MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • எந்த VVIP ரயிலாக இருந்தாலும் இந்த ரயில் வரும் போது வழிவிட வேண்டும்!

எந்த VVIP ரயிலாக இருந்தாலும் இந்த ரயில் வரும் போது வழிவிட வேண்டும்!

இந்திய ரயில்வேயின் மிக முக்கியமான ரயில் ஒன்று உள்ளது. மற்ற அனைத்து ரயில்களும், விஐபி ரயில்கள் கூட, இந்த ரயிலுக்கு வழிவிட வேண்டும். அது எந்த ரயில் தெரியுமா?

2 Min read
Author : Ramya s
Published : Nov 14 2024, 08:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Most Special Train In India

Most Special Train In India

இந்திய ரயில்வே உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்களில் ஒன்றாகும். தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் மூலம் பயணிக்கின்றனர். ரயில் பயணிகளுக்கு இந்திய ரயில்வே பல்வேறு சலுகைகளையும், வசதிகளையும் செய்து வருகிறது.

மேலும் பண்டிகை, மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் பல சிறப்பு ரயில்களையும் இயக்கி வருகிறது. நாட்டில் ராஜதானி, துரந்தோ, சதாப்தி என பல வகை ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவின் மிகவும் சிறப்புமிக்க ரயில் எது என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Most Special Train In India

Most Special Train In India

ராஜதானி, துரந்தோ அல்லது ஸ்வர்ன் சதாப்தி என அனைத்து ரயில்களும் இந்த ரயிலுக்கு வழிவிட வேண்டும். அதாவது, விஐபி ரயிலாக இருந்தாலும் சரி, விவிஐபி ரயிலாக இருந்தாலும் சரி, இந்த ரயிலுக்கு வழிவிட வேண்டும். 'வந்தே பாரத்' என்று நீங்கள் நினைத்தால் அதுவும் தவறு. ஆம். இந்த ரயிலைக் கடந்து செல்வதற்காக 'வந்தே பாரத்' கூட நிறுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் இந்த ரயிலின் பெயர் என்ன? அது தான் இந்தியாவின் விபத்து நிவாரண ரயில்.

ரயில்களில உள்ள M1 பெட்டியில் என்ன ஸ்பெஷல் இருக்கு?

34
Most Special Train In India

Most Special Train In India

இந்தியாவின் விபத்து நிவாரண மருத்துவ ரயில்

நாட்டில் வேறு எந்த ரயிலுக்கும் வழிவிடாத ஒரே ரயிலுக்கு விபத்து நிவாரண மருத்துவ ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. தண்டவாளத்தில் ஓடும் போது, அது எந்த ரயிலாக இருந்தாலும், விபத்து நிவாரண ரயிலுக்கு வழிவிட வேண்டும். இந்தியாவில் எங்காவது ரயில் விபத்து ஏற்பட்டால், மருத்துவ வசதிகளை விரைவில் வழங்க இந்த ரயில் செயல்படுகிறது.

இந்த ரயிலில் நவீன கருவிகள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளன. மேலும், காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கும் வகையில், ரயிலில் டாக்டர்கள் மற்றும் துணை மருத்துவ பணியாளர்கள் அடங்கிய குழுவும் உள்ளது.

 

44
Most Special Train In India

Most Special Train In India

இந்த ரயில்கள் எங்கு நிறுத்தப்பட்டுள்ளன என்று உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். அவை இந்திய ரயில்வேயின் முக்கியமான யார்டுகள் மற்றும் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளன.. ரயில் விபத்து ஏற்பட்டால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்த ரயில் விபத்து நடந்த இடத்தை மிகக் குறுகிய நேரத்தில் சென்றடைகிறது. எனவே, இந்த ரயிலை விபத்து நடந்த இடத்திற்கு விரைவில் கொண்டு வர மற்ற ரயில்கள் நிறுத்தப்படுகின்றன.

RAC டிக்கெட் கிடைத்தாலும் வெயிட் லிஸ்டுக்கு மாறலாம்! காரணம் இதுதான்!

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Travel Hack: ₹500-க்கு கோவாவை சுத்தி பார்க்கலாம்! இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாடகைக்கு எடுங்க!
Recommended image2
Gold Price Hike: விண்ணை முட்டும் தங்கம் விலை.! இறக்குமதி வரி 15% உயர்வு! இனி தங்கம் வாங்க முடியுமா?
Recommended image3
Gold Price Hike: தங்கம், வெள்ளி வாங்குவோருக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு..! இறக்குமதி வரி 15% உயர்வு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved