5,614 கி.மீ நெடுஞ்சாலைகள் அமைத்து NHAI புதிய சாதனை! இலக்கை விட அதிகம்!
2025 நிதியாண்டில் இந்தியா முழுவதும் 5,614 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய சாதனை படைத்துள்ளது.

NHAI set a new record constructing highways: ஒரு நாட்டின் முதுகெலும்பே தேசிய நெடுஞ்சாலைகள் தான். ஏனெனில் சாலைகள் நன்றாக இருந்தால் தான் அதிகளவு சரக்குகள் கொண்டு செல்லப்பட்டு பரிமாற்றம் செய்யப்படும். இதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்கும். இந்தியாவில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளது.
NHAI constructing national highways
NHAI சாதனை
இந்நிலையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த கடந்த நிதியாண்டில் 5,614 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2025 நிதியாண்டில் 5,150 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில் இப்போது அந்த இலக்கை விட அதிக கீமீ சாலைகளை அமைத்து NHAI சாதனை படைத்துள்ளது.
சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் முதல் இந்தியர்! யார் இந்த சுபான்ஷு சுக்லா?
NHAI New Record
மூலதனச் செலவு அதிகரிப்பு
மேலும், தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான 2024-25 நிதியாண்டில் அதன் மூலதனச் செலவு ரூ.240,000 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது வரை செலவு ரூ.250,000 கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக NHAI தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது. அரசாங்க பட்ஜெட் ஆதரவு மற்றும் NHAI-யின் சொந்த வளங்கள் இரண்டையும் சேர்த்து ஒரு நிதியாண்டில் NHAI-யால் செய்யப்பட்ட மிக உயர்ந்த மூலதனச் செலவினம் இதுவாகும்.
NHAI தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்த மூலதனச் செலவு 2023-24 நிதியாண்டில் 207,000 கோடியுடன் ஒப்பிடும்போது சுமார் 21 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும், 2022-23 நிதியாண்டில் 173,000 கோடியுடன் ஒப்பிடும்போது சுமார் 45 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளது.
TollGate Fees Hike
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
நெடுஞ்சாலைகளை மேம்படுத்த தேவையான நிதியை திரட்ட சுங்கச்சாவடி பரிமாற்றம் (TOT), உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை (InvIT) மற்றும் சுங்கப் பத்திரமயமாக்கல் போன்ற வழிமுறைகளை பயன்படுத்தி இருப்பதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கூறியுள்ளது. நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைப் பிரிவுகளில் NHAI சராசரியாக நான்கு முதல் ஐந்து சதவீதம் வரை சுங்கக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இது ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ.3,984 கோடியில் 3வது ஏவுதளம்! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!