அட கடவுளே! சம்பந்தியுடன் ஓட்டம் பிடித்த 43 வயது பெண்! இறுதியில் கணவர் செய்த செயல்!
உத்தரபிரதேசத்தில் 4 பிள்ளைகளின் தாய் தனது மகளின் மாமனாருடன் ஒட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.

illegal love
UP Women illegal love: கடந்த சில நாட்களுக்கு முன் மகளுக்கு 10 நாட்களுக்குள் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், வருங்கால மருமகனுடன் மாமியார் ஓடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் உத்தரபிரதேசத்தில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
illegal love
மகளின் சம்பந்தியுன் மம்தாவுக்கு பழக்கம்
உத்தரபிரதேச மாநிலம் பாடன் மாவட்டத்தை சேர்ந்தவர் சுனில் குமார். லாரி ஓட்டுநர். இவரது மனைவி மம்தா (43). இந்த தம்பதிக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். இதில் தனது மூத்த மகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு சைலேந்திரா (46) என்பவரின் மகனுடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு பிறகு மூத்த மகளின் மாமனாரும், சம்பந்தியுமான சைலேந்திராவுடன் மம்தாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.
illegal love
கள்ளக்காதல்
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. தனது கணவர் லாரி ஓட்டுநர் என்பதால் சுனில் குமார் மாதம் ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவார் என்பதால் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு சம்மந்தியை வீட்டுக்கு வரவழைப்பார். பின்னர் பிள்ளைகளை வேறு அறையில் தங்குமாறு கூறிவிட்டு சைலேந்திராவும், மம்தாவும் ஒரே அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர். கடந்த மூன்று அண்டுகளாக இருவருக்கும் தொடர்பு இருந்து வந்தது.
chennai police
மகளின் மாமனாருடன் தாய் ஓட்டம்
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக்கொண்டு மம்தா சம்பந்தியும், கள்ளக்காதலனுமான சைலேந்திராவுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பந்தியுடன் பெண் ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.