child

Elon Musk's 14th child

14வது குழந்தைக்கு ரொமுலஸ்:

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க் தனது 14வது குழந்தைக்கு ரொமுலஸ் என்று பெயர் வைத்துள்ளார். குழந்தையைப் பெற்றெடுத்த ஜப்பானியத் தாய்க்கு 15 மில்லியன் டாலர் பரிசும் கொடுத்திருக்கிறார்!

இதற்கு முன்பு 26 வயதான ஆஷ்லே செயிண்ட் கிளேர் செப்டம்பர் மாதம் மஸ்க்கின் 13வது குழந்தையைப் பெற்றெடுத்தார். மஸ்க் தனது குழந்தைகளின் தாய்மார்களுக்கு நிதியுதவிகள் செய்து, அவர்களே குழந்தையை வளர்க்க கடுமையான ரகசிய ஒப்பந்தங்கள் போட்டுக்கொள்கிறார் என்று கூறப்படுகிறது.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க்கிற்கு செயிண்ட் கிளேர், பாடகர் கிரிம்ஸ், நியூராலிங்க் நிர்வாகி ஷிவோன் ஜிலிஸ் மற்றும் முன்னாள் மனைவி ஜஸ்டின் மஸ்க் ஆகிய நான்கு பெண்களுடனான உறவில் குறைந்தது 14 குழந்தைகள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
Ashley St Clair

Ashley St Clair

விந்தணுக்களை அனுப்பிய எலான் மஸ்க்:

எலான் மஸ்கின் வாரிசுகள் மொத்தம் எத்தனை பேர் என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை. இது தவிர, ஜப்பானிய அதிகாரிகள் அவரை அணுகிய பிறகு, ஒரு உயர் பதவியில் இருக்கும் ஒரு ஜப்பானியப் பெண்ணுக்கு மஸ்க் தனது விந்தணுக்களை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மஸ்க்கின் குழந்தைகளைப் பெற்ற தாய்மார்களிடையே ஷிவோன் ஜிலிஸ் சிறப்பு அந்தஸ்து பெற்றவர் என்று விவரிக்கப்படுகிறார். அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் எலான் மஸ்கைச் சந்தித்துப் பேசினர். அப்போது, எலான் மஸ்க்புடன் ஜிலிஸ் மஸ்க்கும் உடன் இருந்தார்.

பிறப்புச் சான்றிதழில் மஸ்க்கின் பெயரை நீக்கி, அவர் தந்தை என்பதை வெளிப்படுத்தாமல் இருக்க தனக்கு 15 மில்லியன் டாலர் பணத்தை கிளேருக்குக் கொடுத்துள்ளார். மாதத்திற்கு 100,000 டாலர் நிதியுதவியாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.  கிளேர் குழுந்தை பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இதைப்பற்றி மஸ்க்கின் நெருங்கிய உதவியாளர் ஜாரெட் பிர்ச்சால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

33
Elon Musk's aide Jared Birchall

Elon Musk's aide Jared Birchall

ரகசியம் காக்க ஒப்பந்தம்:

ஆனால் கிளேர் எலான் மஸ்க்தான் தனது குழந்தைக்குத் தந்தை என்பதை ரகசியமாக வைத்திருக்க ஒப்புக்கொள்ளவில்லை, ஆனால் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் மட்டும் மஸ்க் பெயரைத் தவிர்க்க் முடிவுசெய்திருக்கிறார். பிப்ரவரியில் தங்கள் உறவைப் பற்றி அவர் பகிரங்கப்படுத்திய பிறகு, அவருக்கு அளிக்கப்பட்டு வந்த மாதாந்திர ஆதரவுத் தொகை 40,000 டாலராகக் குறைக்கப்பட்டது - பின்னர் மாதம் 20,000 டாலர் என மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

கிரிப்டோ செல்வாக்கு மிக்க டிஃப்பனி ஃபாங் போன்ற பிற பெண்களிடம் குழந்தைகளைப் பெறுவதற்கான சலுகைகளை மஸ்க் வழங்கியதாகவும் அறிக்கை கூறுகிறது. ஃபாங் இந்த செய்திகளைப் பொதுவில் பகிர்ந்த பிறகு, மஸ்க் அவரைப் பின்தொடர்வதை நிறுத்தியதாகக் கூறப்படுகிறது.

எலான் மஸ்க் தனது குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்கள் தனது கட்டுப்பாட்டில் இருக்க பணம் மற்றும் கடுமையான ரகசிய ஒப்பந்தங்களைப் போடுவதாக செயிண்ட் கிளேர் உட்பட பல பெண்கள் கூறுகின்றனர். அவரது உதவியாளர் ஜாரெட் பிர்ச் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஃபோர்ப்ஸ் பத்திரிகையின்படி, எலான் மஸ்க் $367.9 பில்லியன் நிகர சொத்து மதிப்புடன் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார். அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கீழ் அரசாங்க செயல்திறன் துறையின் தலைவராகவும், அமைச்சரவை ஆலோசகராகவும் உள்ளார்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
Elon Musk
டெஸ்லா கார்கள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Viral : வாக்குவாதம் செய்யத் தயக்கமா? உங்களுக்காக சண்டை போட ஆள் இருக்கு! கட்டணம் ரூ.2,600!
Recommended image2
Dubai Gold Road: உலகிலேயே முதல்முறையாக தங்கத்தால் ஒரு ரோடு.. நாமும் நடக்கலாம், எங்கே தெரியுமா?
Recommended image3
Baby With Thick Mustache: பிறந்த குழந்தைக்கு அடர்த்தியான மீசையா? இணையத்தை கலக்கும் ஈக்வடார் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved