MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Aadhaar Ban: இனி 18 வயசுக்கு மேல யாருக்கும் ஆதார் கிடையாது! அதிரடி முடிவு எடுத்த அரசு!

Aadhaar Ban: இனி 18 வயசுக்கு மேல யாருக்கும் ஆதார் கிடையாது! அதிரடி முடிவு எடுத்த அரசு!

Aadhaar Ban: இனி 18 வயசுக்கு மேல யாருக்கும் ஆதார் கிடையாது என்று மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Jun 13 2026, 10:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
அசாமில் 18 வயசுக்கு மேல் ஆதார் கிடையாது
Image Credit : Asianet News

அசாமில் 18 வயசுக்கு மேல் ஆதார் கிடையாது

இந்தியாவில் ஆதார் கார்டு ஒரு முக்கியமான ஆவணமாகும். வங்கிக் கணக்கு தொடங்குவதில் இருந்து மொபைல் சிம் கார்டு வாங்குவது வரை எல்லாத்துக்கும் ஆதார் தேவை. இதுமட்டுமின்றி ஹோட்டல்களில் அறை எடுத்து தங்குவது என அனைத்துக்கும் ஆதார் அவசியமாகிறது. இந்த நிலையில், அசாமில் சட்டவிரோதமாகக் குடியேறுவதைத் தடுக்கும் நோக்கில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசு ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இனி புதிய ஆதார் அட்டை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
இந்த முடிவு ஏன்?
Image Credit : Facebook & Getty

இந்த முடிவு ஏன்?

சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் ஆதார் போன்ற முக்கிய ஆவணத்தைப் பெறுவதைத் தடுக்க, இந்த முடிவை அமைச்சரவை எடுத்துள்ளதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று தெரிவித்தார். அதாவது ஒருவருக்கு அத்தியாவசியத் தேவையின் அடிப்படையில் ஆதார் அட்டை தேவைப்பட்டால், மாவட்ட ஆட்சியர் மாநில அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். அதன் பிறகு, விண்ணப்பதாரர் தகுதியானவரா என்பதை அரசு தீர்மானிக்கும். சில மாவட்டங்களில் ஆதார் பதிவு 100 சதவீதத்தைத் தாண்டிவிட்டது. இப்படி கூடுதலாக ஆதார் அட்டை பெறுபவர்கள் யார் என்பதை நாங்கள் கண்டறிய வேண்டும் என முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

Related Articles

Related image1
New Aadhaar App: புதிய ஆதார் மொபைல் ஆப் அறிமுகம் – முக்கிய அம்சங்கள் என்னென்ன?
Related image2
இனி இந்த 5 விஷயங்களுக்கு ஆதார் செல்லாது.. UIDAI அதிரடி உத்தரவு.. கையில் இதை வச்சுக்கோங்க!
33
யாருக்கெல்லாம் ஆதார் வழங்கப்படும்?
Image Credit : UIDAI

யாருக்கெல்லாம் ஆதார் வழங்கப்படும்?

சட்டவிரோதமாக வங்கதேசத்தில் இருந்து யாரும் அசாமிற்குள் வந்து ஆதார் அட்டை பெற்றுவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிடிஐ செய்தி நிறுவனத்திடம் முதல்வர் தெரிவித்துள்ளார். தேயிலைத் தோட்ட சமூகத்தினர், பழங்குடியினர், பட்டியல் சாதியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அட்டை தொடர்ந்து வழங்கப்படும். ஆனால், ஏப்ரல் 1, 2027-க்குப் பிறகு இந்த சமூகத்தினருக்கும் 18 வயதுக்கு மேல் ஆதார் வழங்கப்படாது.

18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழக்கம் போல் ஆதார் அட்டை தொடர்ந்து வழங்கப்படும். கடந்த ஆண்டே, பெரியவர்களுக்கு ஆதார் வழங்குவதில் கடுமையான விதிகளைக் கொண்டு வர அசாம் அரசு திட்டமிட்டு வருவதாக ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆதார் அட்டை
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகையில் மெகா மோசடி.! 4.30 லட்சம் பயனாளர்கள் நீக்கம்.! கர்நாடக அரசு எடுத்த அதிரடி முடிவு.!
Recommended image2
Drunk Driving: குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா ஃபைன்... ஆனா எவ்வளவு குடிச்சா ஃபைன்? ரூல்ஸ் தெரியுமா?
Recommended image3
El Nino Impact: எல் நினோ எஃபெக்ட் தொடங்கியது! மழை குறைந்து வெப்பம் அதிகரிக்குமா?
Related Stories
Recommended image1
New Aadhaar App: புதிய ஆதார் மொபைல் ஆப் அறிமுகம் – முக்கிய அம்சங்கள் என்னென்ன?
Recommended image2
இனி இந்த 5 விஷயங்களுக்கு ஆதார் செல்லாது.. UIDAI அதிரடி உத்தரவு.. கையில் இதை வச்சுக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved