- Home
- இந்தியா
- Bus Accident:கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 10 பேர் பலி! 8 பேர் படுகாயம்!
Bus Accident:கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்! 10 பேர் பலி! 8 பேர் படுகாயம்!
ஒடிசாவில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்ததில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒடிசா மாநிலம் ராயகடா என்ற இடத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புவனேஸ்வர் நோக்கி அரசு பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அப்போது பெர்ஹாம்புரில் இருந்து வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து கண்ணிமைக்கு நேரத்தில் அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கும், மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் தனியார் பேருந்தில் வந்தவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் சொந்த ஊருக்கு திரும்பியபோது இந்த விபத்து நடைபெற்றதாக கூறப்படுகிறது. பேருந்து விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த கையோடு 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.