1 முதல் 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு குட்நியூஸ்! பள்ளி வேலை நேரம் மாற்றம்!
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பள்ளிகளின் நேரத்தை மாற்றி அமைத்து மாநில பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும்.

Summer
நம் நாட்டில் கோடை காலம், தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலம், குளிர் காலம் என நான்கு வகை பருவகாலங்கள் நிலவுகின்றன. தென்மேற்கு பருவமழை, ஜூன் முதல் அக்டோபர் வரையில் நீடிக்கும். பின், வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதி வாரம் முதல் ஜனவரி 2ம் வாரம் வரை நிலவும். இதையடுத்து, பிப்ரவரி வரையிலும் குளிர்காலம் நிலவும். இதையடுத்து மார்ச் முதல் ஜூன் முதல் வாரம் வரை கோடை காலம் நிலவும்.
heatwave
இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அப்பாடா! மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
Odisha
இதனால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.
School Student
குறிப்பாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், வெயில் தாக்கத்தில் இருந்து பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக பள்ளி நேரத்தை ஒடிசா மாநில பள்ளிக் கல்வித்துறை மாற்றி அமைத்துள்ளது. அதாவது 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 6.30 மணி முதல் காலை 10.30 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: மக்களே தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! சரசரவென விலை குறைந்தது! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
school timing changed
அதேபோல் அனைத்து அங்கன்வாடி மையங்களும் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படுவதற்கு பதிலாக, காலை 7 மணி முதல் 9 மணி வரை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.