- Home
- இந்தியா
- PM Kisan Rs 2000 : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. ரூ.2,000 உங்க அக்கவுண்டுக்கு வரப்போகுது! இதை பண்ணுங்க
PM Kisan Rs 2000 : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு.. ரூ.2,000 உங்க அக்கவுண்டுக்கு வரப்போகுது! இதை பண்ணுங்க
PM Kisan Rs 2000 : விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஒரு சிறிய தவறும் உங்கள் பணத்தை நிறுத்திவிடலாம். விவசாயிகள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விதிகள் வெளியாகியுள்ளன.

விவசாயிகள் கவனிக்க வேண்டிய தகவல்
நாடு முழுவதும் கோடிக்கணக்கான விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் பிஎம் கிசான் திட்டத்தின் 23வது தவணை குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. மத்திய அரசு செயல்படுத்தும் பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. தற்போது ஜூன் மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் 23வது தவணை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த 3 விஷயம் செய்யலனா பணம் இல்லை
முன்னதாக 22வது தவணை நிதி மார்ச் 13 அன்று வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 9 கோடிக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. ஒவ்வொரு தவணையிலும் ரூ.2,000 நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. விவசாய முதலீட்டை எளிதாக்கும் நோக்கில் 2018-19 ஆம் ஆண்டில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
விவசாயி திட்டம்
ஆனால் இந்த முறை, பழைய பயனாளிகளுக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த தவணைகளில் பணம் பெற்றிருந்தால் இந்த முறை தொகை கிடைக்கும் என்ற உத்தரவாதம் இல்லை. சில கட்டாய நடைமுறைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 23வது தவணை பணம் நிறுத்தப்படலாம் என அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.
பயனாளிகள் கவனிக்க வேண்டியவை
இந்த திட்டத்தில் பயனாளியாக இருக்க, சொந்த விவசாய நிலம் அவசியம். இருப்பினும் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் போன்ற நிபுணத்துவ நிபுணர்கள், அரசு ஊழியர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு ஓய்வூதியதாரர்கள் இந்த திட்டத்திற்கு தகுதியற்றவர்களாக கருதப்படுகின்றனர். ஒரே குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பயன் கிடைக்கும். 23வது தவணை பெற மூன்று முக்கிய பணிகள் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. முதலில் e-KYC சரிபார்ப்பு முடிக்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்ததாக நில ஆவணங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும். மேலும், வங்கி கணக்கில் DBT வசதி மற்றும் அடையாள அட்டை இணைப்பு செயல்பாட்டில் இருக்க வேண்டும்.
பிஎம் கிசான் உதவி
பிஎம் கிசான் பயனாளிகள் தங்களது பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் விவசாயிகள் கார்னர் பகுதியில் உள்ள பயனாளிகள் பட்டியல் மூலம் சரிபார்க்கலாம். மாநிலம், மாவட்டம் மற்றும் கிராம விவரங்கள் பதிவிட்டவுடன் தகவல் கிடைக்கும். விவசாயிகளுக்கு நிதி உதவியாக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில் சிறிய தவறுகளும் தொகை தாமதத்திற்கு காரணமாகலாம். எனவே, ஜூன் தவணை வெளியாகும் முன் மற்றும் கணக்கு விவரங்களை சரிபார்ப்பது அவசியம் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.

